சிறுசெம்பூவே!
சிறு நரகச் சுடரே!
தீங்கும் இழைப்பாயோ நீயும்?
மின்மின்னும் உன்னைத்
தொடவியலேன் நானும்
தீ நாக்கில் விரலிட்டேன்
எரியவில்லை ஏதும்.
உன்னைக் கண்கண்டே
அயர்ந்தேன் நானும்.
மின்மின்னித் தெளிவாய்
சுருங்கும் நீயும்
சட்டெனக் குருதி வடியும்
செவ்வாயின் இதழோ!
சிறு செவ்வுடையோ!
நானும் தொடவியலா
புகையும் தானுண்டோ.
மயக்குமுன் புகையெங்கே?
குமட்டுமுன் கோதுமெங்கே?
என்னில்
குருதியும் வடியுமோ!
உறக்கமும் வருமோ!
என் வாயும்
இத்தகு வடுவை
மணக்குமோ!
உன் மதுவும்
இக்
கண்ணாடிக் கோதெனும்
என்னில் கசிந்தே
மங்கியடங்கும்
எனின்
நிறமற்று
நிறமற்று.
Little poppies, little hell flames,
Do you do no harm ?
You flicker. I cannot touch you.
I put my hands among the flames. Nothing burns.
And it exhausts me to watch you
Flickering like that, wrinkly and clear red, like the skin of a mouth.
A mouth just bloodied.
Little bloody skirts!
There are fumes that I cannot touch.
Where are your opiates, your nauseous capsules ?
If I could bleed, or sleep!
If my mouth could marry a hurt like that!
Or your liquors seep to me, in this glass capsule,
Dulling and stilling.
But colorless. Colorless.
--- Sylvia Plath, Poppies in July, 20 July 1962.
சுமார் மூன்று மாத காலம் கழிந்து மீண்டும்.
இங்கிலாந்தில் தேர்தல்-புதிய ஆட்சிக்கோலம், இலங்கையில் மனித உரிமைகள் நிலை மேலும் மோசம், தமிழகத்தில் செம்மொழிக் காலம் எனச் சென்ற மூன்று மாதம். எனக்கோ, இந்தியாவில் பணி நிமித்தம் டில்லியில் வாசம், கஷ்மீர் மற்றும் வடகிழ்க்குப் பகுதிகளில் பயணம், பிறகு கேரளத்தில் ஒரு வாரம் வாசம், அங்கே துணைவியாரின் விரிவுரைகள் எனக் கழிந்த காலம்.
பதிவுகள் எழுதாமலும் வாசிக்காமலும் இருப்பதில் தனி ஆசுவாசம். அவ்வப்போது தேவைப்படும். ஆனால் புத்தகங்கள் வாசிக்காமல் இல்லை... சென்னையில் ஒருசில நாட்கள் மட்டும் வாசம். ஒருசில நண்பர்களை மட்டும் சந்திக்க முடிந்த வாசம்.
பிறகு கடந்த வாரம் லண்டன் திரும்பி, ஸில்வியா ப்ளாத்தின் மேற்கண்ட கவிதையைத் தமிழாக்கியதில், நான் எடுத்திருப்பது பன்மையை.
18.7.10
மூன்று மாத காலம் கழிந்து மீண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துகள்:
Post a Comment