20.4.10

வேனில் வைகுறுப் பிரிவிசை - ஸில்வியா ப்ளாத்

ஆடிபல கொள் அம்பலமதில்
பசிய முகத்திரை தொங்க,
நாளக் கோபுரத்தில்
மரச்சாறும் ஏற,
குருதியுள் வைரக்கல்
பாவிசைக்க,
நீர்ச்சாந்தில் மெய்வசப்படும்
உலகிதை வணங்க

புனிதக்குருவியோ
படபடத்துப் பல்லிசைக்க,
பாலெனும் வைகறையில்
கனாக்காண்போரும் எழும்ப,
போப்பாண்டகை முன்
கர்தினாலவர் குழுபோல்
கதிரவன் முன்
தூலிப் மலர்களும்
பணிந்தெழ

பனித்துளி விண்மீன்பல
தெளித்துப் பெயர்சூட்டி
வெளிர்சிகப்புக் குழலடிகொள்
புறாப் பலவும் செல்ல,
சாலமோன்தன் உருவகமாய்
இளமஞ்சள் பூப்பூக்க
என் காதலும் யானும்
புல்மாலையிட்டுச் செல்ல

மீண்டும் ஓர் மாயத்தில்
இழந்தோம் எமை
இள நம்பியாய் நங்கையாய்.

-- Sylvia Plath, April Aubade, 1955.

0 கருத்துகள்: