குறள் பற்றி முதலில் எழுதிய மேற்குலக அறிஞர், பதினெட்டாம் நூற்றாண்டில் - அதாவது 1706-ஆம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு வந்த ப்ரோட்டஸ்டன்ட் போதகர் பார்த்தலோமியோ சீகன்பால்கு என்று தெரிகிறது. குறள் பற்றி எழுதியிருந்தாலும் சீகன்பால்கு ஜெர்மன் மொழியில் ஆக்கிய நூல் உலகநீதியே.
சீகன்பால்கு வந்து நான்காண்டுகளில் - அதாவது 1710-ஆம் ஆண்டில், இன்றைக்குச் சரியாக முன்னூறு ஆண்டு முன்பு - இத்தாலி நாட்டிலிருந்து சேசுசபைப் பாதிரியாக தென்னகம் வந்த பெஸ்கி எனும் வீரமாமுனிவரே, குறளின் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களை லத்தீன் மொழியில் ஆக்கியவர். இவற்றைச் செய்தபோது மூலம், மொழியாக்கம் என அடுத்தடுத்து எழுதிச் செய்திருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம்.
வீரமாமுனிவர் மறைந்து அரைநூற்றாண்டுக்காலத்தில் பிரிட்டிஷ் கும்பனியார் ஆட்சி தென்னகத்தில் வேரூன்றிவந்த நிலையில், வீரமாமுனிவரின் சுவடிகளைத் தேடி வாசித்தவர் பிரிட்டிஷ் அதிகாரி ஃப்ரான்ஸிஸ் உவைத்து எல்லீஸ். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பத்தாண்டுகளில் வீரமாமுனிவரின் தமிழ்-லத்தீன் சுவடியை வைத்து அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களை தமிழ்-ஆங்கில parallel text-ஆக ஆக்கியவர் இவரே. இதையொட்டி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜி.யு. போப்பும் குறளின் ஆங்கில ஆக்கத்தை parallel text-ஆகச் செய்திருக்கிறார். இவர்கள் பயன்படுத்திய வீரமாமுனிவரின் சுவடி இங்கே லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கிறது (சீகன்பால்கின் சுவடி கோப்பன்ஹேகன் அரச நூலகத்தில் உள்ளது).
பதினெட்டாம் நூற்றாண்டுக்காலத்தின் பிற்பகுதியில் தென்னகம் பிரிட்டிஷ்-ஃப்ரெஞ்சுக் கும்பினியார் இடையிலான போர்க்களமாகி விட்டது. அதே காலகட்டத்தில் ஃப்ரெஞ்சுப் படைவீரராக வந்த ஒருவர் குறளைத் தம்முடைய தாய்மொழியில் ஆக்கியிருக்கிறார். இதை அறிந்திருந்தும் இவர் எழுதிய நீண்ட புத்தகம் என் கையில் கிட்டாமல் இருந்தது. அண்மையில் கிட்டிய இந்தப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தேன். அதில் இருப்பவை, 22 குறட்பாக்களின் ஃப்ரெஞ்சு ஆக்கம் மாத்திரமே.
மேற்கண்ட ஃப்ரெஞ்சுப் படைவீரர், தாம் 1769-ஆம் ஆண்டில் எழுதிய மேற்கண்ட புத்தகத்தில் வீரமாமுனிவரின் இந்தச்சுவடி பாரீஸ் நூலகத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் (இந்தச் சுவடியை அண்மையில் மதுரை அருட்தந்தை வி. மி. ஞானப்பிரகாசம் பதிப்பித்திருக்கிறார்). வீரமாமுனிவர் குறள் இடப்பக்கம் லத்தீன் ஆக்கம் வலப்பக்கம் என, parallel text-ஆகச் செய்திருந்தாலும் ஃப்ரெஞ்சுப் படைவீரரின் புத்தகத்தில் ஃப்ரெஞ்சு ஆக்கம் மாத்திரமே உள்ளது. 1769-ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் அச்சான இந்தப் புத்தகத்தில் தமிழ் எழுத்துருக்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
தெ லா ப்ளோட் என்ற இந்த ஃப்ரெஞ்சுப் படைவீரர், ப்ரான்ஸிலிருந்து கிளம்பி ப்ரேசில், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் எனக் கப்பலில் சுற்றித் தென்னகம் வருகிறார். புதுச்சேரி, சென்னப்பட்டினம், கடலூர், திருவரங்கம் ஆகிய இடங்களில் பிரிட்டிஷ் படையுடன் மோதிப் பிறகு கைதாகிறார். இவர் புதுச்சேரி வாசத்தின்போதோ, சிறைவாசத்தின்போதோ குறள் பற்றி அறிந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
வீரமாமுனிவரின் லத்தீன் ஆக்கத்தைக் கொண்டே இந்த ஃப்ரெஞ்சு ஆக்கம் வந்திருப்பதாகத் தெரிகிறது என்றாலும் அதை ஒட்டியும் வெட்டியும் சில ஆக்கங்கள் உள்ளன என்றே படுகிறது. 22 குறட்பாக்களின் ஃப்ரெஞ்சு ஆக்கத்தை, வீரமாமுனிவரின் லத்தீன் ஆக்கம் மற்றும் மூலப்பாக்கள், அவற்றின் எண்களுடன் இங்கே தருகிறேன்.
சென்ற வாரம் பணி நிமித்தம் பெர்லின் நகர் சென்றிருந்தபோதே அங்கு ஒரு நூலகத்தில் இந்தப் புத்தகம் கிட்டியது. குறள் நூல் கைவசம் இல்லாத ஓரிரவில் ஹோட்டல் அறை இரவில் சுமார் ஒரு மணி நேரத்தில் ஃப்ரெஞ்சு ஆக்கத்துக்கு ஏற்ற மூலப்பாக்களைக் கணிணியில் தேடிக் கண்டறிந்தது அலாதி அனுபவம்!
Maximes tirées du livre nommé Coral
1 Dieu est éternel & le commencement ou principe de toutes choses, comme la lettre A est la première de toutes les autres.
Beschi: Literæ omnes principium habent literam A: Mundus principium habet numen primordiale.
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
2 Toutes les sciences ne font que vanité à ceux qui n'adorent pas Dieu.
Beschi: Plurima didicisse quid, amice, proderit, nisi verearis bonos ejus pedes, qui puram scientiam habet; i.e. sc. ab omni errore defæcatum.
2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
3 Les bonnes œuvres font les plus précieuses richesses des hommes.
Beschi: Incorruptibiles et sublimes divitiæ sunt scientiæ, non verb aurum et cætera quæ quis possidet.
400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
4 Heureux ceux auxquels les cinq sens de nature sont fournis.
Beschi: Nulla ex scientiis dubitat concupiscere ut omnium maximum decus religiosorum a suo instituto non aberrantium.
21 உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து
5 Le corps est fortifié par les nerfs, l’âme doit l'être par l'amitié.
Beschi: Sapientes dicent viani, seu causam, cur humanus spiritus corpori amicabiliter uniatur esse amorem, quo inter se juuguntur [Sensus est, quod sicuti in natural! amore quo corpus et spiritus se invicem prosequuntur, ita amicabiliter uniuntur, ut corpus spiritum et spiritus corpus foveat, ita qui amorem habent debent sibi invicein præsto esse].
73 அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு
6 On est obligé de nourrir fon prochain avec le même soin que ton nourrit ton fils.
Beschi: Quare quis posthabitis silvis in urbem sedem figendo, et fortunæ bona quærendo et custodiendo conjugium exercet, nisi causa præstandi favorem hospitibus, eos affectuose tractando?
81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
7 Celui qui est humble & qui se sert de paroles douces & honnêtes n'a pas besoin de parure; sa conduite lui en sert.
Beschi: Esse humilem et dulcia loquentem, verum est cujusvis ornamentum: cætera omnia præter hoc non sunt ornamenta.
95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
8 L'aumône du riz (le pain chez eux) est sans contredit la plus estimée, mais la douceur de la parole la surpasse.
Beschi: Si valeas esse dulciuin verborum locutor, læto cum vultu, id tibi melius erit quam læto animo tua largiri.
92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்
9 Un homme à qui, dans le tems de ton affliction, on rend un service quelque petit qu'il soit, fut-il comparable à un grain de moutarde, doit le regarder grand comme un palmier.
Beschi: Quamvis milii grano parem favorem præstiteris, qui illius fructum noscunt, ilium palmæ arbori parem judicabunt.
104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்
10 Une femme qui conduit la dépense de sa maison suivant ses revenus, donne bonne réputation à son mari.
Beschi: Uxor debet habere virtutem conjugio debitam, et debet viam sui conjugis calcare; i.e. suo conjugi in omnibus obedire.
51 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
11 Quoique l’origine des femmes soit le péché, si elles se comportent avec pureté & chasteté, elles seront mises au rang des Dieux.
