தொழில்நுட்பம் என்பதை, மேற்கத்திய செவ்வியல் மரபுப் பார்வையிலிருந்து சைபர்நெடிக் கண்ணோட்டம் வரை எப்படிக் கருதுகின்றன? உடலின் நீட்சியாக. மனிதப்பிறவியின் பரிணாம வளர்ச்சித்திறன் என்பது இயற்கைக்குச் சவால்விட்டு அதைத் தன்-மாதிரியாக வெற்றிகரமாக மாற்றியமைப்பதே தொழில்நுட்பம் என்று இந்தப்பார்வைகள் வகுக்கின்றன. எந்திரங்கள் மற்றும் மொழி குறித்த இதே கருவித்தனமான தரிசனத்தை, கார்ல் மார்க்ஸிலிருந்து மார்ஷல் மெக்லூஹன் வரை காணலாம். அதாவது, இயற்கையின் நீட்சியை மனித உயிருடலாக மாறும் விதிகொண்டதாக, உயிர்-உடல் இடை ஊடகம் ஏற்படுத்தும் இசைவாக, இவற்றைக் காணலாம். இந்த அறிவார்த்தக் கண்ணோட்டங்களில் உடல் என்பது ஆக ஓர் ஊடகம், அவ்வளவுதான்.
க்ராஷ் நாவலிலோ (1), இந்த நிலைமை தலைகீழாகும். இந்த நாவல், ஒருவித பரோக் கண்ணோட்டம் கொண்டதாக, பேரழிவுத் தரிசனம் கொண்டதாக இருப்பதால். இது சாத்தியம். இங்கே உடல் என்பது மரணமாகக் கட்டவிழ வருவதே தொழில்நுட்பம்; உறுப்பை வெட்டுவதும் பிய்த்தெறிவதும் நடந்து, ஊடகம் என்ற நிலையிலிருந்து மாறிவிடுவது, உடல். தன்னிலையின் ஒருமை அழிந்துவிடுவதாக, இதைச் சுட்டுவது மனோவியல்-அலசல். ஆக, இங்கிருப்பது உடலுக்கு நடந்த குறியீட்டுக் காயங்கள் பற்றிய வெடித்துச்சிதறும் தரிசனம். தொழில்நுட்பத்தின் மீறலுடன், அதன் வன்முறையுடன் ஒன்றிக் கலந்துவிட்ட உடல். அதில் காணும் கீறலும் வெட்டும் அவற்றின் தழும்புத்திசுவும் அதன் வாசல்களும் இன்ன பிறவுமென அதன் கொடூர அறுவைச்சிகிச்சையாக நீளவனவற்றில் காமக்காயங்களும் உடற்பரவசமும் அடக்கமல்லவா...
பணியிடத்தில் அடிமையாக உழைப்பில் ஈடுபடும் கேலிச்சித்திரமான உடலிலோ உறுப்புமில்லை, பரவசமுமில்லை, அதில் இருப்பன, கீறலும் வெட்டும் தழும்பும்தான்; தன்னையும் பிறிதென எதையும் குறிக்காது எல்லையற்று ஒளிர்ந்து, குறியாகும் பாலியல்நிலையின் கீழியங்கும் கீறலும் வெட்டும் தழும்பும்தான்:
"நடிகையின் உடல் வெட்டுண்டு அவள் அடையும் சாவு, அவள்மீது மோதும் கார்த் தொழில்நுட்பம் அவளுக்குச் சூடும் முடி; அந்தச் சாவு, அவளுடைய தனித்தனி உறுப்பும் முகப்பரப்பும் சைகையும் பளபளக்கும் தோலுமென யாவற்றையும் கொண்டாடும் செயல். அந்தப்பெண் சாவென மாறியதன் ஏதோவொரு பிம்பத்தை, விபத்தின் அருகிருந்து கண்டோர், தம்முடன் சுமந்துசெல்வர். அவள் பட்ட காயங்களை, அவள் பாலியல்நிலையுடன் காரின் கறார்த் தொழில்நுட்பத்தை இணைக்கும் காயங்களைச் சுமந்துசெல்வர். அவர் ஒவ்வொருவரும் இவன் கற்பனையுடன் இணைவர். இவனுடைய விந்துப்பரப்பின் மிருதுவான ஜவ்வுபும் விறைத்த குறியின் சுருள்திசுவும் இவன் காரெனும் ஊடகம் மோதிச்சிதறடித்த அவளுடைய காயங்கள் வரை சென்று, இவன் மேலே ஓட்ட ஓட்ட, பலப்பல சமிக்ஞைகளின், அசைவுகளின் கலவையாக அவற்றைத் தொடும். இவன் உதடுகளோ குருதிசிந்தும் அந்தக் காமிரா வாசல்கள் வரை செல்ல, இவன் இமைகள் அவள் சுட்டுவிரலினின்றும் வெளித்தொங்கும் தசைநாரில் சாய, இவனுடைய விறைத்த குறியின் என்பொத்த பரப்பு அவள் அல்குலின் கிழிந்த பக்கச்சுவர்களில் தேய்க்கும்.
அந்த நடிகையும் அவளைக் காண்போரும் ஏங்கிய அந்த இணைவை, அவளுடைய இறுதி-இணைவை இப்படியாகச் சாத்தியமாக்கியது, அந்தக் கார் விபத்து."
க்ராஷ் நாவல் எழுதிய ஜே. ஜி. பல்லார்ட் மறைந்து ஓராண்டாகும் நிலையில் அஞ்சலியாக. ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம். Jean Baudrillard, Simulacres et simulation, Paris, 1974, p 111-19.
குறிப்பு
1. J.G. Ballard, Crash, 1973.
21.4.10
ஜே.. ஜி. பல்லார்டின் க்ராஷ் நாவல் பற்றி போத்ரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துகள்:
தமிழில் புதிய சிந்தனைகளின் தோற்றுவாய்களை உருவாக்கும் நோக்கிலான மொழிபெயர்ப்பு. நன்றிகள்.
Cybernetics என்பதன் தமிழ்ப்படுத்தல் என்பது எவ்வாறிருக்கும் என என்னால் ஊகிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் விக்சனரியில் இட்டிருந்தேன். யாரும் பதிலளிக்கவில்லை.
control and communication in the animal and machine என்பதாக நோர்பர்ட் வைனரின் Cybernetics புத்தகத்தின் துணைத்தலைப்பு என வாசித்திருக்கிறேன். யோசிக்கலாம்.
அது என்ன நன்றிகள்! ஒருமை போதுமே..
Post a Comment