Beschi: Si mulier obtinuerit talem, conjugem qui dici possit, quod earn obtinuerit (quod non fit, nisi ilia fidem servet suo conjugi) obtinebit magnam gloriam in mundo ubi Deæ regnant.
58 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
12 Il n'y a pas de plus grand pécheur que celui qui délire la femme de son prochain.
Beschi: Qui peccandi facilitate allectus in aliena uxore honestatis limites transilierit, nunquam moriturum (i.e. nunquam desiturum) vituperium referet.
145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி
13 Le son des instruments de musique paroît beau à ceux qui n'ont pas entendu le gazouillement de leurs enfants.
Beschi: Fistulam et citharam dulces vocabunt, qui non audierunt suorum infantium imperfecta verba; i.e. infantes balbutientes audire, parentibus dulcius esse, quam fistulæ and citharæ sonum.
66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
14 Comme la terre supporte ceux qui la foulent aux pieds & lui déchirent le sein en labourant, de même devons-nous rendre le bien pour le mal.
Beschi: Sufferre eos, qui te despiciunt, instar terræ, quæ sustinet eos, qui earn calcant, præstans est virtus.
151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
15 Il est grand de pardonner des offenses, il est plus grand de rendre le bien pour le mal.
Beschi: Tibi malum facientes plectendi optimus modus est, beneficium ipsis faciendo pudore affectos eos dimittere.
314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்
16 L'ornement des Grands est d'imiter la juste balance en jugeant les autres.
Beschi: Ad instar libræ, quæ æqualitatem faciendo quod justum est librat, conformando se rationi in unam ex partibus non propendere, sapientium ornamentum est.
118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி
17 Celui qui ne vit que pour engraisser ton corps, ne peut pas aimer son prochain.
Beschi: Qui ut sua caro pinguescat, alienas carnes comedit quinam eum viventibus lenitatem et clementiam exercere dicetur?
251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
18 La pénitence est une bonne œuvre, lorsqu’en la faisant, on fait obéir les cinq sens, autrement ce n'est qu’hypocrisie.
Beschi: Iis qui supradictam pœnitentiam possident, prœter meritum, quod illis obvenit, pœnitentiaæ quoque virtus oritur; qui vero supradictam pœnitentiam non habent infructuose in pœnitentiæ virtute acquirenda laborant.
262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது
19 Ce ne font pas les lampes qui doivent éclairer les Grands, c'est la vérité pure (se naïve qui leur doit servir de lumière).
Beschi: Non omnis splendor proprius est sapientis splendor; proprius ejus splendor est in oris integritate splendere.
299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
20 C’est une chose énorme que de témoigner sa colère à un supérieur, mais l'énormité est plus grande de la faire éclater fur un inférieur.
Beschi: Si irasci caveas in eum, qui id meretur, dici poteris iræ frænator nam in eum, qui id non meretur, quid si irascaris, quid si non irascaris?
301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்
21 Nous ne sommes pas certains de vivre un seul jour, cela ne nous empêche pas de songer à mille choses.
Beschi: Qui nee sciunt an per unum iustans victuri sint, innumera mente moliuntur futuro tenipore agenda.
337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல
22 Les maux que nous ferons aux autres, nous poursuivront, ainsi que notre ombre fuit notre corps.
Beschi: Peccatoris ruina ab eo inseparabilis est, non secus ac umbra a corpore.
208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று
தென்னகத்தில் சிறைவாசம் முடிந்தவுடன் தெ லா ஃப்ளோட் சீனா, பசிஃபிக் மாக்கடல், தென்னமெரிக்கா வழியாக மீண்டும் ஐரோப்பாவை அடைகிறார். இப்படிச் சிறையில் பட்டு விரிநீர் வியனுலகும் சுற்றிய ஃப்ரெஞ்சுக்காரர் ஒருவர், குறளை அடையாளம் கண்டிருப்பதைக் கண்டு வியந்தேன்!
புத்தக விபரம்: M. de la Flotte, Essais Historiques sur l'Inde précédés d'un journal de voyage et d'une description géographique de la Côte de la Coramandel, chez Herissant le Fils, Paris, 1769
படம் - லண்டன் கீழைக்கலாச்சார, ஆஃப்ரிக்கப் பள்ளியில் oxidized வள்ளுவர் மடியில் பிரிட்டிஷ் சிறார்
18.10.10
படைவீரர் ஃப்ரெஞ்சில் செய்த குறளாக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment