மீண்டும் என் இந்தியப்பயணம்... ஆம். ஈழத்தின் சோகத்தின் பரிமாணங்கள் பலவாக விரிவடைந்துவரும் நிலையில் என் இந்தியப்பயணம் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் மத்திய- மற்றும் கிழக்கு-மாநிலங்களில் பயணம் என்பதால் அடிக்கடி இணைய வசதி கிடையாது. செய்திகளை மாத்திரம் அறிந்துகொள்ள முடியும். தொடர்ந்து பதிவு எழுத முடியாத நிலை... அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் சென்னை வந்துசேரும் வரை நிலைமை இப்படித்தான் இருக்கும்.
இங்கே புலம்பெயர்ந்துவாழும் ஈழத் தமிழ்மக்களின் பேரணிகள், போராட்டங்களில் நான் முன்பெல்லாம் கண்ட பெருமிதம் தற்போது சோகமாகியிருக்கிறது. இங்கே லண்டனில் சென்ற நூற்றாண்டின் பல கட்டங்களில் ஜவஹர்லால் நேருவும் பாபாசாகேப் அம்பேத்கரும் தங்கியிருந்த அதே ஹார்ரோ பகுதியில் வசிக்கும் ஒரு தமிழ்க்குடும்பத்தைச் சார்ந்த முருகதாசன் என்ற இளைஞர் சென்ற வாரம் ஜெனிவா நகர் சென்று அங்கே ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகங்கள் முன்பிருந்த சதுக்கத்தில் வைத்துத் தீக்குளித்திருக்கிறார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. இன்னொரு இளைஞர், இங்கே பிரிட்டிஷ் பிரதமரின் டௌனிங் தெரு பத்தாம் எண் வீட்டுக்குப் போகும் வழியில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். யாழ் நகரைச் சேர்ந்த இன்னொரு இளைஞர், மலேசியாவில் இப்படிச் செய்து உயிர்நீத்திருக்கிறார்... இந்த சோகத்தையெல்லாம் ஏற்க மனமேயில்லை...
இந்த நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடாதவை என்றாலும் இவற்றுக்கான பின்புலத்தைப் பார்க்கும்போது தமிழ்ச்சமுதாயம் ஓர் ஆதிக்கால சமுதாயமாக, சடங்காக்கம் கொண்ட சமுதாயமாக ஒரு தளத்தில் இயங்குகிறது. தமிழ்ச்சமுதாயம் மட்டுமல்ல, தென்னகத்தில் இந்தச் சடங்காக்கம் பல பரிமாணங்களில் நீடிக்கிறது என்றும் கூறலாம். இப்படித் தினசரிவாழ்வில் நடப்பவையான சடங்குகள், திடீரென வரலாற்றுப்பரிமாணம் எய்துகின்றன. அப்போது சடங்கும் வன்முறையும் அறிவுடனோ, உணர்வுடனோ இணையவல்லவை, அப்படி இணையும்போது இவை கொலை, தற்கொலை என்ற பரிமாணங்களைப் பெறுகின்றன... அதேநேரம், அறிவுஜீவிகளின் வாழ்க்கையில், குறிப்பாக cosmopolitan அறிவுஜீவிகளின் வாழ்க்கையில், சடங்காக்கம் என்பது மிகக்குறைவு என்று தோன்றுகிறது.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ச்சமுதாயத்தில் பலருடனும் உரையாடும் அரிய வாய்ப்பைப் பெற்றவனாக இருக்கிறேன். தவிர இந்தச்சமுதாயத்தில் பலரை இந்தியாவில் இருந்தபோதே அறிந்தும் இருக்கிறேன். இவர்களில் பெரும்பாலோர் இப்போது நடக்கும் இலங்கைப்போரை இந்திய அரசு தடுக்கவேண்டிய பொறுப்பை ஏற்காமல் மாறாக மறைமுகமாக இலங்கை அரசை ஊக்குவிக்கிறதே என்ற பெரும் கோபத்தில், ஆற்றாமையில் இருப்பதை உணர்கிறேன். தமிழ்நாட்டைத் தவிர வேறெங்கும் தங்களைப் பற்றி யாரும் அக்கறையுடன் பேசவில்லையே என்ற வருத்தம் பெருகியிருப்பதையும் காண்கிறேன். கைவிடப்பெற்ற நிலையில் இயங்கும் அவர்கள் மனத்தில் இந்திய அரசு பற்றிய கோலம் வேகமாக மாறிவருவது நிதர்சனம். இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது...
உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தில் நடப்பதைக் காணும்போது, ஹெகல் கூறியதுபோல வரலாறு நம்மை ஏமாற்றிவிடும் சாத்தியங்களே அதிகம். இப்படி விளிம்பில் நிற்கும்போது வரலாற்றை ஓசையுடன் நிர்ணயித்த சிலர் சட்டென்று மறைவது முன்பும் நடந்திருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். வீழும் கடவுளர் போல அவர்.. ஆனால் அவர் வீழ்வதும் சப்தமின்றி. Not a whimper.
அடுத்த பதிவு வர சில நாட்களாகலாம். அதுவரை வாசிக்க திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் வலைத்தளத்தில் வாசிக்க நிறையப் பதிவுகள் உண்டு. குறிப்பாக, இந்த ஃபிப்ரவரி மாதம் முழுதும் தற்கொலை, மரணம் குறித்த கவிதைகள், கட்டுரைகள் நிறைய..
மீண்டும் சந்திக்கலாம்.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
23.2.09
வரலாற்றின் ஓசையும் மௌனமும்
20.2.09
ஈழம் - நோம் சாம்ஸ்கிக்கு நம் பதில்
இலங்கையில் நடக்கும் போர் பற்றி நோம் சோம்ஸ்கி கூறியவற்றுக்கு பதில்
நண்பர்கள் யாவர்க்கும்
ஈழப்போரில் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் சொல்லொணாத் துயர் நம் ஒவ்வொருவரையும் மனத்தின் அடியாழத்தில் தாக்கியிருக்கிறது.
உலகில் எங்கு தேசிய இனங்கள், வறிய நாடுகள் தங்கள் உரிமைக்குரலை எழுப்பி அதற்காக ஒடுக்கப்பட்டாலும் வல்லரசுகள் சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பும் வரிசையில் இன்று முக்கியமானவர் நோம் சாம்ஸ்கி. தவிர, உலகின் பெயர்பெற்ற மொழியியல்-அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் இருப்பவர்.
சாம்ஸ்கி, உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களை ஆதரித்து எழுதுபவர், அமேரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். செயல்பாட்டுக்கு அஞ்சாத அறிவுஜீ்வி. கிழக்குத் திமூர் தொடங்கி காஸாப்பகுதி வரை தொடர்ந்து போராட்டங்களைக் கவனித்து, தம்முடைய கருத்துகளை அறிவுலகம் முன்பு வைத்து, அரசுகளின் கொள்கைகளை அம்பலப்படுத்தி அவற்றை மாற்ற முனைபவர்.
இவர், இலங்கையிலிருந்து வெளிவரும் ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகைக்குத் தொலைபேசிவழி பேட்டியளித்திருக்கிறார். அந்தப்பேட்டி கண்ட எரிக் பெய்லி என்பவர், சாதுர்யமாக, தம்முடைய இனவாதச்சார்புக்கு சாம்ஸ்கியைப் பயன்படுத்த முனைந்திருக்கிறார். சாம்ஸ்கியின் பதில்களை வாசிக்கும்போது அவர் இதை முழுமையாக உணர்ந்திருப்பதாகக் கூற முடியவில்லை!
சாம்ஸ்கியின் பேட்டியை கீழ்க்கண்ட இணைய தளங்களில் வாசிக்கலாம்:
Z-net
Sri Lanka Guardian
Countercurrents
பேட்டிகண்டவரின் நோக்கத்தை சாம்ஸ்கிக்கு அறிவுறுத்தவும் இலங்கைப்போர் தொடர்பாக ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவர் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடும் வந்திருக்கிறது நம் பதில். திணை இசை சமிக்ஞையில் நடந்த உரையாடலை ஒட்டிப் பலரின் கூட்டுமுயற்சியில் உருவாகியிருப்பது இந்த பதில்:
Response to Professor Noam Chomsky on his recent comments on the ongoing war in Sri Lanka
சாம்ஸ்கி, தமிழுக்கு அந்நியர் அல்லர். புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த மொழியியல்-அறிஞர் என்ற நிலையில் தமிழறிந்த மாணவர்களைப் பெற்றவர். மறைந்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்கள் மேற்படிப்புக்காக சாம்ஸ்கியிடம் சென்று மொழியியல் கற்றிருக்கின்றனர். ஆக, சாம்ஸ்கி, தமிழின் நீண்ட மொழியியல்-மரபு பற்றி அறிந்தவர். தவிர, அமெரிக்க அரசின் போர்வெறியைக் கண்டிக்கும் சாம்ஸ்கியின் பேட்டிகள், கட்டுரைகள்
தமிழாக்கம் செய்யப்பெற்றிருக்கின்றன. சாம்ஸ்கி, இந்தியாவுக்கு அந்நியரல்லர். அமெரிக்க ராணுவம் தலைமைதாங்கி நடத்திய போரைக் கண்டித்து சென்னையில் உரையாற்றியிருப்பவர்... இந்த நிலையில், ஈழம் பற்றிய பல்வேறு பரிமாணங்களை அவர் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கான சிறு முயற்சியாக உருவானதே இந்த பதில்.
ஈழம் குறித்து நமக்குள் பல்வேறு அரசியல்-மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால் ஈழம் பற்றி உருவாக்கப்படும் கருத்துப்பரவலில், அதன் இன்றைய உண்மை நிலவரத்தை உலகுக்குச் சொல்வதில், நாம் அனைவர்க்கும் குறைந்தபட்சப் பொறுப்புண்டு. அந்தப்பொறுப்பின் அடிப்படையில் வந்திருக்கும் இந்தப்பதில் - இதோ உங்கள் பார்வைக்கும். ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பதிலுக்கு, இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இணையத்தில் எழுதும் நண்பர்கள் என உங்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று நம்முடைய கூட்டுக்குரலாக வைப்பதே நம் நோக்கம். விரைவில் சாம்ஸ்கியின் பேட்டி, பதில் இரண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுவிடும்.
நீங்கள் உடன் செய்யவேண்டியவை:
1. ஒரேஒரு மின்-அஞ்சல் எழுத வேண்டும். அவ்வளவுதான். அதன் subject பகுதியில் I agree with this response என SUBJECT என எழுதி, response2chomsky@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
2. மின்-அஞ்சலில் உங்களைப்பற்றி - துறை, பணியாற்றும் களம் (அதாவது எழுத்தாளர், அரசியல் களப்பணியாளர் என்பது போல) - ஒரு சிறுகுறிப்பையும் எழுதுங்கள். இது அறிக்கையை அதிகக்கவனம் பெறச்செய்யும்.
2. சாம்ஸ்கி-யின் பேட்டியை, அதற்கான பதிலை முழுமையாக வாசித்த பின் உங்கள் ஒப்புதலை அனுப்புங்கள்.
3. வாய்ப்புள்ள நண்பர்கள் தங்களுக்கு அறிமுகமான பிற நண்பர்கள் மற்றும் ஈழப்பிரச்னையில் அக்கறை உள்ளவர்களிடம் இந்த நிலைப்பாட்டை விளக்கி ஒரே அச்சுப்பிரதியில் கையெழுத்து பெற்று, கையெழுத்திடும் நண்பர்கள் பற்றிய சிறுகுறிப்புடன்,
அதனை ஸ்கான் செய்து அனுப்பி வையுங்கள்.
4. வரும் திங்கள் 23 பிப்ரவரி, நேரம் 0630 GMT or 1230 IST or 0100 US Eastern Standard Time-க்குள் நீங்கள் உங்கள் கையெழுத்து மின்-அஞ்சலும் நண்பர்களிடம் கையெழுத்துப் பெற்ற அச்சுப்பிரதியின் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கமும் அனுப்பிவையுங்கள்.
இவற்றைத் தொகுத்து சாம்ஸ்கிக்கு அனுப்பிவைத்துவிட்டு உங்களுக்கும் நண்பர்கள் தெரியப்படுத்துவார்கள்.
response2chomsky@gmail.com -க்காக
நாகார்ஜுனன்
இதே அறிக்கையை ஜமாலன், பெருந்தேவி ஆகியோரின் வலைப்பக்கத்திலும் வாசிக்கலாம்.
19.2.09
Response to Noam Chomsky’s comments on the ongoing war in Sri Lanka
The following joint letter is being sent to Professor Noam Chomsky, one of the world's leading anti-war intellectuals and linguists, following his recent interview on Sri Lanka And American Affairs, by Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey, Sri Lanka Guardian, 12 February 2009.
Professor Chomsky's interview can be read in the following sites:
Z-net
Sri Lanka Guardian
Countercurrents
1. If you agree with the response drafted below, please do send an e-mail to the address response2chomsky@gmail.com writing as Subject I agree with this response and stating your name, profession/pursuit (writer, journalist, academic, human rights activist etc.,).
2. Please read both the interview and this response in full before sending your e-mail. A full discussion can be found in my earlier blog entries on the ongoing war this month. Hence, I am disallowing any further debate in this blog entry till the response is sent to Professor Chomsky.
3. Please send your e-mail before Monday 23 February 0630 GMT or 1230 IST or 0100 US Eastern Standard Time.
4. A number of persons have already signed the response. All the names of the signatories are being consolidated and sent to Professor Chomsky on Monday itself. Late signatories are likely to be consolidated only if a second list is there.
5. So sign early and don't be left out..
Response to Noam Chomsky’s comments on the ongoing war in Sri Lanka
The interview, as can be seen below, sidesteps the crucial issue of suffering of the Tamil people during the war in Wanni. Hence, the following response has been circulated by friends after a thorough discussion to focus on this issue and urging him to have a relook at his own interview
We (the undersigned), who have immense respect for Professor Noam Chomsky’s work for peace on a global scale, are nevertheless dismayed by his recent comments on the ongoing war in Sri Lanka, made in a telephonic interview to a military analyst working for a journal known to be close to the Sri Lankan government (1).
The interviewer describes Professor Chomsky as a “a self-described anarchist… probably most famous for his strong stances in support of suffering peoples, such as those in Palestine and Somalia” and hopes to “apply his years of experience and insight to Sri Lanka to help the nation make the transition from a house divided to a united and peaceful country.”
Ignoring loss of lives
The interviewer and, more unfortunately, Professor Chomsky clearly sidestep the key issue of the suffering of the ordinary Tamil people in the Wanni region facing the artillery and aerial onslaughts of the Sri Lankan armed forces in its drive against the Tamil Tiger guerrillas fighting for a separate Tamil State.
Professor Chomsky does state, right at the outset of the interview, that “I don't feel that I have a profound enough knowledge of the details to offer a confident opinion”, but “it is clear that.. the military aspect of the conflict seems to be coming to an end.” But the interview totally ignores that this war is increasingly fought away from the eyes of the world, with enormous cost of lives.
A war without witnesses
Professor Chomsky should have been aware that the Sri Lankan government, on 16 September 2008, ordered all international relief organizations out of the Wanni region which was under the control of the Tamil Tiger guerrillas. The Sri Lankan armed forces have repeatedly charged the Tamil Tiger guerrillas, probably numbering around 5,000, of holding around 150,000 to 200,000 civilians at ransom in an ever-shrinking patch, now around 50 sq. km in the coastal Mullaitivu district; something denied by the Tamil Tiger guerrillas.
No journalist, domestic or foreign, is allowed to go beyond Vavuniya town to independently verify information emanating from the battlefields; all journalists travelling to these areas are embedded with the armed forces; unofficial censorship on news from the front including those of casualties of armed forces has been in force in Sri Lanka. One Colombo-based journalist who tried to verify such information, Chris Morris of the British Broadcasting Corporation (BBC), received an open threat from Sri Lanka’s Defence Secretary, Gothabaya Rajapakse, who also happens to be the President’s brother and a US citizen, that he would be chased from Sri Lanka. In a few days, Mr. Morris left the country. (2)
Enduring suffering
Reports from the battlefields nevertheless indicate that more than 1,000 civilians, all of whom ordinary Tamil people, have been killed; a far higher number of people injured, as the Sri Lankan armed forces have shelled homes, roads, makeshift hospitals and even homes for the aged and bombed civilians, which if proved, could amount to war crimes. The suffering endured by the people is in addition to the lack of food, shelter, water, transport, essential drugs and medical care. Some of the targets lay in designated safe zones by the Sri Lankan armed forces where people had taken shelter. The International Red Cross alone has a thin presence of medical personnel in the region and they have recently managed to ship 1,150 injured persons to Trincomalee port for emergency medical treatment.
The armed sources estimate that around 25,000 people have made it from the battlefields to the areas now fully controlled by the armed forces; we understand that they are being held in several makeshift detention camps after a screening process. Some reports say the Tamil Tigers have attacked civilians fleeing the war. Very few independent journalists or political leaders have met with those who had fled the battlefields or had been evacuated from there (3). We also learn that plans are afoot to detain the fleeing population a period of three years in five “model villages”, which is in gross violation of international norms for taking care of internally displaced persons (4).
World aids the war
More importantly, the Sri Lankan governmentconducts this war with various levels of military assistance from governments around the world - the United States, the United Kingdom, some European nations, India, Pakistan, China and Iran. Thus, the Sri Lankan government is emboldened to ignore calls from international humanitarian agencies including those of the United Nations, to ensure safety of civilians caught in war; it has also ignored calls from prominent human rights organizations including the Amnesty International and Human Rights Watch, for a truce and a humanitarian corridor to provide relief for the suffering people; the only exception so far has been the ships which have evacuated 1,150 injured persons to Trincomalee.
Procuring consent for war
We can well understand the interviewer’s motive in suppressing the above information. But we wonder why Professor Chomsky, having been eloquent on the US administration and media’s attempts to manufacture consent for war efforts in Afghanistan and Iraq, fails to question this (Ironically, the interviewer later asks Professor Chomsky about such strategies of the US administration!). Professor Chomsky appears to be unaware of the Sri Lankan government’s tactics of intimidating and bulldozing sections of the media which have refused to be part of the machinery manufacturing consent for this war. Several journalists who have questioned the cost of this war, in terms of lives of civilians and soldiers which are unreported or deliberately underreported, have faced intimidation and even murder.
Indeed, the most well-known case has been that of Lasantha Wickramatunga, editor of the Sunday Leader, a prominent critic of the government who was gunned down last month in Colombo while he was on his way to work (5). Following his murder, at least five journalists who have criticised the Sri Lankan government have fled the country so far (6). Earlier this month, the BBC World Service suspended the flow of its Sinhala and Tamil language services to the state-owned Sri Lanka Broadcasting Corporation after the latter censored selective programmes since November last (7). These indicate that Sri Lanka continues to be one of the most dangerous places for journalists; paramilitary organizations widely perceived to be supported by the authorities stand accused of suppressing media and killing journalists, something which the Tamil Tigers earlier stood accused of (8).
No to truce, yes to war
The interviewer continues to attempt to procure Professor Chomsky’s consent for the Sri Lankan government’s stand of ignoring the demands for a truce and resumption of peace talks with the Tamil Tiger guerrillas. He advocates a bitter fight to the end and asks Professor Chomsky: “Might it be that more lives will be saved if conflicts are allowed to see themselves out and decisive military victories and defeats are allowed to be determined instead of stopping a war before it can be really resolved?” Professor Chomsky’s reply to this, advocating a peaceful resolution of the conflict, is most welcome (9).
The interviewer is keen to ask Professor Chomsky about the fate of the Tamil Tiger guerrillas, whether those charged with atrocities and war crimes should be tried in tribunals; however, when he deals with those committed by the Sri Lankan armed forces, he slips in the word “people”: “what do you think should be the fate of the tens of thousands of people who have fought with the LTTE (Tamil tigers) over the decades, including lower level soldiers all the way up to leading officers?” The interviewer, as seen above, does not even acknowledge the suffering of the Tamil people in the ongoing war, tries to equate members of the armed forces who are fighting on behalf of a majoritarian government, with “people”, revealing a clear bias.
Federalism denied
At the political level, the interviewer tries to lead Professor Chomsky to the point that “it is in the best interests of the island to remain as one independent nation, or one united nation, rather.” Professor Chomsky, while replying to this issue, puts forth a “federal arrangement,” listing the Basque, Catalina, Wales and Scotland questions, all in Europe. Strangely, he does not cite the more intractable Irish national question. It is also important to point out that for both Basque and Catalonia regions of Spain, federal systems were reached after a prolonged civil war which also was part of the Second World War. These issues continue to be raised in some manner. Thus, Europe appears to have arrived at this “federal arrangement” after two world wars, but the recent Balkan experience belies this as well.
Professor Chomsky does not cite the post-USSR experience where countries were able to secede without much violence. Also, more crucially, Professor Chomsky does not discuss longstanding similar issues in Asia and Africa, much of which are fallouts from the colonial era and have been characterised by violence. He also does not cite the fact that colonial powers divided regions and incited discourses based on rivalry, identity and ethnicity.
Knowledge is must
As for Sri Lanka, Professor Chomsky says “without a really deep knowledge of these matters would be just too presumptuous for an outsider to offer opinions.” Nevertheless, it will not be difficult for him to recognize that:
• Sri Lanka’s majoritarian political establishment remained averse to any federal arrangement, provoking the Tamil youth to take up arms in the seventies; thus, when the democratic rights of the Tamil people have been violated by successive governments, a violent form of resistance grew.
• Sri Lanka continues to have a unitary constitution giving preferential treatment to the majority in terms of ethnicity and religion (Sinhala-Buddhism) and its cavalier treatment of the minorities has a long history;
• time and again, Sri Lanka’s major political parties have missed opportunities to amend the constitution towards a secular, federal framework and failed to ensure equal rights to minorities and nationalities in the country.
• Sri Lanka has long failed to punish those responsible for carrying out attacks and pogroms against the Tamil minorities; its independent institutions including the judiciary have shown no signs of ensuring justice for the victims of such attacks. The armed forces and the police continue to be majoritarian in their constitution and outlook.
• the Sri Lankan government appears wanting to force its current solution framework of provincial councils, under the 13th amendment, on a population which has suffered war, forced internal displacement, detention in camps, displacement to several countries including India (The Tamil chief minister of the newly-formed eastern provincial council, a former guerrilla leader, is already out complaining that he does not even have powers to appoint clerks and schoolteachers (10)). And it is not at all clear whether, in the long run, this will satisfy Tamil political demands.
Peace with honour
We wish to remind Professor Chomsky that it that it is necessary to go further than depending on information received from media establishments in Sri Lanka and India which have not risen to the occasion to cover this war independently and courageously. We also urge him to independently check all information, including all that we have said above, and get fully equipped to make any further comments on the ongoing war in Sri Lanka.
Given the above background and context, it is necessary to be sensitive to the suffering of a minority population during their struggle for their legitimate civil and political rights towards a solution which genuinely satisfies them. The ordinary Tamil people of Wanni are facing the despair of a brutal war of aggression unleashed by a majoritarian government aided by governments across the world. What they seek is peace with honour. And we urge Professor Chomsky to recognize this.
References
1. Professor Chomsky on Sri Lanka And American Affairs, Interview by Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey, Sri Lanka Guardian, 12 February 2009.
2. Paranjoy Guha Thakurta, Sri Lanka: government targets media under civil war cover, Inter Press Service, 9 February 2009. For more on authorities’ bid to suppress information, see below.
3. One journalist, Emily Wax in Vavuniya town met with fleeing refugees who were critical of the Tamil Tigers and praised the Sri Lankan armed forces. It was also evident that these people were scared and dependent on the mercy of the armed forces after the interviewer departs from the scene. See: Sri Lanka Debates Fate of War Refugees in Government Camps, The Washington Post, 15 February 2009; In Sri Lanka, Tales Of Jungle Terror: Civilians Fleeing War Describe Forbidding Terrain, The Washington Post, 13 February 2009.
4. Jeremy Page, Barbed wire villages raise fears of refugee concentration camps, The Times UK, 14 February 2009. International humanitarian and human rights organizations have already protested against this and have taken this up with governments which have promised aid to Sri Lanka.
5. Amnesty International, Outspoken Journalist Killed in Sri Lanka, 9 January 2009. This was followed by an attack on a private television channel.
6. Melani Manel Perera, Sri Lanka government behind murder of journalist, Speronews, 21 January 2009. Also, BBC services rebroadcast suspended, Journalists at risk in Sri Lanka: BBC
7. In its Press Freedom Index for 2008, Reporters sans Frontiers ranked Sri Lanka in 165th place out of a total of 173 countries. Earlier this week, Reporters sans Frontiers expressed revulsion at the death of a Tamil journalist, Satyamoorthy, in the ongoing bombardment as a “war crime.”
8. Professor Chomsky states: “There's a terrible burden of proof to bear for those who would advise violence as a solution, and I think the resort to violence has almost always been harmful, almost bitterly so, so I think the first assumption should be that international peacekeepers and diplomacy would be a far preferred outcome and only if it is simply impossible to execute should the situation be allowed to deteriorate into violence, which is usually very harmful for everyone.”
9. Professor Chomsky goes on to caution the interviewer that war crimes are usually committed by both sides and that all of them need to be investigated if a tribunal were to sit on judgment; instead, he recommends that the society decide on the issue of amnesty and suggests a truth or reconciliation commission without punitive powers on the lines of South Africa, El Salvador or Guatemala. Professor Chomsky’s recommendation is a welcome step which can be part of a peaceful resolution.
10. Ravi Nessman, Sri Lanka war near end, but ethnic tension remains, Associated Press, 5 February 2009.
இலங்கைக்கு ராணுவ உதவியை இந்தியா நிறுத்த வேண்டும் - சி்றிதுங்க ஜயசூரியா
இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் சிக்கிப் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ்மக்களைக் காக்கும் நோக்கில் இலங்கைக்கான மறைமுக ராணுவ உதவியை முதலில் இந்திய அரசு நிறுத்தி, அமைதித்தீர்வுக்கான வழியை நோக்கி உழைக்க வேண்டும் என்று இலங்கை ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறினார்.
2005 இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்ற ஜயசூரிய, தமிழகம் மற்றும் கேரளத்தில் உரையாற்றிவிட்டு, இன்று மாலை டில்லியில் சிவில் உரிமை அமைப்புகள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசும்போது இதைக் கூறியிருக்கிறார். இந்தியா மறைமுக தளவாட உதவியை இலங்கை ராணுவத்துக்கு அளித்து வருவது வருந்தத்தக்க செயல், மாறாக அமைதி நோக்கியல்லவா இந்தியா உழைக்க வேண்டும் என்றார் ஜயசூரிய.
சுமார் இரண்டரை லட்சம் தமிழ்மக்கள் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் இடையில் நடக்கும் போரில் சிக்கியிருக்கிறார்கள், இலங்கை ராணுவம் முழுத்தாக்குதலைத் தொடுத்தால் இன்னும் பயங்கரப் படுகொலை நடந்துவிடும், இந்திய அரசு சும்மா பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் என்றார் ஜயசூரிய.
போர்ப்பகுதியிலிருந்து தப்பிவரும் தமிழ்மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்துச் சோதனை செய்வதாக இலங்கை அரசு வகுத்திருக்கும் திட்ட்ங்கள் மோசமானவை, போர்-அவலத்தால் இடம் பெயர்ந்து அவதிப்படும் மக்களை இப்படி நடத்தப் பன்னாட்டுச்சட்டங்கள் இடம்தரா. தவிர, இலங்கை ராணுவம், ஒரு கெரில்லா ராணுவம் போலச் செயல்படுகிறது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லிக்கொண்டு அதே வழிகளில் செல்கிறது என்று குற்றம் சாட்டினார் ஜயசூரிய.
தென்னாசிய மனித உரிமை மன்றத்தின் செயலாளர் தபன் போஸ் உரையாற்றும்போது இலங்கையில் சிவில் சமுதாயம் தகர்ந்து நொறுங்குகிறது, பத்திரிகைக்காரர்கள் படுகொலை, மருத்துவமனைகள் மீது குண்டுமழை, சாதாரண மக்கள் படுகொலை, ஜனநாயக மறுப்பு என்று நிலைமை விபரீதமாகி வருகிறது என்றார்,
இது தமிழ்மக்களின் பிரச்னை மட்டுமல்ல. விரிவான மனித உரிமைகள் பிரச்னை, நாமனைவரும் இந்த அவலத்தை நிறுத்தித் தீர்வுகாண உழைக்க முன்வரவேண்டும் என்ற தபன் போஸ், இந்திய அரசு இலங்கை அரசுக்கு உடந்தையாக இயங்குகிறது, ராணுவத்துக்கு மறைமுக தளவாட உதவி செய்கிறது, தமிழ்மக்களின் ரத்தம் நேரடியாக, மறைமுகமாக இநதியாவின் கைகளில் கறையாகப் படிந்துவிட்டது எனக் குற்றம் சாட்டினார்.
விக்தோர் ஹ்யூகோ வாழ்விலே சில முறை...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான என்.கெ. கிருஷ்ணன் அவர்களின் சுயசரிதை இப்போது தோழர் எல்.ஜி. கீதானந்தன் தமிழாக்கத்தில் வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. இதுபற்றி எழுதியதற்கு ஜெயமோகனுக்கு நன்றி.
இனிதினிது.. - ஜெயமோகன்
சகாவு-தோழர் என்.கெ. கிருஷ்ணன், திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா பக்கத்தில் நடவரம்பு என்ற ஊரில் வாழ்ந்த நடுத்தரவர்க்க பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். என் அத்திம்பேருக்கு (அத்தையின் கணவருக்கு) உறவினர் என்ற முறையில் அவரை என் சிறுபிராயத்தில் கண்டிருக்கிறேன். என் அத்தை-குடும்பத்தார் திருச்சூரில் வசித்தவர்கள் என்பதால் விடுமுறைக்கு அங்கே சென்றபோதே முதலில் பார்த்தேன். லண்டன் சென்று படித்து, யாவற்றையும் உதறி இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று கம்யூனிஸ்ட்டானவர் என்ற பிரமிப்பு இருந்தது. சென்னையிலும் ஓரிரு குடும்ப நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். ஒருமுறை அவரைப் பார்த்தபோது என் கையில் இருந்தது விக்தோர் ஹூகோவின் நாவல் - abridged version. அப்போது எனக்குச் சுமார் பதினான்கு வயதிருக்கலாம். ஆங்கிலத்தில் நிறைய மதிப்பெண் வாங்கியதற்கான பரிசு. "இதையா, படிக்கிறாயா" என்று என்னிடம் திரும்பத்திரும்பக் கேட்டு "சுருக்கத்தோடு திருப்தி அடையாதே, முழுநாவலைப் படி" என்றார்.
நான்கைந்தாண்டுகளில் எல்லாம் மாறின. இளைஞனானேன். என் ஆசிரியர்கள் அனைவரும் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள். வைதீகப்பின்னணியிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக விலகிவந்தேன். தமிழ் மற்றும் இடதுசாரி லயிப்பு ஏற்பட்டது. அந்தக்காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடி-நிலையை ஆதரித்தது. அதை எதிர்க்க வேண்டும் என்று நினைத்த எனக்கோ சோஷலிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்புகள் ஏற்பட்டன. மாவோயிசம் மேல் லயிப்பும் வந்தது. நெருக்கடி-நிலையை எதிர்த்து சிலபல வேலைகளைச் செய்ததால் உளவுத்துறையினர் வீடுதேடி வந்துவிட்டார்கள். சில நாள் தலைமறைவாகலாமா என்று யோசித்த நிலையில் தேர்தல் அறிவிப்பும் வந்தது. தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸை ஆதரித்துத் தோல்விகண்டது.
புதிய ஜனதா ஆட்சி வந்த மாதங்களில் நானும் நண்பர்கள் சிலரும் ஒருவாரம் டில்லி சென்றோம். என் முதல் டில்லிப்பயணம் அது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், இ.எம்.எஸ். எல்லோரையும் நேரில் கண்டோம். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட பிர்லா இல்லக் காம்பவுண்டிலும் ஜனதாக்கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களிலும் உறங்கினோம். கையிலிருந்த காசு தீர்ந்துவிட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் போனோம். அப்போது அந்தக்கட்சி யாவற்றையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்த தலைவர்கள், என்.கெ. கிருஷ்ணன் மற்றும் பி.கெ. வாசுதேவன் நாயர். சென்னையிலிருந்து வருகிறோம், நெருக்கடி-நிலையை எதிர்த்த இளைஞர்கள் என்றோம். இறுக்கமான சூழ்நிலை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படியில்லை. எங்களை மனதார வரவேற்றார்கள்.
எங்களுடன் அரைமணி பேசுவதாக ஆரம்பத்து நிறைய நேரம் ஆகிவிட்டது. நாங்கள் அவ்வப்போது கோபத்துடன் கூறியதைப் பொறுமையாக இருவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களில் ஒருவர் கேரளத்தைச் சார்ந்தவர். நெருக்கடி-நிலை காலத்தில் கோழிக்கோடு பிராந்தியப் பொறியியல் கல்லூரி மாணவர் ராஜனின் கொலை தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் நீதிமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகச் சாட்சியம் கூறியதால் முதல்வர் பதவியிலிருந்து விலகிய தருணம் அது, படுகொலை நடந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதமேனன் முதல்வராக இருந்தபோது. கருணாகரன் உள்துறை-அமைச்சராக இருந்தவர், அவரே நிழல்-முதல்வர். என்றாலும் நெருககடிநிலைக் கொடூரங்களை நியாயப்படுத்தியதற்கான அவப்பெயர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துவிட்டது.
இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. பலமுறை தலைமுறை வாழ்க்கையை அனுபவித்த என்.கெ., பி.கெ.வி. இருவரின் அரசியல் அனுபவத்தின் தீவிரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நாங்கள் பெற்றிருக்கவில்லை - ஆனால் நாங்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டார்கள்.. தேநீர் அருந்தினோம் எல்லோரும்... விடைபெறும்போது நான் என்.கே. அவர்களிடம் முன்பு உறவுரீதியாகச் சந்தித்ததை ஒரு நிமிஷம் கூறினேன். ஆச்சரியப்பட்டுப்போனார். "அன்னிக்கு விக்தோர் ஹூகோ படித்த பையனா இது!." பி.கெ.வி.-யிடம் சொல்லிச்சொல்லிச் சிரித்தார்.
அடுத்த ஆண்டே பி.கெ.வி. கேரள முதல்வராகிவிட்டார். ஆனால் ஓராண்டுதான் முதல்வராக இருந்தார். பிறகு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈ.கெ. நாயனார் முதல்வரானார்.
தொண்ணூறுகளின் இடையில் சில மாதங்கள் என்னை டில்லிக்கு மாற்றிவிட்டார்கள். பத்திரிகைப்பணியை எப்போதுமே சுவாரசியமாக்கிக்கொள்ள முடியும். "கம்யூனிசம் தோற்றுவிட்டது" என்று பலரும் கூறிக்கொண்டிருந்த அந்தக்காலத்தில் முதிர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதை, அவர்கள் பற்றி வாசிப்பதை நிறையச் செய்தேன். இப்படித்தான் என்.கெ. அவர்களின் Testament of Faith சுயசரிதையை வாசித்தேன். புத்தகம் தந்த கட்சிக்காரர்களிடம் அவர் என் உறவினர் என்பதைக் கூறவில்லை. அதைப் படித்து அந்த வாழ்க்கையில் அப்படியே லயித்துவிட்டேன்! நெருக்கடி-நிலையை விடாப்பிடியாகக் கட்சிக்குள் ஆதரித்தவர் தோழர் என்.கே. எனக்குப் புதிராகவே இருந்தது. அதே சமயம் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சிகள் கவிழும் போது இந்தப்புத்தகம் வெளிவந்ததில் தனித்த சோகம் உண்டு என்றும் நினைத்தேன்.
சென்னை திரும்பிய பிறகு என்.கெ.-வின் துணைவியார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்தலைவர் பார்வதி கிருஷ்ணனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிட்டியது. அதே கட்சியின் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகப் பணியேற்றிருந்த காலம். இந்திரஜித் குப்தாவும் பார்வதி கிருஷ்ணனும் பிரிட்டனில் படித்த காலத்திலிருநது அறிந்தவர்கள் என்று நினைக்கிறேன். இந்திரஜித் குப்தா சென்னை வந்திருந்தார். அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லத்தில் வைத்து நடந்தது சந்திப்பு. தியாகராயநகர் பாலன் இல்லம், பெயர்பெற்ற நாட்டியக்கலைஞர் உதயசங்கர் (சித்தார் கலைஞர் ரவிசங்கரின் மூத்த சகோதரர்) கட்சிக்கு அளித்த வீடு. அப்போது அதை விரிவுபடுத்திக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டுக்கு முன்பு வந்தது பற்றி பார்வதி கிருஷ்ணன் பேசி வந்தார். அந்த வீட்டில் வைத்து அடிக்கடி என்.கெ. கிருஷ்ணனும் தாமும் சந்தித்ததைக் கோடி காட்டினார்.
ஆண்டுகள் போயின. நான் லண்டனுக்கு வந்த முதல் ஆண்டில் பி.கெ.வி. லண்டனுக்குப் பயணமாக வந்திருந்தார். அப்போது நான் பணியாற்றிய பிபிசி அலுவலகத்துக்கு வந்திருந்தார். அழைப்பை நான் ஏற்பாடு செய்யவில்லை. ஹிந்தி சேவையில் செய்திருந்தார்கள். எல்லோரும் தேநீர் அருந்தப் போனோம்.
பி.கெ.வி. அலாதியான கலை-இலக்கியப் பரிச்சயம் கொண்டவர். திரைப்படங்கள் பார்ப்பவர். அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்கள் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்... என்.கெ.-வுடன் அவரைச் சந்தித்த அந்த டில்லி நாள் பற்றி மெல்ல நினைவுபடுத்தினேன். கால் நூற்றாண்டுக்கு முந்தைய விஷயம், அவருக்கு நினைவில்லை. ஒரு நாளைக்கு நூறுபேர் வரை சந்திப்பவர் அவர். ஆனால் விக்தோர் ஹூகோ புத்தகம் என்றவுடன் சட்டென்று தெரிந்துவிட்டது! "அன்று மாலை எங்கோ போக வேண்டியிருந்தது. சகாவு என்.கெ. நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கலாம் என்று முடிவுசெய்துவிட்டார்... அதனால் தாமதமாகிவிட்டது" என்று சிரித்தார்.
என்.கெ. பற்றிப் பேசிக்கொண்டே வந்து விடைபெறும்போது, இறுதியாக ஒன்றை அவரிடம் கூறினேன். "என்.கெ. மாத்திரமல்ல. நீங்களும் எனக்கு உறவுதான். அதாவது கோட்டயம் அருகே வசிக்கும் என் துணைவியாரின் உறவுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் நீங்களும்" என்றேன்.
ஒரு நிமிடம் பி.கெ.வி. ஒன்றும் பேசவில்லை. அவரை அழைத்துச்செல்லும் வாகனம் வந்துவிட்டது. "நீங்களும் வாருங்கள், புத்தகக்கடைக்குப் போகலாம்" என்றார்.
"எதற்கு?"
"எனக்காக அந்த விக்தோர் ஹூகோ நாவலை வாங்கித்தாருங்கள். என்.கெ. இங்கே லண்டனில்தான் கணிதம் பயின்றபோதுதான் அரசியலுக்கு வந்தார். அப்போது இந்த நாவலை வாசித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அதை வாசித்துத்தான் கம்யூனிசத்துக்கே வந்திருக்கலாம். அவர் நினைவாக என்னுடன் எடுத்துப்போகிறேன்" என்றார்.
ஏற்கனவே பல முறை வாசித்திருந்தாலும் அந்த நாவலைப் புதிதாக வாசித்திருப்பார் பி.கெ.வி. என்றுதான் நினைக்கிறேன்.
பி.கெ.வி. அப்புறம் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால் அடுத்த ஆண்டே மறைந்துவிட்டார்.
பி.கெ.வி. அவர்களை "அப்பூப்பன்" என்று முறைப்படி அழைக்கும் என் மகளின் மேஜையில் அண்மையில் ஏதோ தேடும்போது புதியதாய் ஒரு புத்தகம் இருப்பதைப் பார்த்தேன். அதே விக்தோர் ஹூகோ நாவல்.
படங்கள் - கோட்டயம் அருகே புழையோரக் கம்யூனிசம், பெயர்பெற்ற அந்த நாவல்.
18.2.09
தீப்பாடல் - ஸில்வியா ப்ளாத்
பசியப் பிறந்தோம்
குறைகொண்ட தோட்டமிதற்கு..
ஆயின்
புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல்
மறு கொண்ட
முட்செடி பலதில்
பகையுடன் நழுவும் எம் காவலர்
தம் கண்ணி வைக்க
சிக்குமதில்
மானும் சேவலும் மீனும்
ஏன் எல்லாம் நன்றே
குருதி சிந்தும் தந்திரமாக
யாவும் சீர்குலைந்து நிற்கும்
அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்று
தேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதை
வெட்டியழிப்பதே
நம் கடனென்ப
நேர்-விசாரணையேதும்
திறக்காது
சாமர்த்தியமாய்ப் பிடித்து
ஒளிரும் எம் செயல்
ஒவ்வொன்றாய் வண்டலாக்கி
மீண்டும் உருவற்ற
சேற்றுமண்ணாக்கி
புளிநொதித்த
வானெனும் ஆடையாய் மூட
இனிய உப்பும்
களையின்
முறுக்கிய தண்டும்
யாம்
வழியின் கடைக்கோடியில்
வைத்துச் சமாளிக்க
செங்கதிர் எரித்த
யாம்
ரத்தக்குழாய் பலதின்
முட்கம்பி வலைப்பின்னலில்
அடுக்கிய தீக்கல்
உருளத் தூக்குவோம்
மறமான காதல், கனாவென
கறார்-அழலை நிறுத்த அன்றி
வா, என் காயம்படச் சாய்..
நின்றெரி
நின்றெரி..
- Sylvia Plath, Firesong, 1959.
17.2.09
கதிர்நாகம் - எமே ஸெஸெர்
கதிர்நாகமதன்
கண் கவரும் என் கண்
ஈ மொய்க்கத் தீவுபல மிகும் கடல்
தீப்பந்த ரோஜாப் பலதின்
விரல் சொடுக்கி
இடிதாக்கி முழுதாய் எஞ்சும்
என்னுடல்
ஆடம்பரமற்ற தாழ்வாரத்தில்
தொலைந்த ஒளிநிணம் பல தூக்கும் நீர்
ஐஸ் சுழல் ஒளிவட்டமாய்ப் பாய
அண்டங்காகம் பலதின் இதயமும் ஆவியாக
இடிமுழக்கம் பணிந்ததன் குரல் பல
கதவின் கீலாய்க் கரகரத்துத் திரும்ப
உடைந்த கண்ணாடியின் நிலப்பரப்பு நோக்கி
அரணை பல மாற
ஆர்க்கிட் மலர்தம் ஒலி பரப்பும்
பேய் மலர் பல
மையத்தீயின் அமுதம்
தீயெனும் தீ இரவு மூசுவண்டின் மாமரம்
கந்தகத்தில் சிறைப்ப்பட்ட புலிதமை எறியும் அவா எனது.
ஆயின்
தகரத்தின் விழிப்பு சிறார்த்தனக் கனிமத்தில் முலாமிடும்
என் கூழாங்கல்லுடல் மீனும் புறாவும் புசித்துப் புரண்டுழல
ப்ரேஸிலென்ற சொல்லின் மதுரமும்
ஆழச் சேற்றுநிலத்தில்.
Soleil serpent œil fascinant mon œil
et la mer pouilleuse d'îles craquant aux doigts des roses
lance-flamme et mon corps intact de foudroyé
l'eau exhausse les carcasses de lumière perdues dans le couloir sans pompe
des tourbillons de glaçons auréolent le cœur fumant des corbeaux
nos cœurs
c'est la voix des foudres apprivoisées tournant sur leurs gonds de lézarde
transmission d'anolis au paysage de verres cassés
c'est les fleurs vampires à la relève des orchidées
élixir du feu central
feu juste feu manguier de nuit couvert d'abeilles
mon désir un hasard de tigres surpris aux soufres
mais l'éveil stanneux se dore des gisements enfantins
et mon corps de galet mangeant poisson mangeant
colombes et sommeils
le sucre du mot Brésil au fond du marécage.
--- Aimé Cesaire, Soleil Serpent, Les Armes miraculeuses, 1946.
படம் - மெக்ஸிக்கோவின் கதிர்நாகம்.
16.2.09
தமிழர்கள் உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் - தமிழவன்
என் ஆசிரியர் தமிழவனின் கீழ்க்கண்ட பதிவு இந்த வலைப்பக்கத்தின் நானூறாவது பதிவாக அமைகிறது - இந்த ஓராண்டுக்காலம் மற்றும் பத்து நாட்களில். - நாகார்ஜுனன்.
இன்று அகில உலகமும் விழித்துக்கொண்டு இலங்கை அரசிடம் போரை நிறுத்து என்று கூறுகி்றது. ஆனால் போரை நிறுத்து என்று இந்தியா கூறவில்லை. பாப்பரசர் போர்நிறுத்தம் வேண்டும் என்கிறார். அமெரிக்காவின் வெளியுறவுச்செயலர் கிளின்டன் கூறுகிறார். பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ரால்ஃப் மிலிபண்ட் சொல்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றமும் போர்நிறுத்தம் வேண்டும் என்று கேட்டுள்ளது.
போர்நிறுத்தம் வேண்டும் என்று கருணாநிதி கேட்டார். கடைசியாக, அவர் ஃபிப்ரவரி நான்காம் நாள் மத்திய அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை எனக் கூறிவிட்டு இலங்கைத்தமிழர் நல உரிமைப்பேரவை என்ற பெயரில் ஒரு தி.மு.க.-காங்கிரஸ் பேரவையை உருவாக்கியுள்ளார். அதாவது இலங்கைத்தமிழர் நலன் என்பது தி.மு.க.-வும் காங்கிரஸும் சேர்ந்து வரப்போகிற தேர்தலில் வெற்றிபெறுவதுதான் என்று சுட்டப்பெற்றிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லமுடியாத துக்கத்தில் வாழ முடியாமல் அல்லல்படும்போது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரே குரலில் உரிமைகேட்கும் தலைமை இல்லையென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவர் ராமதாஸும் தா. பாண்டியனும் வைகோ-வும் திருமாவளவனும் இல. கணேசனும் கட்சிகளை அப்புறப்படுத்திவிட்டு பழ. நெடுமாறன் போன்ற கட்சிக்கு வெளியில் இயங்கும் ஒருவருடன் இணைந்துள்ளார்கள். இந்த இணைப்புக்கு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். ஒரு சில கட்சிகள் இரு அமைப்புகளிலும் இணையவில்லை.
பழைய வரலாற்றைப் பொறுத்தவரையில் இலங்கைத்தமிழர் பிரச்னையுடன் முழுமையாக இணைந்தவர் கருணாநிதி. உலகத்தமிழர்களின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்தியவர். அண்ணாதுரை, "பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன" என்று கூறிய கூற்றைப் புரிந்துகொண்டவராக சுமார் அறுபதாண்டு அரசியல் வாழ்க்கையை நடத்தியவர் கருணாநிதி. சமீபத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வனை இலங்கைப்படை கொன்றபோது இரங்கல் கவிதை எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணாதுரை தலைவராக உருவானதற்குச் சங்க இலக்கிய அடிப்படை அமைந்தது என்பதைப் புரிந்தவர் கருணாநிதி. அவருடைய காலத்துக்குப் பிறகு அண்ணாதுரையின் கலாச்சார வாரிசொன்று இனி தமிழகத் தலைமைப்பொறுப்புக்கு வரமுடியுமா என்பது கேள்வி. அரசியல் வாரிசுகள் வரலாம். கலாச்சார வாரிசு வருவதுதான் அண்ணாதுரையின் புதுமையான அரசியல் சிந்தனையை வளர்த்தெடுக்கும் முறை.
ஓட்டு அரசியலுக்காக கருணாநிதி தம் அறுபதாண்டுக்கால வரலாற்றைக் களங்கப்படுத்திவிட்டார் என்று விமர்சிக்கிறவர்கள் பக்கம்தான் நியாயம் உள்ளதா? இன்றைய நிலைமையைச் சற்று வேறு கோணத்திலிருந்து அலசுவோம்.
இந்தியாதான் இலங்கையின் மிக அருகில் உள்ள பெரிய நாடு. இந்திய அரசை இன்று நடத்தும் பல கட்சிகளில் ஒன்று தி.மு.க. ஆனால் தி.மு.க. இன்று பலவீனமாக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க. பிரிந்தபோதும் பாட்டாளி மக்கள் கட்சி உருவானபோதும் வைகோ பிரிந்தபோதும் விடுதலைச்சிறுத்தைகள் தோன்றியபோதும் தி.மு.க.வின் ஓட்டுகள் இந்தக்கட்சிகளின் ஓட்டுகளாக மாறின. அப்போதெல்லாம் தி.மு.க. பலகீனப்பட்டுப்போகாமல் தன் அடையாளத்தைக் காத்தது. சமீபத்தில் ஒரேயடியாக தி.மு.க. பலகீனப்பட்டுப் போயிற்று. அதனால்தான் காங்கிரஸைப் பிடித்துத்தொங்கித் தன்னை கருணாநிதி பாதுகாக்க முனைந்துள்ளார்.
தி.மு.க.-வின் வரலாற்றின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருந்திருந்தால் எதிர்காலத்தில் காங்கிரஸ் தன்னுடன் வரமுடியாத கட்சி என்பதை அறிந்திருப்பார். அண்ணா எப்போதும் காங்கிரஸை நம்பவில்லை என்பதை அண்ணாதுரையின் எழுத்து மூலம் தன் உளவியலை வளர்த்துக்கொண்ட கருணாநிதி அறிய மாட்டாரா என்ன? அப்படியிருந்தும் கருணாநிதி இந்த நிலைப்பாட்டை எடுத்து மன்மோகன், சோனியா ஆகியோரின் பாதையில் நடையிடத் துணிந்துள்ளார்.
இதற்கான காரணம் இந்திய அரசியலின் வெளிநாட்டுக் கொள்கை. இந்துசமுத்திரப் பிராந்தியம் இன்று அகில உலகத்துக்கும் முக்கியம். ஆசியாவை வளைக்க இந்துசமுத்திரப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். அதற்கு இலங்கைத்தீவு நிலவியல்-அடிப்படையில் முக்கியம். அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா அதனாலேயே இலங்கை அரசுக்கு உதவ முன்வந்தன. எப்போதும் முன்வரும் இந்தியாவும் இந்தப்போட்டியில் தன் பங்கையும் செலுத்தும்.
அதாவது இன்று இந்தியாவின் நிலை இதுதான் - இலங்கைக்கு அந்நாட்டுத்தமிழர்களுக்கெதிரான போரில் உதவாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை அரசின் நண்பர்களாகி விடுவார்கள். இந்திரா காந்தியின் நோக்கு வேறு. மன்மோகனின் நோக்கு வேறு. அன்று இந்திராகாந்தி நோக்கு கருணாநிதியின் அனைத்துலகத் தமிழினத்தலைவர் அடையாளத்துக்கு உகந்ததாக இருந்தது. மன்மோகனின் பார்வையில் கலாச்சார அடையாளத்தைக் கருணாநிதி பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. எனவேதான் காங்கிரஸ் பக்கம் கருணாநிதி சேர்ந்துவிட்டார்.
இது அண்ணாதுரையின் அரசியல் அல்ல. அறுபதாண்டுக்கால கருணாநிதியின் கலாச்சார அரசியலில் இருந்து கருணாநிதி பாதை மாறும் புள்ளி இது. இதற்கான வெளிக்காரணம் இந்தியாவின் வெளிவிவகார நிலைப்பாடு. உட்காரணங்கள், தி.மு..க என்ற கட்சியின், அண்ணாத்துரையின் இறப்புக்குப் பின்னான, பண்பு மாற்றம். சொத்தோடுள்ள நிறுவனமயமான தொடர்புகள். வள்ளலார், சிமென்ட் தொழிற்சாலை நடத்த முன்வந்தால் அவருடைய தத்துவம் மாறாதா என்ன? தி.மு.க. பாதை மாறுகிறது. அண்ணாதுரையின் பாதை வேறு; இனி தி.மு.க.-வின் பாதை வேறு. இலங்கைப்பிரச்சினையில் தமிழினத்தலைவர் தமிழ்ச்சமூகம் இரண்டாக உடையக் காரணமாகிவிட்டாரே என்று உலகத்தமிழர்கள் அவதானம் செய்தால் அதில் நிறைய நியாயங்கள் உண்டு.
இதனைத்தான், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 2009 பிப்ரவரி மூன்றாம் தேதி கூடிய தி.மு.க. செயற்குழு உலகத்தமிழர்களின் காதில் பூச்சுற்றிவிட்டது என்று உருவகம் மூலம் தெரிவித்தார். ஒரு செயற்குழு என்பது எப்போதும் அடிமைகளைக்கொண்டது. இது எல்லாத் தமிழகக்கட்சிகளிலும் காணப்படும் நிலைமை. ஜனநாயக மரபு எந்தக்கட்சியிலும் இல்லை. தலைவர் எது சொல்கிறாரோ அதுதான் சட்டம்; தீர்மானம்; முடிவு. ஒருவர்கூட எதிர்த்துப்பேசமாட்டார். தி.மு.க.-வின் பாதை மாறுகிறதென்று ஒருவர்கூடப் பேசியிருக்க மாட்டார்கள். எல்லோரும் லாபநோக்கு ஒன்றையே எதிர்பார்ப்பவர்கள்.
1965-ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பைப் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். 1965-ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புக் காலத்தில் மாணவனாக இருந்த யாரும் வாழ்நாள் முழுதும் அந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து மாறமுடியாது. 1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வர இருந்த ஒரே முகாந்திரம் மாணவர்கள். 1967-ஆம் ஆண்டில் என்போல் பலர் இடதுசாரிச்சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டோம். சமீபகாலம் வரை அந்த இடதுசாரி ஈர்ப்பு, சிந்தனைக்களத்தில் தி.மு.க. மீது வெறுப்பாகச் செயலாற்றியது. எனினும் என் திறனாய்வுச்சிந்தனையில் தமிழ் அடையாளம் ஒன்று செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக என் சிந்தனை, சமீபத்தில், 1967-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு முன்பத்திய அண்ணாதுரையை மறுகண்டுபிடிப்புச் செய்யும் சாகசத்தைச் செய்தது. பல நண்பர்கள் முகம் சுளித்தனர். எனக்கான காரணம் என்னிடம் இருந்தது. ஆக நான் தி.மு.க. வரலாற்றுக்குள் நுழைந்த அதே நேரம் அதன் வரலாற்றைத் தொடர்ந்த ஒரு மாமனிதர் தி.மு.க. வரலாற்றுக்குள்ளிருந்து வெளியேறுகிறார். இந்தப் பார்வை சரிதானா, தெரியவில்லை.
இந்திய வெளிவிவகாரத்துறையினர், தனது இலங்கைக்கொள்கையைப் பற்றிக் கூறும்போது இரட்டைச்சாலைக் கொள்கை ((double-track policy) என்று கூறுகிறார்கள். எதிரும் புதிருமான போக்கைக்கூட இந்தக்கொள்கை கொண்டிருக்கும் என்பது இதன் பொருள். தமிழகம் ஒரேயடியாய் எதிர்த்தால் தமிழகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கையைக்கூட இந்தியா எடுக்க முடியும். முன்பொரு காலமிருந்தது. இந்தியாவின் இலங்கைக்கொள்கை தமிழகம் கூறும் கொள்கைதான் என்று அந்நேரத்தில் கருணாநிதி கூறி மகிழ்ந்தது உண்டு.
ஆனால் இன்று கருணாநிதி இதற்கு நேரெதிர் நிலையை எடுக்க வேண்டிய நிலை. அதாவது இலங்கையைப் பொறுத்தவரையில் டில்லியின் கொள்கைதான் தமிழகத்தின் கொள்கையாகி விட்டிருக்கிறது. இதற்கு ஒரு கேள்வியும் கருணாநிதி அவர்களின் பதிலும் நிரூபணம் ஆகின்றன.
நிருபர் இப்படிக் கேட்கிறார்: இலங்கைப்போரை இந்திய அரசுதான் பின்னால் இருந்து நடத்துகிறது என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?
கருணாநிதி பதில் தருகிறார்: இத்தகைய பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு பலமுறை பதில் சொல்லிவிட்டது. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதற்குப் பதிலளித்திருக்கிறார்.
தினமணியில் ஃபிப்ரவரி நான்காம் நாள் வெளியான இந்தக்கேள்வி-பதில் கலைஞர் டில்லியின் பாதுகாவலராக மாறியுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால் உண்மை வேறு. 2007 நவம்பர் மாதம் இலங்கைக்கப்பற்படையின் வைஸ்-அட்மிரல் வஸந்த கரன்னகோட என்பவர், பத்தாயிரம் டன் ஆயுதங்களுடன் வந்த புலிகளின் ஆதரவுக்கப்பல் இந்தியக் கப்பற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டது என்றார். அதன்பிறகு இந்தியக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா இவ்விஷயத்தை ஒத்துக்கொண்டார். இது இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைச் செய்கிறதென்பதற்கான சான்றுதானே.
இது மட்டுமல்ல. 2007 ஆம் ஆண்டு, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இலங்கையிடம் உங்களுக்கான யுத்தத்தளவாடங்களை நாங்கள் தருகிறோம், சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் போகாதீர்கள் என்று வாக்குக்கொடுத்தார். அது எப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தெரியுமா? கருணாநிதி அவர்களை நாராயணன் சந்தித்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதாவது 2007-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி.
அன்றிலிருந்து இந்தியா தொடர்ந்து இலங்கை நடத்தும் தமிழ்மக்களுக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவிபுரிந்துகொண்டேயிருக்கிறது. ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாதபடி இந்தியா, ராஜபக்ஷ அரசுக்கும், ராஜபக்ஷவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஜே.வி.பி. என்ற இலங்கை தேசியவாத இடதுசாரிக்கட்சியின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவி செய்கிறது. ஜே.வி.பி. இந்தியாவை எதிர்க்கிற கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் இருபோக்குகள் உண்டு. ஒன்று நட்புநாடாக இந்தியாவைப் பார்க்கும் போக்கு. இன்னொன்று பகைநாடாகப் பார்க்கும் போக்கு. பிரேமதாசா பகைநாடாக இந்தியாவைப் பார்த்த நேரடி அரசியல்வாதி. ஜெயவர்த்தனே பகை நாடாகப் பார்த்தாலும் அகில உலக ராஜதந்திரம் தெரிந்தவர். எனவே நட்பு நாடுபோல் கூறிக்கொண்டே பகைநாட்டை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தியவர். பிரபாகரனும் பிரேமதாசாவைப் போன்றவர். ராஜதந்திரம் பயன்படுத்தத் தேவையில்லை என்று கருதுகிறவர். பிரேமதாசாவும் பிரபாகரனும் ஒத்த நிலை அரசியல் நடத்தியவர்கள். ஆனால், அனைத்துலக ராஜாங்க விஷயங்கள் அன்றைய இலங்கையின் இந்தியத்தூதர் தீட்சித் கூறியதுபோல் ஒழுக்கப்பார்வைக்கு அப்பாற்பட்டு நடப்பவையாகும். தீட்சித் பயன்படுத்திய ஆங்கிலச் சொல் amoral. உண்மையைப் புரிந்து கொள்ள இச்சொல் மிகவும் பயன்படும்.
தமிழ்மக்களிடையில் இந்த அறிவைக் கொண்டு வந்து சேர்த்த அறிவுத்துறையின் பெயர் அமைப்பியல். அமைப்பியலும் ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டு அகில உலகமும் தனிமனித அகமும் இயங்குகின்றன என்று கூறுகிறது. மனித விழுமியங்கள் அமைப்பின் விழுமியங்களாகப் பரிமாற்றம் பெற்று சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டன. மனிதப்பரிதவிப்பும் பிரலாபமும் உயிரழிவும் உண்மைகளல்ல. இவை அமைப்பின் ஒழுக்கமாகப் பரிமாற்றம் செய்யப்படும்போதுதான் கவனிக்கத்தக்க விழுமியமாக மாறுகின்றன. எனவே தன்னை அழித்துக்கொள்கிற முத்துக்குமார்களை யாரும் கவனிக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக உயிருடன் இருந்து செயல்படுகிறவர்களை சமூகம் கவனிக்கும். தற்காலச்சமூகம் கவனிக்கிற முறையில் ஈழ அவலத்தை அமைப்பாக்கம் சார்ந்த கவனிப்பாக மாற்றுகிறவர்களே இன்று தேவை.
தமிழ்ச்சமூகம் பிழைக்க வேண்டுமென்றால் இத்தகைய அறிவுமுறையாக, நிகழ்ச்சிகளையும் பேரவலங்களையும் மாற்ற வேண்டியிருக்கிறது. உலகம் வேறுமுறையில் செயல்படுகிறதென்று தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலகின் எல்லா அறிவையும் கொண்டுவந்து தமிழ்மொழியை அகில உலக அறிவுள்ள மொழியாக ஆக்குவதே இதற்கான தேவை. பாரதி, வரலாறு திரும்பிப்படுக்கிற ஒருகணத்தில் வாழ்ந்து மறைந்ததால் இதைப்பற்றி யோசித்திருக்கிறான்.
திராவிடச்சிந்தனை-வரலாற்றின் முக்கியமான நபர்களின் எழுத்து, நடைமுறை போன்றன, இப்படிப்பட்ட வியாக்கியானத்துக்கும் மறுவியாக்கியானத்துக்கும் உட்பட வேண்டும்.
நன்றி - உயிரோசை
படம் - ராமேஸ்வரக் கடற்கரை
15.2.09
முகாம் என்பது யாது? - 1 - அகம்பென்
ஈழம், இனி தடுப்புமுகாம்-அகதிமுகாம் வடிவத்தில்?
பொதுவாகவே முகாம்களில் நடந்தேறிய அட்டூழியங்கள் எவ்விதப் பிரத்தியேக அரசியல்-நீதிபரிபாலன அமைப்பில் சாத்தியமாயின என யாரும் ஆராய்வதில்லை. அதாவது, முகாம்களில் என்ன நடந்தது என்ற கேள்வி, இந்த நிகழ்வுகள் என்ற குற்றங்கள் குறித்து நீதிபரிபாலன அமைப்பு என்ன சொல்கிறது என்ற கேள்வியைவிட அதிமுக்கியமாகி விட்டது. உண்மையில் இந்தப் புவிப்பரப்பிலேயே முற்றான மனித-விரோத நிலையில் உருவான இடம், முகாம் என்பதுதான் என்கிறேன். இத்தகைய முகாம்களில் சிக்கிப் பலியானோர்க்கும் சரி, சிக்கப்போவோர்க்கும் சரி, இதுதான் இறுதியாக முக்கியமாகிறது, இனியும் முக்கியமாகும்.
ஆக, இங்கே வேண்டுமென்றே எதிர்த்திசையில் சிந்திக்கப்போகிறேன் - அதாவது முகாம்களில் நடப்பன யாவை என்பதிலிருந்து அவற்றை புரிந்துகொண்டு வரையறை செய்வதைத் தவிர்க்கப்போகிறேன். மாறாக, முகாம் என்பது யாது, அதன் அரசியல்-நீதிபரிபாலன அமைப்பு யாது, அங்கு அட்டூழியங்கள் சாத்தியமானது எவ்வாறு என்ற கேள்விகளைக் கேட்கப்போகிறேன்.
இப்படிக் கேட்பதன்வழி இனி என்ன நடக்கும்? - முகாம் என்பதை நவீனத்துக்கு முற்காலத்தைச் சார்ந்த வரலாற்று உண்மையாகவோ, நவீன காலத்திலும் தொடரும் பிறழ்வாகவோ அன்றி வேறு விதத்தில் இனிக் காண முடியும். அதாவது, முகாம் என்பதை, ஒரு விதத்தில் மறைந்திருக்கும் அணியாகவும் (a hidden matrix) இன்னொருவிதத்தில் சமுதாயம் கட்டமைத்து நாம் இன்னும் தொடர்ந்து வாழும் அரசியல்-களமாகவும் காண முடியும்.
நம் நவீன காலத்தின் முதல் முகாம்கள் தொடங்கியது எங்கே? 1896-ஆம் ஆண்டில் காலனிய க்யூபாவில் நடந்த கிளர்ச்சியை ஒடுக்கிய ஸ்பானிஷ் நாட்டவர், அங்கிருந்த மக்களை அடைத்த முகாமைத்தான் இப்படிக் காண வேண்டும் என்பது ஒரு பதில்; இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனியத் தென்னாப்பிரிக்காவில் போயர் (Boer) மக்களை அடைத்துவைத்த வதைமுகாமைக் கவனிக்க வேண்டும் என்பது இன்னொரு பதில். இப்படியாக வரலாற்றியல்-அறிஞர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு பதில்களிலும் பொதுவான ஓரம்சம் இருப்பதை முக்கியமாகக் கவனிக்கலாம் - காலனியக்காலப் போர் ஒன்றுடன் தொடர்புள்ள அசாதாரண அரசு-நிலையை (State of exception) வெகுமக்கள்-சமுதாயத்துக்கும் விரிவுபடுத்துவது என்பதே இந்த அம்சம். அதாவது, சாதாரணச் சட்டங்களின்படி இந்த முகாம்கள் தோன்றியதாகக் கருத இடமில்லை. ஏன், சிறைச்சட்டங்கள் அடைந்த மாற்றத்தின் விளைவாக இவை உருவாயின என்று கருதுவது அதிலும் பிரச்னையாகும். மாறாக, ஓர் அசாதாரண-அரசுநிலை மற்றும் ராணுவச்சட்டத்தின் விளைவாகத் தோன்றியவையே இவை.
இந்த உண்மை, ஐரோப்பாவின் நாஃஸி வதைமுகாம்களைப் பொறுத்தவரை, தெளிவாகத் தெரிகிறது. இவற்றின் தோற்றமும் நீதிபரிபாலன-அமைப்பும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அங்கே யூத மக்கள் அடைத்துவைக்கப்பட்டது சாதாரணச்சட்டங்களின்படி அல்ல. மாறாக, Schutzhaft என்ற தடுப்புக்காவல், பாதுகாப்புக்காவல் சட்டங்களின்படிதான் அடைத்துவைக்கப்பட்டார்கள். அதைச் சாத்தியமாக்கியது, ப்ரஷ்யப்பேரரசின் விளைவாகத் தோன்றிய நீதிபரிபாலன அமைப்பு. அதாவது அரசின் பாதுகாப்புக்குச் சவால்விடும் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கம் மட்டும் கொண்டு, மனிதர்களை, அவர்களுக்குக் குற்றவியல் பின்னணி இருக்கிறதோ, இல்லையோ, தடுத்துவைக்கும் விஷயம் இது. நாஃஸி அறிஞர்கள், அதைத் தடுப்புக்கண்காணிப்பு என வரையறுத்து சிலவேளை எழுதியிருக்கிறார்கள்.
Schutzhaft என்பது, 1851-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் நாள் ப்ரஷ்ய அரசு இயற்றிய முற்றுகைச் சட்டத்தில் (state of siege) தங்கிநிற்கும் ஒன்று. 1871-ஆம் ஆண்டில், பவேரியாப் பகுதி தவிர்த்த ஜெர்மனி முழுமைக்கும் அது விரிவாக்கப்பெற்றது. 1850-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னிரண்டாம் நாள், ப்ரஷ்ய அரசு இயற்றிய தனிமனிதச் சுதந்திரச் சட்டம் (Schutz der persönlichen Freiheit) அப்போது அமலில் இருந்ததையும் இங்கே கவனிக்க வேண்டும். முதல் உலகப்போரின்போது அந்த இரண்டு சட்டங்களும் விரிவாகப் பயன்பட்டன.
முதலில், அசாதாரண அரசு-நிலைக்கும் வதைமுகாமுக்கும் உள்ள இந்த உறவு, இரண்டையுமே நிறுவிய ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, முகாம் என்றால் யாது என்ற கேள்விக்கான சரியான புரிதலைப் பெறவேண்டுமானால், இந்த உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியே ஆக வேண்டும்.
அடுத்து, Schutzhaft கூறும் தனிமனிதச் சுதந்திரத்துக்கான "பாதுகாப்பு", அவசர நிலை முன்மொழியும் சட்டத்தின் இடைநிறுத்தலுக்கு எதிரானது என்பதைக் கவனிக்க வேண்டும்! ஆனால், இங்கிருப்பது புதிதான ஒரு விஷயம்: அசாதாரண அரசு-நிலையை முன்வைத்து நிறுவப்பெற்ற அந்த Schutzhaft, சாதாரண நிலையிலும் அமலில் இருக்க தன்னை அனுமதித்துக்கொள்கிறது, அதே சமயம் சாதாரண நிலையைக் கலைப்பதாகத்தான் அசாதாரண நிலையே வருகிறது. இது ஒரு முரண்நிலை! ஆக, இங்கே அசாதாரண நிலை நியமமாக மாறும் களம்தான் முகாம்.
இன்னும் விரிவாகப் பார்க்கலாம்: அசாதாரண அரசு-நிலை என்றால் என்ன? சட்டத்தின் செயல்பாட்டை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதை அசாதாரண அரசு-நிலை எனலாம். அதாவது, காலப்பரிமாணம் கொண்ட இந்த விஷயத்துக்கு ஒரு நிரந்தரமான கள-அமைப்பை அளிப்பது, முகாம் என்ற இந்த வடிவம்தான். அதாவது சாதாரணச் சட்டத்துக்கு எப்போதும் புறம்பாக இயங்கும் ஒரு விஷயத்துக்கு, இத்தகையதொரு கள-அமைப்பு, முகாம் என்ற வடிவத்தில் கிட்டுகிறது.
1933-ஆம் ஆண்டில் ஜெர்மன் தலைவராக அடால்ஃப் ஹிட்லர் தேர்வான பிறகு நடந்த கொண்டாட்டங்களின்போது, டஷாவ் (Dachau) என்ற இடத்தில் அரசியல்-கைதிகளைக் குவித்து முகாம் ஒன்றை அமைப்பது என்ற முடிவை எடுக்கிறார், ஹெர்மன் ஹிம்லர். Schutzstaffel - அதாவது பாதுகாப்புப்படை என்ற பெயரில் செயல்பட்ட நாஃஸி அரசியல்-உளவுப்படைக்குத் தலைமை வகித்தவர் இவர். இந்த டஷாவ் முகாம், உடன் Schutzstaffel அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டது. Schutzhaft சட்டத்தின்படி, இந்த முகாம், குற்றவியல் சட்டம் மற்றும் சிறைச்சட்டத்தின் பரிபாலனத்துக்குப் புறத்தே வைக்கப்பட்டது. சொல்லப்போனால், குற்றவியல்-சட்டம் மற்றும் சிறைச்சட்டத்துக்கும் இந்த முகாமுக்கும் அப்போதும் சரி, பிறகும் சரி, எவ்வித உறவும் இருக்கவில்லை.
டஷாவ் முகாமுடன் ஸஷென்ஹௌஸன், புஷன்வால்ட், லிச்டென்பர்க் போன்ற வேறு முகாம்களும் விரைவிலேயே இயங்கத்தொடங்கின. பிறகு அவை இயங்கிக்கொண்டேயிருந்தன. அங்கே அடைத்துவைக்கப்பெற்றவர்களின் தொகையும் மாறிக்கொண்டிருந்தது. குறிப்பாக 1935-1937 காலகட்டத்தில், அதாவது யூத மக்களைப் புறத்தே அனுப்புவதற்கு முன்பாக, இந்தத்தொகை மாறிக்கொண்டிருந்தது. பிறகு 7,500 என்பதாகக் குறைந்தது. எப்படியிருந்தபோதும் ஜெர்மன் நாட்டின் நிரந்தர-எதார்த்தமாகி விட்டது, முகாம்.
ஆக, முகாம் என்பதை ஓர் அசாதாரணக்களம் எனலாம். இந்தக்களத்தின் சட்ட அந்தஸ்து, ஒரு புதிர். சாதாரண சட்ட-ஒழுங்கமைப்புக்குப் புறத்தே வைக்கப்படும் பிரதேசம், இந்த முகாம். ஆனால், புறத்தே மாத்திரம் அமைகிற களமல்ல இது. இந்தப்புதிர் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.
Exception என்ற சொல்லின் லத்தீன் மொழி வேரை ஆராய்ந்தால் ex-capere - அதாவது புறத்தே பிடிபட்டது எனலாம். அதாவது, விலக்கப்பட்டே, அந்த நிலையை வைத்தே, உள்வாங்கப்படும் நிலை இது. ஆக, சட்டத்தின் ஆட்சி என்பதில் பிடிபட்டிருப்பது, முதலில், இந்த அசாதாரண அரசு-நிலைதான் எனலாம்.
இதை வேறு வார்த்தைகளில் கூறினால், இறையாண்மை என்பது அசாதாரண அரசு-நிலையைத் தீர்மானிக்கும் நிலையில் நிறுவப்பெறுகிறது என்றால், இந்த அசாதாரண அரசு-நிலை நிரந்தரமாக மெய்யாகும் வடிவமே முகாம். இங்கே ஏதும் நடக்கலாம் என்ற கோட்பாடே நிலவுகிறது, நிலவும். அதாவது, எதேச்சாதிகார ஆதிக்கத்தை ஆதரிக்கும் கோட்பாடே நிலவுகிறது, நிலவும். ஆனால் இதுவே நிலவும் கோட்பாடு என்பதைப் பிடிவாதமாக ஏற்க மறுக்கிறது பொதுப்புத்தி என்கிறார் ஹன்னா அரெண்ட் (Hannah Arendt) (1).
சட்டம் முற்றாக இடைநிறுத்தப் பெற்ற அசாதாரணக் களமாக அமைவன என்பதாலேயே இந்த முகாம்களில் ஏதும் நடக்கலாம் என்ற எதார்த்த நிலை. முகாம் என்பதன் இந்தப் பிரத்தியேக அரசியல்-நீதிபரிபாலன-அமைப்பைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் - இவற்றின் செயல்பாடு என்பதே அசாதாரண அரசு-நிலையை நிரந்தரமாக்குவது என்பதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் - இங்கே நடந்த அசாத்திய நிகழ்வுகள் பற்றிப் புரியாமலே போய்விடும். அதாவது, இந்த முகாம்களில் நுழைந்த மனிதர்கள் இயங்குவது, முகாமின் அகம்-முகாமின் புறம், அசாதாரணம்-நியமம், சட்டத்துட்பட்டது-சட்டத்தை மீறியது போன்ற மாறுபாடுகள் களைந்த பிரதேசத்தில் (zone of indistinction), நீதிபரிபாலனப் பாதுகாப்பேதும் மறைந்துவிட்ட பிரதேசத்தில் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தவிர, இவர்கள் யூத இனத்தோராக இருக்கும் பட்சத்தில், ஜெர்மனியின் நூரம்பர்க் சட்டங்களின்படி இவர்தம் குடியுரிமையும் பறிக்கப்ப்பட்டது; ’இறுதித்தீர்வு’ என்ற கட்டத்தில் இவர்கள் முழுமையாக தேசவிலக்குக்கும் ஆளானார்கள்.
ஆக, முகாம்களில் இருந்தோர் அரசியல்-உரிமைகள் யாவும் பறிக்கப்பெற்று, கையறு-நிலையில் அதாவது வெறும் அம்மண-உயிர்நிலையில் (nuda vita) சிறுத்துப்போய் வைக்கப்பெறும் பட்சத்தில், இதுவரையில் முழுமுற்றான உயிர்-அரசியல் களம் (most absolute biopolitical space) என்பதாக மெய்யாகியிருப்பது இந்த முகாம் (2) எனலாம். அதாவது அதிகாரம், அம்மண-உயிர்நிலை என்பதை நேரடியாக, எவ்வித இடையீடுமின்றி, எதிர்கொள்கின்ற களம், இந்த முகாம். அரசியல் என்பது உயிர்-அரசியலாக மாறும் கட்டத்தில், பலியிடத்தக்க மனிதர் (homo sacer) என்போரைக் குடிமக்களிடமிருந்து வேறுபடுத்த இயலாத கட்டத்தில், உருவாகிற அரசியல்-களம் என்ற சட்டகம், இந்த முகாம்.
எனவே, இந்த முகாம்களில் நடந்த பயங்கரங்கள் பற்றிய சரியான கேள்விதான் யாது? மனிதர்கள், சக மனிதர்களை இப்படிப் பயங்கரமாக, கொடூரமாக வதைத்தது எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வியைப் போலித்தனமாகக் கேட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை! மாறாக, மனிதர்களின் உரிமைகளை, சிறப்புரிமைகளை முற்றாகப் பறித்து, அவர்களை ஏதும் செய்யலாம், அப்படி ஏது செய்தாலும் அது இனி குற்றமாகவே தெரியாத வண்ணம் செய்துவிடுகிற அரசியல்-கருவிகளும் நீதிபரிபாலன வழிமுறைகளும் எத்தகையவை என்பனவற்றைக் கவனமாக ஆராய்வதே இன்னும் நேர்மையாக, பயன்தருவதாக அமையும்.
(இன்னும் வரும்)
Giorgio Agamben, Che cos'è un campo?, Mezzi senza fine: note sulla politica, Turin, 1996, p. 35-41.
Giorgio Agamben, What is a Camp? Means without End: Notes on Politics, Translated by Vincenzo Binetti and Cesare Casarino, Minneapolis, 2000, p 37-45.
இத்தாலிய மூலம் மற்றும் ஆங்கில ஆக்கத்திலி்ருந்து தமிழாக்கம் - நாகார்ஜுனன்.
பதின்மூன்று ஆண்டு முன்பு அகம்பென் எழுதிய இந்தக்கட்டுரை, 2001-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு குவான்டநாமோ முகாமை நிறுவியதை அடுத்து, உரையாடல்-விவாதங்களைத் தூண்டியது. இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் முகாம்கள் குறித்து, இந்தப் பின்புலத்தில் பேச முடியுமா என்று பார்க்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. ஹன்னா அரெண்ட் (1906-1975): ஜெர்மன் அறிஞர். எதேச்சாதிகாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். நாஃஸிக்கட்சியைக் கொஞ்சக்காலம் ஆதரித்த மார்ட்டின் ஹைடெக்கரின் மாணவியாக இருந்தவர். ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து தப்பி வாழ்ந்தவர்.
2. அகம்பெனின் இந்த nuda vita என்ற கருத்தாக்கத்தை bare life என்று Daniel Heller-Rosen என்பவர் ஆங்கிலத்தில் எழுதுவது சரியல்ல, naked life என்றே எழுத வேண்டும் என்கிறார்கள் இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் ஆக்கியிருக்கும் Vincenzo Binetti மற்றும் Cesare Casarino. இத்தாலிய மொழியில் அமைந்திருக்கும் மூலக்கட்டுரையை வாசித்த பிறகு இதையே ஏற்கலாம் என்றே தோன்றியதால் அம்மண-உயிர்நிலை எனத் தமிழாக்கியிருக்கிறேன். சென்ற ஆண்டு மே மாதம் சஞ்சாரம் என்ற இதழில் அ. மார்க்ஸ் பாவித்திருக்கும் வெற்று வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.
படங்கள் - அகம்பென்; ஃப்ரெஞ்சு இயக்குநர் ஆலன் ரெனெ, நாஃஸி வதைமுகாம் பற்றி எடுத்த இரவும் பனியும் (Nuit et Brouillard) திரைப்படம்.
14.2.09
அந்த நிமிடம் அவரை முத்தமிட விரும்பினேன்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, தமிழின் மூத்த எழுத்தாளராக இருந்து, தம்முடைய 93-ஆம் வயதில் மறைந்திருக்கிறார் கிருத்திகா என்கிற மதுரம் பூதலிங்கம். நேற்றிரவு அவர் மறைவுச் செய்தி என்னை அடைந்தது.
எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு இருபத்திரண்டு வயது. பம்பாய் நகரில் தனியாக வசித்தேன். என் வாழ்க்கையின் கொந்தளிப்பான காலமது. அங்கு சயான்-மாதுங்கா பகுதி தமிழ்ச்சங்கத்துக்குச் அடிக்கடி சென்று அங்குள்ள அருமையான் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வாசிப்பது வழக்கம். அங்கிருந்த சங்க நிர்வாகி ஆதிலட்சுமணன் நிறைய வாசிப்பவர். என்னுடன் விரைவில் பழக்கமாகிவிட்டார். ஒருநாள், எனக்கு ஃபோன் செய்து "மாலை சீக்கிரம் வந்துவிடுங்கள்" என்றார். "கிருத்திகா வருவார், நீங்கள் அவருடன் பேசலாம். இரண்டு மணி நேரம் இருப்பார். நீங்கள்தான் அவரைக் கொண்டு கார் இருக்கும் இடத்தில் விடவேண்டும்."
முதல் சந்திப்பிலேயே கிருத்திகாவை எனக்குப் பிடித்துவிட்டது. வாசவேஸ்வரம் உள்ளிட்ட அவருடைய நாவல்களை வாசித்து சில மாதங்களே ஆகியிருந்த தருணமது. தர்ம க்ஷேத்ரே என்ற நாவலில் ஃப்ரைட்ரிக்ஹ் நீட்ஷ (Friedrich Nietzsche) மற்றும் ஸிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) பற்றிய குறிப்புகளை வாசித்து அசந்துபோயிருந்தேன்... என்ன ஒரு பெண்! ஆனால் மிக இயல்பாகப் பேசினார். வாசவேஸ்வரம் நாவலைத்தான் அதிகம் பேசினோம். பிறகு புகை நடுவில், நேற்றிருந்தோம், தர்மக்ஷேத்ரே, சத்யமேவ, பொன்வண்டு, போகமும் யோகமும், தீராத பிரச்னை, புதிய கோணங்கி எனப் பேசிக்கொண்டேயிருந்தோம். ஆதிலட்சுமணன் எங்களைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார். நாற்பதாண்டுக்குமேல் வயது வித்தியாசம் கொண்ட நாங்கள் இருவரும் மிக இயல்பாக சயான்-மாதுங்கா பகுதியில் காப்பி அருந்திவிட்டு அங்குள்ள நடைபாதைப் புத்தகக்கடைகளில் திரிந்தோம். கார் இன்னும் வரவில்லை...
எனக்கு அந்த சமயத்தில் பெண்-நண்பர்கள் யாருமிருக்கவில்லை. ஓரக்கண்ணால் அவரைக் கவனித்தேன். அப்படி இருந்திருந்தாலும், கிருத்திகா என்னை மிக வசீகரித்திருப்பார்தான். ஆம், அந்த நிமிடம் அவரை முத்தமிட விரும்பினேன். எனக்கென்னவோ வாசவேஸ்வரம் நாவலின் ரோஹிணியும் பிச்சாண்டியும் நாங்களாக நடந்துசெல்வது போலத் தோன்றியது. அதாவது கிராமத்திலன்றி நகரத்தில். பிச்சாண்டி, புரட்சி தொடங்குமுன்பே தோற்றுப்போன புரட்சிவாதி. ரோஹிணி, அவனைத் தாண்டிப் பரிமளிக்கும் பெண். பயந்து பயந்து அவரிடம் இதைக் கூறினேன்... கிருத்திகாவுக்குக் காது சுத்தமாகக் கேட்காது. பம்பாயின் அத்தனை இரைச்சலில் நான் கேட்டதை எப்படியோ புரிந்துகொண்டு புன்னகைத்தார். இனியொருமுறை கேட்டால் மறுக்க மாட்டார் என்று நினைத்தேன்! அந்த நடைபாதையில், பெயர்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ராபர்ட் மூசில் எழுதிய குணங்களற்ற மனிதன் (Der Mann ohne eigenschaften) நாவலின் இரு தொகுதிகளை நான் வாங்கிய போது அவருடைய கார் ஓட்டுநர் வந்துவிட்டிருந்தார். அவர் கூப்பிட்டதும் கிருத்திகாவுக்குக் கேட்காததால், நான் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. சிரித்தார்...
இரண்டு ஆண்டுகள் கழித்து நாகர்கோவில் சென்று எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சந்தித்த போது, அவர் அங்கிருந்த வடிவீஸ்வரம் அக்ரஹாரத்துக்கு என்னைக் கூட்டிச்சென்றார். கிருத்திகாவின் நாவலை, அதாவது வாசவேஸ்வரத்தைத் சிலாகித்துத்தான் பேசினோம்! அவரிடமிருந்து விடைபெற்று கிருத்திகாவின் ஊரான பூதப்பாண்டிக்குச் சென்றுவிட்டுத் திருவனந்தபுரம் போனேன். பிறகு என் பெங்களூர் வாசத்தின்போது எழுத்தாளர் ஆதவனும் நானும் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் பற்றிப் பேசிக்கொண்டேயிருப்போம்.
கிருத்திகாவை அடுத்துச் சந்தித்தது தொண்ணூறுகளின் தொடக்கத்தில். சென்னையிலிருந்து ஹைதராபாத் பயணித்து. அந்தச் சந்திப்பின்போது என்மீது அன்பைப் பொழிந்தார்... அதுவரை கிருத்திகாவின் எந்த நாவலுக்கும் இரண்டாம் பதிப்பு வந்திருக்கவில்லை. நண்பர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் முன்முயற்சி செய்து கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவலின் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவந்தார். நூல்-அகம் என்பதன் வெளியீடு. முதல் பதிப்பில் இருந்த கோபுலுவின் கோட்டோவியங்கள் இதிலும் உண்டு, ஆனால் அட்டை வான்கோவின் ஓவியம். அதற்கான பின்னுரையை எழுதும் பொறுப்பை எனக்களித்தார் பன்னீர்செல்வன். கம்யூனிசம், சோவியத் ருஷ்யா ஆகிய கனவுகள் கலைந்த நிலையில், மிகத்தீவிர மனோநிலையில் அதை எழுதினேன். கனவும் தூக்கம்-விழித்தலும் என்ற என் பின்னுரையில், இந்திய அதிகார வர்க்கம் பற்றிய க்டுமையான விமர்சனம் வரும். அதாவது, கிருத்திகா நகைச்சுவையுடன் எழுதியிருப்பதை, நீட்ஷ-வின் பார்வையுடன் கூடியதாக, உயர்த்தி எழுதினேன். கிருத்திகாவைச் சிலாகிக்கும் வகையில் நான் எழுதிய அந்தப் பின்னுரையை விரைவில் வெளியிடுகிறேன்.
பிறகு கிருத்திகாவின் நீண்ட நாள் நண்பர் பெ. கோ. சுந்தரராஜன் என்ற சிட்டியைச் சந்தித்தபோது, என் பின்னுரையில் இந்திய அதிகார வர்க்கம் குறித்த விமர்சனம் பற்றிக் கொஞ்சம் மனத்தாங்கலுடன் பேசினார். இந்தியா டுடே இதழில் அதுபற்றி ஒருவரி எழுதினார் என்றுகூட நினைவு. ஆனால் அதிகார-வர்க்கத்தை அவ்வளவு நெருக்கத்திலிருந்து கண்டிருந்த கிருத்திகாவுக்கு அது ஒரு பிரச்னையாக்வே இருக்கவில்லை! (இன்னும் ஒருவிஷயம், அதற்குப் பிறகு சிட்டியைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். பார்த்தவுடன் "காஞ்சி பரமாச்சாரியார்" புகழ்பாட ஆரம்பித்துவிடுவார்!). 
ஹைதராபாதிலிருந்த கிருத்திகா, பிறகு சென்னைக்கே வசிக்க வந்தார். அவருடைய மகள்-மருமகன் வீட்டுக்குப் போவதென்றால் அதில் எனக்குத் தனிச்சிக்கலே வந்துவிட்டது. அதனால் மைலாப்பூர் சந்துபொந்துகளில் தேடி எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்! எப்படியோ பலமுறை சந்தித்தோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருடைய புத்தகங்கள் பல - நாவல்கள், குறுநாவல்கள், குட்டிப்பாட்டி கதைகள், ஆங்கிலத்தில் சிறார் ராமாயணம், பாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், சோழர் காலக் கோயில்கள் இரண்டைப் பற்றிய ஆய்வு இவற்றையெல்லாம் மறுவெளியீடு செய்ய வேண்டும், ஓவியங்களைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது...
பழகப்பழக, பேசப்பேச, என் அன்னையார் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்வழி எங்கள் தூரத்துக் குடும்ப உறவினர் கிருத்திகா என்பதும் தெரிய வந்தது... நான் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்த அதே சமயம், இவை யாவும் எங்கள் நெருக்கத்தைக் குறைத்தன. அவரை அண்மிப்பதை, அவர் வீட்டுக்குப்போய் அவரைச் சந்திப்பதை எப்படியும் தவிர்த்தே வந்தேன் - அவருக்கு வருத்தம் என்று தெரிந்தாலும். ஒருநாள் ஃபோனில் "உனக்கு வேறு பெண்நண்பர்கள் வந்துவிட்டார்களா?" என்றுகூடக் கேட்டார்...
நான் லண்டன் வந்த பிறகு ஒருமுறை விசாரித்ததில் அவர் பெங்களூர் சென்றுவிட்டார் என்று தெரிந்தது. கடந்த எட்டாண்டுகளில் ஒரேஒரு முறைதான் தொடர்பு. இவ்வாண்டு க்ளாஸ்கோ பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்ற என் துணைவி சாவித்திரி ப்ரீதா, கிருத்திகா பெயர்பெற்ற எதிர்-உளவியல் அறிஞர் ஆர்.டி. லைங்-குக்கு (R. D. Laing) எழுதிய கடிதத்தை அங்கே வாசித்திருக்கிறார். அதுபற்றி கிருத்திகாவிடம் கேட்க் இயலாதவாறு, தொடர்பே அற்றுவிட்டது.
தீராக்காதலின் ஒருவிதக்கூறுதான் நிரந்தரப்பிரிவு என்று இப்போது படுகிறது.
கிருத்திகாவைப் பம்பாயில் முதலில் சந்தித்தபோது வந்த அதே காதலுணர்வை, நேற்றிரவு அவர் மறைந்த செய்தி கேட்டபோது, மீண்டும் பெற்றேன்... வானோக்கியபோது தெரியும் கிருத்திகைத் தாரகைக்கூட்டமாய் அவரையும் அவர் புத்தகங்களையும் ஏற்கிறேன். வானில் ஏறும்போது அவருடன் இணைவேன்.
படங்கள் - மறைந்த கிருத்திகா, வாசவேஸ்வரம் நாவலின் இரண்டாம் பதிப்பில் அட்டையாக வான்கோ ஓவியம்.
எழுதிக் கொலையுண்டவர் பற்றி சிவநம்பி சண்முகன்
உலகில் ஊடக சுதந்திரம் துளியும் இல்லாத நாடுகளில் தலையாயது இலங்கை என்று பன்னாட்டு ஊடக சுதந்திர அமைப்புகள் கூறிவருகின்றன. இலங்கையில் கடந்த கால்நூற்றாண்டாக எழுதிக் கொலையுண்டவர் பற்றி சிவநம்பி சண்முகன் எழுதிய கட்டுரை. நீண்டகாலமாக இலங்கையில் செய்தியாளராகப் பணியாற்றிய சிவநம்பி சண்முகன், இலங்கை அரசின் துன்புறுத்துதல்களில் இருந்து தப்பி இப்போது ஸ்விட்சர்லாந்தில் அரசியல்-தஞ்சம் பெற்றிருக்கிறார். இந்தக்கட்டுரை மறுவெளியீடு செய்வது என் கடமை என்று கருதுகிறேன். கட்டுரைக்கு நன்றி - காலச்சுவடு.
பிரசுரித்துப் பாழாய்ப் போனவர்களின் வரலாறு - சிவநம்பி சண்முகன்
அதிகாரத்துக்கும் ஊடக சுதந்திரத்திற்குமான உறவு ஒருபோதும் சமாந்தரமானதாக இருந்ததில்லை. வரலாறு முழுக்க அவை எப்போதுமே நேரெதிரானவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஊடக சுதந்திரம் என்பது அடிப்படை மானுட உரிமைகளில் ஒன்றான கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் இன்றியமையாத ஒரு பகுதி. இது உண்மையான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சம். ஜனநாயகத்தின் அடிப்படை, பன்மைத்துவம். பல இன மக்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள் என அது ஆயிரம் பூக்களாய் விரியும்.
இந்தப் பன்மைத்துவம் எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் இந்தப் பன்மைத்துவத்திற்கு எதிராக ஏகத்துவம் வலியுறுத்தப்படுகிறதோ, அங்கு எல்லாவகையான சுதந்திரங்களுக்கும் நெருக்கடி வந்துவிடுகிறது. இலங்கையில் ஒற்றையாட்சியும் சிங்களவர்களுக்கு மட்டுமேயான அரசியலதிகாரம் என்ற அரசியல்-வழிமுறையும் பெரும்பான்மை ஊடகங்களை அரசே கட்டுப்படுத்தி வருவதும் பன்மைத்துவத்தை மறுதலித்துவிடுகின்றன. அரசு, தன் வளர்ச்சிப்போக்கில் தன் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் நியாயப்படுத்துவதற்கும் முதலில் கைவைப்பது ஊடக சுதந்திரத்தின்மீதே. இது தொடர்ச்சியாக நடந்துவரும் ஒன்று. மறுபுறம், தேசிய விடுதலைப் போராட்டத்துக்காகக் களமிறங்கிய அமைப்புகளும் தம் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காகவும் தம் வழிமுறையை நியாயப்படுத்துவதற்காகவும் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கத் தயங்கியதில்லை. இன முரண்பாடு உக்கிரமடைந்த கடந்த மூன்று தசாப்தத்துள்ளும் ஊடகத்துறை இவ்விரண்டு தரப்பினராலுமே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் வந்துள்ளது. எனினும் இன்றைய நிலையில் இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி அடிக்கிற வேலையை ஊக்கமுடன் செய்துவருவது மகிந்த ராஜபட்சேவின் அரசாகும்.
1981-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஈழநாடு நாளிதழ் எரிப்புடன் ஆரம்பித்த இந்த வன்முறை, 2006-ஆம் ஆண்டில் நமது ஈழநாடு நாளிதழின் பணிப்பாளரான சிவமகாராஜாவின் படுகொலைவரை தொடர்வது ஒரு காலகட்டம். ஈழநாடு ஒரு முக்கியமான நாளிதழ். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் செழிப்பானதொரு மாநிலப் பத்திரிகையுலகம் இருந்தது. ஈழநாடு இதழை எரித்தவர்கள் இலங்கைப் படையினர். பிற்பாடு 1987-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review வார இதழின் பணிமனையின் மீது இலங்கை விமானப்படை குண்டுவீசியது.
1987-ஆம் ஆண்டில் இந்தியப்படைகள்-விடுதலைப்புலிகள் இடையே போர் மூண்டபோது இந்தியப்படை முதலில் செய்த தாக்குதல் ஈழமுரசு மற்றும் முரசொலி அலுவலகங்களைக் குண்டு வைத்துத் தகர்த்ததுதான். The Hindu ஆங்கில நாளிதழ் இதைப் பற்றிச் செய்தி எழுதிய போது பின்வருமாறு தெரிவித்திருந்தது: "புலிகளின் ஊடகங்களை இந்திய அமைதிகாக்கும் படையினர் முதலில் அமைதிப்படுத்தினர்." ஊடக சுதந்திரம் பற்றிய பேச்சே இல்லை! பிறகு, ஈழமுரசு முகாமையாளர் அமிர்தலிங்கத்தை இழந்திருக்கிறோம். முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனை, இந்தியப்படையினருடன் இணைந்து ’பணி’புரிந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் கொன்றனர்.
இந்தியப்படை அதிகாரத்தைத் தம் கையிலும் மக்களைத் தம் காலின் கீழும் வைத்திருந்த காலகட்டத்தில் சண்முகலிங்கத்தை இழந்திருக்கிறோம். சண்முகலிங்கம் பண்பட்ட ஊடகவியலாளர். இந்தியப்படைகளும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (EPRLF) கோலோச்சிய காலங்களில் ஈழநாடு நாளிதழையும் அதன் ஆசிரியர்களையும் மாதக்கணக்காகத் தடுத்துவைத்திருந்து விடிவு என்னும் பெயரில் நாளிதழ் ஒன்றை வெளியிட்டனர். தடுத்துவைக்கப்பட்டு வேலைவாங்கப்பட்ட ஒருவர்தான் சண்முகலிங்கம். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகள் அமைப்பால் ’அழைத்துச்’செல்லப்பட்ட சண்முகலிங்கம் திரும்பி வரவில்லை.
இந்தியப்படையை வெளியேற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்குவந்த பிரேமதாசவின் காலத்தில் ஊடக சுதந்திரத்தின் மீதான சுருக்குக்கயிறு இன்னும் இறுகியது. 1971-ஆம் ஆண்டில் அரசுக்கெதிராக நடாத்திய கிளர்ச்சியில் தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) மீண்டும் ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்த காலம் இந்த 1987-1989 காலகட்டம். இப்போது அரசுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தார்கள் என்ற காரணத்தால் ஏறத்தாழ இருபதாயிரம் சிங்கள இளைஞர்கள் காணாமல் போயினர். தெருக்கள்தோறும் கழுத்தில் ரப்பர் டயர் சகிதம் இளைஞர்கள் எரிந்தார்கள்; ஆறுகள் எங்கும் சடலங்களாக மிதந்தார்கள்.
இவை குறித்துக் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்கும் ஆளானார்கள். 1990-ஆம் ஆண்டில் சிறந்த பத்திரிகையாளரும் நடிகரும் கவிஞருமான றிச்சர்ட் டி சொய்சா சுட்டுக்கொல்லப்பட்டார். சரிநிகர் வார இதழின் ஆரம்பக்கால உறுப்பினரும் செய்தியாளருமான குகமூர்த்தி ‘காணாமல்’ போகிறார். கம்யூனிஸ்ட் இதழான அத்த-வின் கேலிச்சித்திரக்காரர் யூனுஸ் கத்திக்குத்துக்கு ஆளாகிறார். சுனந்த தேசப்ரிய ஆசிரியராக இருந்த யுக்திய என்கிற சிங்கள மாற்றுப் பத்திரிகையின் அச்சகம் தீயிட்டுக்கொளுத்தப்படுகிறது.
ஒருவகையில் தென்னிலங்கையின் கொலையுதிர்காலமாக இருந்தது இந்தக் காலம். சிங்கள இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டதால் அழிவுற்றும் நலிவுற்றும் இருந்த மக்களின் கண்ணீரும் குருதியும் 1994-ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்கவின் சிம்மாசனத்திற்குக் கால்களாயின. வலதுசாரிகளும் இடதுசாரிகளும் அவர் சவாரிவிட்ட குதிரைகளாயின. அவருக்கு முன்பிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மக்கள் உதிர்த்த கண்ணீரும் குருதியும் காய்வதற்குள் சந்திரிகா சாட்டையைக் கையிலெடுத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் மிக அதிக காலத்துக்கு ஊடகங்கள்மீதான தணிக்கை அமலில் இருந்தது. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்குள்ளானார்கள். Sunday Times ஏட்டின் பாதுகாப்புப் பத்தி எழுத்தாளரான இக்பால் அத்தாஸ் வீட்டிற்கு மரண மலர்ச்செண்டு அனுப்பியது, அவருடைய அரசாங்கம். ரோகண குமார என்னும் ஊடகவியலாளரைக் கொன்றுபோட்டனர் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்.
2000-ஆம் ஆண்டில் புதிய கொலையுதிர்காலம் யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளரான நிமல்ராஜன் படுகொலையுடன் ஆரம்பமானது. 2000-ஆம் ஆண்டு ஒக்டோபர் 19-ஆம் திகதி இரவு அவர் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்த வேளையில் அவருடைய வீட்டிலிருந்து இருபக்கமும் கூப்பிடுதொலைவில் இராணுவக் காவலரண்கள் இருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிபிஸி, சிங்கள மாற்றுப் பத்திரிகையான ராவய ஆகியவற்றின் செய்தியாளராகவும் வட-இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தவர் நிமலராஜன். சர்வதேச ஊடக அமைப்புகளின் நெருக்கடியால் முன்னெடுக்கப்பட்ட இவரது படுகொலை தொடர்பாக விசாரணைகள் பின்னர் கிடப்பில் போடப்பட்டவையாகிவிட்டன. கடந்த எட்டு ஆண்டுகளிலும் இந்தப் படுகொலை விசாரணைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விக்கும் எந்தத் திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை.
2002-ஆம் ஆண்டில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான பிற்பாடு கிழக்கில் மட்டக்களப்பில் 2004-ஆம் ஆண்டு மே 31-ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் கிழக்கு மாகாணச் செய்தியாளராக இருந்த அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டார். 2005-ஆம் ஆண்டில் தமிழ்நெற் இணைய இதழ் ஆசிரியர் தர்மரட்ணம் சிவராம் என்ற தராக்கி கொல்லப்பட்டார். பம்பலப்பிட்டியில் வைத்து ஏப்ரல் 28-ஆம் திகதி இரவு அவரைக் கடத்திய கொலையாளிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நாடாளுமன்றத்திற்குப் பின்புறமாக அன்றிரவே அவரது சடலத்தை வீசியெறிந்துவிட்டிருந்தனர். இவரது கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் பிடிபட்டது. அவர் பயன்படுத்திய தொலைபேசியின் சிம் கார்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவேயில்லை.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான புகைப்படங்களையும் தகவல்களையும் அறிக்கையிட்ட சுப்பிரமணியம் சுகிர்தராஜன், 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதே காலப்பகுதியில் சம்பத் லக்மால் என்ற சிங்கள ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டார்.
சரிநிகர் பத்திரிகையின் ஊடகவியலாளரும் கவிஞரும் நிலம் என்கிற சஞ்சிகையின் ஆசிரியருமான சந்திரபோஸ் சுதாகர், 2007-ஆம் ஆண்டில் வவுனியாவில் அவரது வீட்டில் மகனுடன் உறங்கிக்கொண்டிருந்த போது படுகொலைசெய்யப்பட்டார். அவரது வீட்டுக்குச் செல்லும் வழியிலும் இராணுவக் காவலரண் ஒன்று இருந்தது. கொலையாளிகள் அதைக் கடந்துதான் சென்றிருக்க வேண்டும். ஆனாலும் இதுவரை கொலையாளிகள் யார் எனத் தெரியவில்லை என்று கைவிரித்துவிட்டது அரசாங்கம். இதே போன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளராக இருந்த ரஜிவர்மன், 2007-ஆம் ஆண்டில் ஏப்ரல் 29-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சிச் சேவையின் செய்தியாளராக இருந்த பரநிருபசிங்கம் தேவகுமார், 2008 மே 28-ஆம் திகதி படுகொலை செய்யப்படுகிறார்.
ஏற்கெனவே கொல்லப்பட்ட நிமல்ராஜன், குகமூர்த்தி ஆகியோருடைய படுகொலைகளோடு வானொலி அறிவிப்பாளராக இருந்த கே.எஸ். ராஜா, தினமுரசு ஆசிரியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அற்புதராஜா நடராஜா (அற்புதன்) ஆகியோரின் கொலைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன. வானொலிக்கலைஞராக இருந்த கணேச பிள்ளை, அன்ரனி ஜேசுதாசன், ரேலங்கி செல்வராஜா, பாலநடராஜ ஐயர் (சின்ன பாலா) ஆகியோருடைய கொலைகள் தொடர்பில் விடுதலைப்புலிகள்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபட்சே அரசாங்கத்தின் வருகை, ஊடக சுதந்திரத்தின் மீதான நெருக்கடியைப் பயங்கரமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தியது. ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கடுமையான தொனியில் உரையாடல் நடத்தித் தாம் விரும்பியவாறு ஊடகங்கள் செயல்பட நிர்ப்பந்திக்கும் போக்கு ஆரம்பித்தது. அதற்குச் சாத்தியமில்லாதபோது தமது முகவர்களின் ஊடாக அத்தகைய நிறுவனங்களை விலைகொடுத்து வாங்கிவிடுவதும் நடந்தது. நேசன் என்ற ஆங்கில இதழ் அவ்வாறு வாங்கப்பட்டது. அதுவும் சாத்தியமில்லாதபோது கொலைக் குழுக்களைக் கையாண்டு எச்சரிப்பது, தாக்குவது, படுகொலை செய்வது என அது வியாபித்தது.
Sunday Standard என்னும் ஆங்கில இதழும் மௌபிம என்னும் சிங்களப் பத்திரிகையும் மகிந்த ராஜபட்சேவின் அரசு நடாத்தும் போருக்கு எதிராகவும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்பாகவும் காட்டமாக அறிக்கைகளை வெளியிட்டதோடு சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தி வந்தன. இதனால் சீற்றம் கொண்ட அரசாங்கம் அதற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. மௌபிமவின் ஊடகவியலாளராக இருந்த பரமேஸ்வரி என்பவரை விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளியோடு தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தது அரசாங்கம். அப்பத்திரிகையின் நிதி முகாமையாளரான துஸ்யந்த பஸ்நாயக்கா என்பவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் வங்கிக்கணக்குகளை முடக்கியது. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் அவ்விரு இதழ்களையும் நடாத்த முடியாமல் மூட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது அந்நிறுவனம். இதழ்கள் மூடப்பட்ட பின்னர் கைதானவர்கள் குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படாமலே விடுவிக்கப்பட்டார்கள். இது நடந்தது 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம். 2006-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளர் சிவமகாராஜா சுட்டுக்கொல்லப்பட்டதோடு அப்பத்திரிகை மூடப்பட வேண்டியதாயிற்று. அதில் கடமையாற்றிய நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டார்கள்.
இதேபோல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான உதயன் பத்திரிகை பலமுறை தாக்குதலுக்கு இலக்காகியது. அதன் ஊழியர்கள், பத்திரிகை விநியோகிப்பவர்கள் என ஐந்துக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். இருவாரங்கள் முன்பு கொழும்பில் மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான M-TV நிறுவனத்தினுள் ஆயுததாரிகள் புகுந்து தாக்கியதுபோல, 2006 மே இரண்டாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள்ளும் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தில் அதன் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அலுவலகம் சேதமடைந்தது.
இது தவிரக் கொழும்பில் ஊடகவியலாளர்களான நாமல் பெரேரா, கெய்த் நொயார் போன்றோர் அரசின் கொலைக்குழுக்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் ரூபவாஹினி அலுவலகத்துள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது அடியாட்களுடன் நுழைந்து செய்தியாசிரியரைத் தாக்கியபோது ரூபவாஹினி ஊடகவியலாளர்கள் அமைச்சரை அறையொன்றினுள் வைத்துப் பூட்டிவிட்டனர். பின்னர் அரசத்தரப்பு அமைச்சர்கள் சமரசம் செய்து அமைச்சரும் அவரது அடியாட்களும் விடுவிக்கப்பட்டு வெளியில் அழைத்து வரப்பட்டனர். அமைச்சர் அங்கு நடந்துகொண்ட விதம் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடி நிகழ்ச்சியாகக் காட்டப்பட்டது. பின்னர் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். நீதிமன்றம் அமைச்சரையும் அவரது அடியாட்களையும் கைதுசெய்யப் பிடியாணை பிறப்பித்திருந்தும்கூட வழமைபோல அரசக் காவல்துறை, முறைப்பாடுசெய்த ரூபவாஹினி ஊழியர்களையே கைதுசெய்து விசாரணை என்னும் பெயரில் நெருக்கடி கொடுத்தது.
2008 மார்ச் ஆறாம் திகதி Outreach என்கிற இணையதள உரிமையாளரான ஜசிதரனும் M-TV தொலைக்காட்சியில் பணியாற்றிய அவரது துணைவியார் வளர்மதியும் கைதுசெய்யப்பட்டனர். ஜசிதரன் ஆரம்பத்தில் சரிநிகர் இதழின் மட்டக்களப்பு செய்தியாளராகக் கடமைபுரிந்தவர். ஏழாம் திகதி அதன் ஆசிரியர் ஜே.எஸ். திசநாயகம் கைதுசெய்யப்படுகிறார். எட்டாம் திகதி சரிநிகர் ஆசிரியரான சிவகுமார் விசாரணைக்கு அழைக்கப் படுகிறார். Outreach-இல் பணியாற்றிய மேலும் மூன்று ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்ளாகின்றனர்.
திசநாயகம், ஜசிதரன், வளர்மதி ஆகியோர்மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலே நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இக்கால கட்டத்தில் அவர்கள் கடும் சித்திரவதைக்குள்ளானதாக ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவர்களை விடுவிக்கக் கோரி நடாத்தப்பட்ட போராட்டங்களையடுத்து, பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர்கள்மீது வழக்குத்தொடர்ந்துள்ளது அரசு. அதேவேளை அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் அவர்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகத் தொடர்-பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகிறது.
அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்போரைப் புலிகளுடைய ஆதரவாளர்களாகச் சித்திரிக்கும் வழிமுறையினூடாக அவர்கள் தேசத்துரோகிகள் என நம்பவைக்கிற ஒரு பிரச்சாரத் தந்திரத்தை அரசாங்கம் கைக்கொள்ள ஆரம்பித்தது. போரில் கிடைக்கும் வெற்றிகள் இதற்குப் பலம் சேர்த்தன. இந்த வழிமுறையைத்தான் M-TV தொடர்பாகவும் அரசாங்கம் கையாண்டது. புலிகளுக்கு ஆதரவானது என்கிற ஒரு விடயமே அதன்மீதான தாக்குதலை நியாயப்படுத்திவிடும் என அரசாங்கம் நம்புகிறது. பயங்கரவாதப் பத்திரிகை, பயங்கரவாதத் தொலைக்காட்சி என்னும் சொற்றொடர்கள் இப்போது அரசின் தாரக மந்திரங்களாகிவிட்டன. இதே வழிமுறையையே ஜனவரி எட்டாம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விகரமதுங்கவைப் படுகொலை செய்யவும் அரசாங்கம் பயன்படுத்தியது. கொலை நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் விசாரணைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. அது நடைபெறப் போவதும் இல்லை. படுகொலைகள் தொடரப் போவதற்கான அறிகுறிகளே எஞ்சியிருக்கின்றன. 
இரண்டு தினங்களுக்கு முன்னரான ஜனாதிபதி மகிந்த ராஜபட்சேவின் பேச்சு இந்தப் படுகொலைகள் இத்துடன் நிற்கப்போவதில்லை என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. அவர் சொல்கிறார்: "பயங்கரவாதிகளைத் தோற்கடித்தாயிற்று. இனி அவர்கள் குறித்து அஞ்சத் தேவையில்லை. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் குறித்து நாம் விழிப்பாக இருப்பது அவசியம். தேசபக்தியைவிட முக்கியமான பத்திரிகை தர்மம் எதுவுமில்லை."
தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமல்ல; இலங்கையில் அதுதான் முதல் புகலிடம் என்று சொல்லத் தோன்றுகிறது. விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் குறித்துப் பேசுபவர்கள் அவர்கள் தமிழராக இருந்தால் என்ன, சிங்களவராக இருந்தால் என்ன அரசாங்கம் தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதை உணர்த்த மேலே எடுத்துக்காட்டிய கூற்று போதுமானது. இதுவரையான இருபது கொலைகள் தொடர்பான எவ்விதமான விசாரணைகளும் எவ்வித உண்மைகளையும் வெளிக்கொணராததுபோல, குற்றவாளிகளை இனம்காட்டாததுபோல, தொடரப்போகும் படுகொலைகளின் சூத்திரதாரிகள், கொல்லப்படுபவர்கள் புலி ஆதரவாளர்கள் என்கிற பிரச்சாரத்தினுள், மறைக்கப்பட்டுவிடுவார்கள்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுமணசிறி லியனகே சொல்வது போல சிறிலங்காவில் இரண்டு காரணங்களால் சுதந்திரமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நாங்கள் நம்புவதில்லை:
1. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலோ உண்மைகளை மூடி மறைப்பதிலோ கடந்த காலங்களில் இந்தப் பக்கச்சார்பற்ற, சுதந்திரமான விசாரணைகள் துயரார்ந்த வகையில் தோல்வி அடைந்துள்ளன.
2. சுதந்திரமான நிறுவனங்களால் பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகளை நடாத்தும் ஓர் அமைப்பை நியமிக்க எங்களிடம் எந்தவகையான பொறிமுறைகளும் இல்லை.
அவலம் தெறிக்கும் வகையில் முகத்தில் அறையும் உண்மைகள் இவை.
13.2.09
ஈழம் - தமிழ்க்கலைஞர்கள் டில்லி இலங்கைத்தூதரகத்தில் முற்றுகை, கைது
டில்லியில் உள்ள தமிழ் எழுத்தாளர் பிரேமுடன் சற்றுமுன் பேசியபோது கிட்டிய செய்தி -
டில்லி சாணக்கியபுரியில் உள்ள இலங்கைத்தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் முப்பது பேர் டில்லி போலீசாரால் கைது செய்யப்படுள்ளனர்.
மாணவர் அமைப்பினர், படைப்பாளிகள் லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி, கோணங்கி, யவனிகா ஸ்ரீராம், இன்பா சுப்பிரமணியன், அஜயன் பாலா, Living Smile வித்யா, மீனவர் அமைப்பாளர் லிங்கன், கருக்கல் சுரேஷ்வரன், உதவி இயக்குநர் திருமுருகன் உள்ளிட்ட முப்பது பேர் கைதாகியிருக்கின்றனர்.
முற்றுகையின்போது படைப்பாளி லீனா மணிமேகலை, "இந்திய அரசு இலங்கைக்கு முழுமையாக ராணுவ உதவியளித்து அங்கிருக்கும் ஈழமக்களை கொத்துத்கொத்தாகக் கொன்று குவிக்கின்றனர். உயிர்க்காற்றை உறிஞ்சும் க்ளஸ்டர் குண்டுகளை வீசி, குழந்தைகளையும் பெண்களையும் அங்கு கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று ஆவேசமாக உரையாற்றினார்.
போராட்டத்தினர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவின் உருவப்பொம்மையை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கைதானதைத் தாண்டிப் போராட்டம் தொடரும் என்று பிரேம் தெரிவித்தார்.
நேற்று டில்லி நாடாளுமன்றம் அருகில் இதே அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெல்லியில் போராடப்போவதாக அறிவித்தனர், ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர்.
ஈழம், இனி தடுப்புமுகாம்-அகதிமுகாம் வடிவத்தில்?
இலங்கைத்தீவின் போர்ப்பகுதியிலிருந்து ஓடிவரும் தமிழ்மக்களுக்கென ஐந்து ‘நல்வாழ்வு மையங்களை’, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் திறக்கும் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே மூன்று சிறிய தடுப்புமுகாம்களை நடத்திவரும் இலங்கை அரசுக்கு, இங்கே சுமார் மூன்றாண்டுகள் வரை தமிழ்மக்களைத் தடுத்துவைக்கும் திட்டமும் உண்டு.
ஆம், நிஜம்தான்! இதை இலங்கை அரசின் ‘பேரழிவு நிர்வாகம் மற்றும் மனித உரிமைச் செயலகம்’ (இந்தப்பெயருக்கு இலங்கை அரசு எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு நன்றிசொல்ல வேண்டும்) ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த முகாம்களை நடத்த இருவாரங்களாகப் பன்னாட்டு நிதியுதவி கேட்டும் வருகிறது. இதுபற்றிய மேல்விபரங்களைக் கொழும்பு அஸ்ஸோஸியேட்டட் ப்ரெஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் ரவி நெஸ்மன், லண்டன் டைம்ஸ் ஏட்டின் நிருபர் ஜெரமி பேஜ் ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள்.
The barbed wire returns
Barbed wire villages raise fears of refugee
concentration camps
மேற்குலக-இந்திய-தமிழக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் யாவர்க்கும் இந்தச்செய்தி நேற்றும் இன்றும் போய்ச்சேர்ந்துவிட்டது. ஆனால் இந்திய-தமிழக ஊடகங்களில் இன்று தேடிப்பார்த்தேன். இந்தச் செய்தி பெரிதாக வரவில்லை! என்ன அவமானம்! இனி கொழும்பிலுள்ள இந்திய ஏடுகளின் நிருபர்கள், இதற்கும் இலங்கை அரசின் மறுப்பை வாங்கி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.... அல்லது இதுசரிதான் என்ற தொடர்பிரச்சாரமும் நடக்கலாம்!
ஆனால் இலங்கை அரசுக்கு உதவும் மேற்குலக-இந்திய-சீன-ஈரான்-இந்திய-பாகிஸ்தான் அரசுகள், இதுபற்றி வாய்திறக்கவில்லை - இதுவரை. ஏன் இலங்கை அரசுடன் மோதிவரும் விடுதலைப்புலிகள்கூட, இதுபற்றி வாய்திறக்கவில்லை - இதுவரை. இலங்கை அரசின் இந்த முயற்சி்க்குப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் மாத்திரம் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்தக் கண்டனம் இந்த முகாம்களின் தீவிரத்தை ஒருவேளை குறைக்கலாமே ஒழிய, கள நிலவரத்தின் தீவிரத்தை, எதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளும்போது, இத்தகைய முகாம் ஏதோ ஒரு வகையில் வந்தே தீரும், அதுதான் ’தீர்வு’ என்ற பிரச்சாரமும் தொடங்கும் என்று படுகிறது.
இத்தகைய முகாம் என்ற வடிவம், காலனியக் காலத்தில் தொடங்கி நூற்றாண்டுகளாக நீடித்துவரும் ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிட்டிஷார்-போயர் (Boer) போரில் போயர் மக்களை இத்தகைய கம்பிவேலி முகாம்களில் பிரிட்டிஷ் தளபதி கிட்சனர் பிரபு என்பவர் அடைத்துவைத்ததை நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறது, லண்டன் டைம்ஸ் ஏடு. இந்தப்போரில் காந்தியார், பிரிட்டிஷ் ராணுவத்துக்காக ஆம்புலன்ஸ் நடத்தினார், செஞ்சிலுவைச் சங்கப் பணியாளராக இருந்தார், ஆனால் போயர் மக்களிடம்தான் தமக்குப் பரிவு என்று எழுதுகிறார். தம்முடைய அரசியல்-வாழ்வை மாற்றிய நிகழ்வுகளில் ஒன்றாகக் காந்தியார் இதைக் குறிப்பிடுகிறார் என்றாலும் ஏன் பிரிட்டிஷ் சார்பாக இருந்தார் என்பது பற்றி விவாதங்கள் ஓயவில்லை... அதேபோல ஸூலு மக்கள்மீதான போரிலும்.
போயர் போருக்குப்பிறகு துருக்கிய அரசு ஆர்மீனியர்களை இத்தகைய முகாம்களின் வைத்து வதைத்ததை அங்கே இன்றும் பேச முடியாத நிலை! அதற்குப் பிறகுதான் எத்தனை நிகழ்வுகள்.. சைபீரிய முகாம்களை ஃஸார் முடியாட்சியில் கண்ட ருஷ்யாவில், சோவியத் காலத்தில் ’குலாக்’ முகாம்கள் தொடர்ந்தன. போயர் போர் நடந்த தென்னாப்பிரிக்காவின் தலைமை, கறுப்பின மக்களை வெறிகொண்டு ஒடுக்கிய போதும் இப்படித்தான் அணுகியது.
நாஃஸி வதைமுகாம்களில் லட்சக்கணக்கான யூதர்கள் சிக்கிய தன்-வரலாற்றைக் கொண்ட யூதத்தலைமை, இன்று காஸாப்பகுதியை ஒரு முகாமாக மட்டுமே அணுகுவதுவரை...
லண்டன் டைம்ஸ் ஏட்டின் மேற்கண்ட கட்டுரையை எழுதியவர், இத்தாலிய அறிஞர் ஜோர்ஜியோ அகம்பென் (Giorgio Agamben) என்பவரின் ஆக்கங்களை வாசித்திருக்கிறார் என்று தெரிகிறது. இப்படி இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றையே அகதி முகாம்களின் வரலாறாகக் காண முடியும் என்கிறார் ஜோர்ஜியோ அகம்பென், தம்முடைய முகாம் என்ற முக்கியக்கட்டுரையில். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போயர் போரின் போதான முகாம்கள் மற்றும் க்யூபாவின் ஸ்பெயின் வைத்திருந்த முகாம்கள் பற்றிக் காட்டுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், தற்கால உலகின் உயிர்-அரசியல்-சட்டகமாக இருப்பது நகரமல்ல, இந்த முகாம்தான் என்கிறார் அகம்பென்.
அகம்பென் சிந்தனை, முற்றிலும் புதிதல்ல... ஃப்ரெஞ்சு அறிஞர் மிஷேல் ஃபூக்கோ, முகாம் என்ற வடிவம் பற்றி, ருஷ்ய ’குலாக்’ பற்றி எழுதியிருக்கிறார். அதன் ஒருவிதத் தொடர்ச்சிதான் இது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும்.
அதற்குமுன் - ஈழத் தமிழ்மக்களின் தாயகம் தடுப்புமுகாம்-அக்திமுகாம் வடிவத்திலா தொடரப்போகிறது.. என்பது உலகில் யாவரையும் அச்சங்கொள்ள வைக்கும் கேள்வி.
சாவைக் கோரும் உரிமையும் வாழ்வு மீதான அதிகாரமும் - மிஷேல் ஃபூக்கோ
அகம்பென் கட்டுரைகள் - ஆங்கில ஆக்கத்தில்
இரவுநடம் பல - ஸில்வியா ப்ளாத்
புல்லில் விழுந்த புன்னகை
மீளெடுக்க முடியாதது!
உன் இரவுநடத்தார்
தம்மைத் தொலைப்பதும்
எங்ஙனம்? கணக்கிலா?
ஆ,
தாவலும்
சுருள்பாய்ச்சலும்
என நிச்சயம் பயணி்ப்பார்!
அழகு புறத்தாகும்
உலகில் எப்போதும்
அமரமாட்டேன் முழுதாய்.
உன் சிறுமூச்சின்,
நனைந்த புல்லென்ப
உன் உறக்கத்தின் வாசத்தின்,
அல்லிமலர் பலதின்
பரிசும் அது.
அவர் தசைக்கு
ஏதுமில்லை உறவு.
அகந்தையின் தண்மடிப்பு பல,
லில்லி மலர்.
தன்னை மெருகேற்றுகிற புலி
புள்ளியுடன், சுடுஇதழ் பல பரவி.
வான்மீன் பல
தாண்ட உள்ள
வெளி அதிகம்
இத்தனை வேண்டாவெறுப்பும் மறதியும்!
உன் சைகை யாவும் செதிலாகும்.
நட்புடன்
மனிதத்துடன்
பிறகவர் வெளிர்சிகப்பின் ஒளியும்
குருதி கசிந்துரிய
ஸ்வர்க்கத்தின்
கறுத்த நினைவுமறதி பலதின்
ஊடே
என்னைக் கொடுப்பதும் ஏன்?
இந்த விளக்கும் கிரகமும் பல
ஆசிபோல் செதில்போல் வீழ
ஆறுமுகத்தில்
என் கண்ணில், உதட்டில், முடியில்
வெண்மை
தொட்டுருகி
எங்குமின்றி.
--- Sylvia Plath, Night dances.
12.2.09
ஈழம் - டில்லியில் இன்று நடந்த போராட்டம்
டில்லியிலிருந்து லீனா மணிமேகலை அனுப்பிய செய்தி
இன்று காலை டில்லி இந்திய நாடாளுமன்றத்தின் எதிரே, ஈழத்தமிழர் தோழமைக்குரல் கூட்டமைப்பைச் சார்ந்த சுமார் நூறு பேர், முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி, பிறகு ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்-உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு- புதுச்சேரியிலிருந்து சென்ற தமிழ் எழுத்தாளர்கள், பெண்கள், கலைஞர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மீனவர் பெருமக்கள், அரவாணியர் ஆகியோரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’ஈழத்தமிழ்மக்களின் இனப்படுகொலையை நிறுத்து, இலங்கை அரசுக்கு ராணுவ உதவியை நிறுத்து, ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு அங்கீகாரம் வழ்ங்கு’ என்ற முழக்கங்கள், பதாகைகளுடன் கறுப்பு ஆடை அணிந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை, ‘போருக்கு உதவுது காந்தியின் தேசம், குருதியில் மூழ்குது புத்தனின் தேசம்’, ‘முதல் போர்க்குற்றவாளி ராஜபட்க்ஷேவைக் கைதுசெய்’, ‘சிறிய விளம்பரத்துக்குப் பின் போர் தொடரும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் முழக்கங்கள் இட்டவாறும் இவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலம், கலாச்சாரக்குழுவினரின் மேளமும் நடனமும் சூழ, டில்லி மண்டி இல்லத்தில் தொடங்கி நாடாளுமன்ற வீதி வரை சென்று அங்கிருந்த யாவரையும் கவர்ந்தது. பிறகு நாடாளுமன்றத்தின் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் இதைச் செய்தியாக்கினர்.
எழுத்தாளர்கள் கோணங்கி மற்றும் பிரேம், மக்கள் சிவில் உரிமை அமைப்பின் பொன் சந்திரன், மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், மீனவர் அமைப்பைச் சார்ந்த லிங்கன் உள்ளிட்ட பலர் எழுச்சியுடன் உரையாற்றி, இலங்கையில் இந்திய ராணுவ உதவியுடன் நடக்கும் போரை உடன் நிறுத்த வேண்டும் என்று முழங்கினர். டில்லி தமிழ் மாணவர் தலைவர் ஆதிகேசவன் இந்தி மொழியில் பேருரையாற்றி, ஈழத்தமிழ் மக்கள் படும் துயரை விளக்கினார். டில்லி வாழ் சாமானிய மக்கள் இந்தப்போராட்டத்தையும் இந்தப் பேருரையையும் கவனித்துக் கேட்டது, முக்கியமானது.
இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிப் போராடிவரும் பெண்கள் அமைப்பினர், மற்றும் டில்லி மக்கள் சிவில் உரிமை அமைப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவளித்தனர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கிறது.
மரணமும் கடிதமும் தரும் செய்தி - தமிழவன்
தமிழ்ச்சமூகம் அதன் மொழிசார்ந்த உணர்வுகளால் கட்டியமைக்கப்பட்டது. உணர்வும், மொழியும் அறிவும் பின்னி அமைந்த ஒரு புராதன சமூகம்.
எனக்கு இப்படிப்பட்ட நினைவுகளை மீண்டும் எழுப்பிய நிகழ்ச்சி, முத்துக்குமார் என்ற இளைஞரின் செயல். தன்னைக்கொன்று ஒரு மக்கள்கூட்டத்தின் அடிமன உணர்வை உலகத்துக்குப் புரியவைத்த செயல்.
பல தற்கொலைகளைப் போன்றதல்ல இச்செயல். இவருடைய உதாரணம் பிற இளைஞர்களால் பின்பற்றத்தக்கதல்ல. ஆனால் நடந்துவிட்ட இச்செயல் ஒரு பிரதி; ஒரு எழுத்து. ஒரு எழுத்தை எப்படி பலவித வியாக்கியானங்களுக்கும் உட்படுத்துகிறோமோ அப்படி இம்மரணம் பல வியாக்கியானங்களுக்கும் (அல்லது உரைகளுக்கும்) உட்படுத்தப்படுவது தவிர்க்கவியலாதது.
அடுத்து முக்கியமானது அந்தக் கடிதம். அந்தக்கடிதத்தையும் மரணத்தையும் இணைத்துத்தான் பார்க்கவேண்டும். வேறு சில மரணங்களும் இந்த மாதிரி நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள். மொத்த சமூகத்தின் குணம் இந்த மரணத்தாலும் கடிதத்தாலும் வெளிப்படுகிறதென்று நான் நினைக்கிறேன்.
லசந்த விக்ரமதுங்க என்ற சிங்களப் பத்திரிகையாசிரியன் மரணம், சில ஆண்டுகள் முன்பு சிவராம் என்ற பத்திரிகையாசிரியர் மரணம் பற்றி எல்லாம் இலங்கையிலிருந்து செய்திகள் வந்தன. எனக்கென்னவோ லசந்த என்ற பத்திரிகையாளரான சிங்களவரின் மரணமும் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளன் மரணமும் இணைத்து வைத்துப் பார்க்கத்தக்கவையாகத் தென்படுகின்றன. லசந்த, சிங்கள அரசின் அமைப்பைக் காக்க நினைப்பவர்களால் கொல்லப்பட்டார். முத்துக்குமார் இன்றைய தமிழக அரசிலுள்ளவர்களின் இந்திய அரசு பற்றிய அறியாமையால் கொல்லப்பட்டார். ஒன்று சிங்கள அரசின் கொலை; இன்னொன்று, மறைமுகமாக, இந்திய அரசின் கொலை.
சமீபத்தில் நவ-மார்க்சிய அறிஞர் டேவிட் மிலிபண்டின் மகனும் தற்போது இங்கிலாந்து அமைச்சராக இருக்கும் ரால்ஃப் மிலிபண்ட் மூலமாகவும் ஓபாமாவின் கருத்துக்களாலும் இந்திய அரசின் தனிக்குணம் என்பதை அறியமுடியும். இங்கிலாந்தும் அமெரிக்காவும் காஷ்மீர் பற்றிக் கூறும் கருத்துக்களை இந்தியா ஏற்கவில்லை. காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகள், அஸ்ஸாம், மணிப்பூர் பகுதிகளின் பிராந்திய கலாச்சாரம், இந்திய தேச நவீனத்துவத்தை ஏற்கவில்லை. இறுகிய ஒற்றைத்தேசம் என்ற பன்மையற்ற கதையாடலைத்தான் (mono-cultural narrative) தான் இந்தியா விரும்புகிறது. காஷ்மீர், அண்ணாதுரையின் திராவிடஸ்தான் போன்ற கருத்தாக்கங்களுக்கிடையில் ஒற்றுமைகள் உண்டு.
1962-ஆம் ஆண்டு மே முதல் நாள் அண்ணாதுரை நிகழ்ச்சிய நாடாளுமன்ற உரையில் வந்த தேசம் என்ற சொல் உணர்த்துவது, ஒரு பின்நவீனத்துவ பன்முகக்கதையாடலைத்தான். அவர் சொல்லுகிறார்:
But the time has come for a rethinking for a reappraisal, for a re-valuation and for a reinterpretation of the word "nation".
இந்தியா தென்னாசியா, தென்கிழக்காசியாவில் ஒரு பெரிய அரசாக உருவாவதோடுதான் பிரச்னைகளைப் பார்க்கவேண்டும் என்ற குறிப்பு அண்ணாதுரையின் ‘தேசம்’ என்ற மறு வியாக்கியானத்தில் இல்லை என்றாலும் அன்றைய தேச-உருவாக்கம் என்ற கருத்தை ஆழமாக அண்ணாதுரை யோசித்திருப்பது புரிகிறது.
முத்துக்குமாரின் கடிதம், 1965-ஆம் ஆண்டில் இந்தித்திணிப்பை எதிர்த்த மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் எனக் குறிப்பிடுவது முக்கியமானது. அண்ணாதுரை நின்று நடத்திய இந்தித்திணிப்பு-எதிர்ப்போடு இன்றைய ஈழப்போராட்டம் சார்ந்த தமிழக உணர்வை அவர் கடித வரி இணைக்கிறது. 1965-ஆம் ஆண்டில் இந்தித்திணிப்பு எதிர்ப்பில் காங்கிரசார் செய்த அதே காரியத்தை 2009-ஆம் ஆண்டில் காங்கிரசார் என்ற ஒரு சில தமிழர்கள் செய்கிறார்கள்.
அண்ணாதுரை ஆரம்பித்த ‘இந்திய ஃபெடரலிசம்’ என்ற சிந்தனை வலுவாகத் தமிழகத்தில் உருவாகியிருந்தால் டில்லியிடம் கருணாநிதி கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய எதிர்கால தென்கிழக்காசியப் பிராந்திய மேலாண்மைக்காக இந்தியா பயணப்படும் செயல்சார்ந்த விமரிசனமாக, முத்துக்குமாரின் இந்தியப்படையினர் பற்றிய விமரிசனம் அமைகிறது. இலங்கைத் தமிழ்ப்பெண்களுடன் நடந்துகொண்ட முறையும் அஸ்ஸாமில் நடந்து கொண்ட முறையும் பற்றிய முத்துக்குமார் கருத்துக்கள் இந்தியப்படைகளைப் பற்றிய பாலியல் விமரிசனம் மட்டுமல்ல. வேறு அர்த்தம் உருவாகிறது - அதாவது ஜியார்ஜியோ அகம்பென் (Giorgio Agamben) என்ற இத்தாலிய தத்துவவாதியின் உயிர்-அரசியல் (biopolitics) சார்ந்த அர்த்தம் தோன்றுகிறது. அகம்பென் பிறப்பையும் சாவையும் அரசு, கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுபோல் நியாயத்தையும் புதிய வியாக்கியானத்துடன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறது என்கிறார். செப்டம்பர் 11-ஆம் நாள், அமெரிக்காவில் இரட்டைக்கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு அமெரிக்கா உலகமெங்கும் இந்தப் புதிய நியாயத்தைப் பரப்பியது என்கிறார்.
முத்துக்குமாரின் கடித வரிகளுக்குள் இருக்கும் உள்ளுறைந்த அர்த்தம் இதுதான். இந்தியா இந்தப் பிராந்தியத்தில் - அது ஈழத்துக்கு ஆயுத உதவி வழங்குவதானாலும் சரி, அஸ்ஸாமில் பெண்களைத் தொல்லைக்குள்ளாக்குவதானாலும் சரி - புதிய அரச நியாயத்தை உருவாக்க முயல்கிறது என்கிறார்.
அன்று அண்ணாதுரை தேசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இன்று முத்துக்குமார் தம் கடித வரிகளின் மூலம் உள்ளுறையாக இந்தியத் தேசத்தின் பிராந்திய ஆதிக்க சக்தியாகும் ஆசையை இனம்காண்கிறார். அதனோடு ராஜீவ் காந்தி, இன்றைய தமிழக அரசியல், அதன் பல்வேறு கட்சிகள், அதன் தலைவர்கள் என்று ஒரு பார்வையை முன்வைக்கிறார்.
தமிழ்-தமிழர் நலம் என்பவை இந்தப் பிராந்திய ஆசைக்கு எதிரானது என்று டெல்லி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். இந்தித்திணிப்பு-எதிர்ப்பு என்பது ஒரு மொழியை எதிர்ப்பதல்ல. அது ஒரு தமிழ் வரலாற்றுத் தத்துவம். ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்தை உலகமெங்கும் பரப்பும் தத்துவம் அது. இந்தித்திணிப்பு எதிர்ப்பு என்பதை பெரியாரும் அண்ணாதுரையும் பெருந்தேசியத்துக்கெதிரான நடவடிக்கையாகப் பார்த்தார்கள்.
திராவிட அரசியலை, கருணாநிதி அண்ணாவின் பரம்பரையில் முன்னெடுத்தார் என்பதில் நிறைய நியாயம் உண்டு. ஆனால் இந்தியப் பெருந்தேசிய ஆசை உருவான பிறகு மாநிலங்கள் தங்கள் தங்கள் கலாச்சார வேறுபாடுகளை விட்டுவிட்டு அனைத்திந்திய-கலாச்சாரமற்ற அல்லது இந்திக் கலாச்சார அமைப்பை உருவாக்க முன்வந்துள்ளன. அண்ணாதுரையும் கருணாநிதியும் இந்தக் கலாச்சார அரசியலைப் பல தியாகங்களுடன் முன்னெடுத்தார்கள். ஆனால் ஈழத்தமிழ் பிரச்சினையில் திராவிட கலாச்சார அரசியல் ஆட்டம் கண்டுள்ளது. கருணாநிதி அண்ணாதுரை பாரம்பரியத்தைக் காப்பாற்றுவாரா இல்லையா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.
இன்னொரு நோக்கிலிருந்து பார்க்கும்போது தமிழ், அகில உலகத்தன்மையை மிக விரைவில் பெற்றுள்ளது. எங்கோ ஒரு தீவில் நடக்கிற செயல் என்பது மாறி இந்தியா, ஈழம், மலேசியா, ஐரோப்பிய நாடுகள் என்று ஒரு பரப்பு திடீரென உருவாகியுள்ளது. முத்துக்குமார், இன்றைய ஊடக வளர்ச்சியால், ஒரே நாளில், அகில உலகத் தமிழர்களை ஒன்றிணைத்திருக்கிறார். இத்தகைய செயல் ஒன்றை இந்தித்திணிப்பை எதிர்த்த கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் செய்யவில்லை. இன்னும் மலையகத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் ஒரே அடையாளமாக மாறவில்லை என்பதும் கவனம் கொள்ளத்தக்கதாகும். இரண்டு பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் ஏன் (ஒரே நாட்டுக்குள்) ஒன்றிணையவில்லை என்பதும் சரியான கேள்விதான்.
முத்துக்குமார் செய்த தீக்குளிப்பு பிற தீக்குளிப்புகளிலிருந்து தனித்துப் பார்க்கத்தக்கது. தீக்குளிப்பும் கடிதம் என்ற அறிவுரீதியான சொல்லாடலும் இங்கே இணைகின்றன.
அகில உலக அளவிலும் ஈழத்தமிழர்களின் நிலைமை கவனத்துக்குள்ளாகியுள்ளது. எட்வர்ட் டேவி என்ற பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில், இந்த உறுப்பினர், காஸா பகுதியில் இஸ்ரேலைப் போர்நிறுத்தம் செய்ய வைப்பதில் வெற்றிபெற்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை-விஷயத்திலும் போர்நிறுத்தம் கொண்டுவரும்படி கூறியுள்ளார். அதாவது அனைத்துலகக் கவனத்தை ஈழத்தமிழ்ப் பிரச்னை ஈர்த்துள்ளது. ஆனால் அருகில் இருக்கும் இந்தியாவில் முக்கியமான ஆளும் கட்சிக் கூட்டணியின் உறுப்பினர் தமிழகத்தின் திமுக எனினும் மத்திய அரசு ஈழத் தமிழ்மக்களின் துயரத்தைத் தீர்க்க முன்வரவில்லை. திராவிடக்கட்சி கோட்பாட்டுக் காலம் முடிந்துவிட்டதை இது காட்டுகிறதென்ற பார்வைதான் சரியானதா என்றும் தெரியவில்லை. திமுக என்ற உணர்வின் அடிவேரில் புழு விழுந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
இலங்கையிலிருந்து ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ஜெர்மன் நாட்டுத் தூதுவரும் ஸ்விஸ் நாட்டு தூதுவரும் இலங்கையிலிருந்து துரத்தப்படும் நிலை உள்ளது என்று கோத்தபாய ராஜபக்ஷ என்ற இலங்கை அதிபரின் சகோதரர், ராணுவத்துறைச் செயலர் தெரிவித்திருக்கிறார். பிபிசியைச் சார்ந்த நிருபர் கிறிஸ் மோரிஸ் என்பவரை விரட்டப்போகிறாராம். ஆனால் இந்தியத் தூதுவரைத் துரத்தப்போவதில்லை. ஏனெனில் இவர் ஒழுங்காக நடந்துகொள்பவர்.
ஜெர்மனியும் ஸ்விட்சர்லாந்தும் ஈழப்புலிகளின் நண்பர்களா? இல்லை. அந்நாட்டுத் தூதுவர்கள். நியாயத்தைப் பேசுகிறார்கள். இந்தியாவும் அனைத்துலகப் பார்வையில், தனது பிராந்திய ஆசையால், சரியான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டு செயல்படவில்லை. திமுக போன்ற முக்கியமான இந்தியக் கூட்டணிக் கட்சி இந்திய வெளிவிவகாரக் கொள்கைபற்றிக் கவலைபடாதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது புரிகிறது.
நாராயணன், மேனன் போன்றோர் வெளிவிவகாரத்துறையில் கருத்து உருவாக்கி கருணாநிதியை முடக்க முடிகிறது ஏன் என்று இளந்தலைமுறை திமுக-வினராவது யோசிக்க வேண்டும். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் கருணாநிதி அறிந்து வைத்திருப்பது பெரிய விஷயம்தான். ஆனால் சங்க இலக்கியத்தை இவர் குறுகிய முறையில் படிக்கிறார். வள்ளுவரையும் அப்படித்தான். சரியாகப்படிப்பது என்பது வெளிவிவகார அறிவை மேற்கொள்வது. எந்த தமிழகப் பல்கலைக்கழகத்திலாவது வெளிவிகாரக் கல்வித்துறை உண்டா, இல்லை என்றே கருதுகிறேன். திமுக-வின் கோட்பாட்டுவளையத்தில் வெளிவிவகாரக்கல்வி முக்கியமானதாக ஆக்கப்பட்டிருந்தால் அத்தகைய அறிவுள்ள தமிழர்கள், இந்தியா-இலங்கை உறவை வேறு வகையில் உருவாக்கியிருப்பார்கள். இந்திரா காந்தி காலத்தில் ஜி. பார்த்தசாரதியால் வேறு முறையில் வெளிவிவகார அறிவு சமைக்கப்பட்டது. அதன் விளைவு எப்படி இருந்தது என்று நாம் அறிய முடிந்தது. ராஜீவ் கொலை அல்ல வெளிவிவகார அறிவுத்துறையை சிங்களர்களுக்கும் ராஜபட்க்ஷேவுக்கும் ஆதரவாக மாற்றியது. பிராந்தியம் பற்றிய ஒரு வகையான கணிப்பு. அந்தக் கணிப்பு தவறு என்று மன்மோகன் சிங்குக்கு, ப. சிதம்பரமோ வேறு யாரோ கூற முடியும். அதற்கான தரவு சேகரிக்காதிருப்பதில் இப்போது இந்தியா தவறு செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஐக்கிய நாடுகள் மன்றமும் ஜெர்மனியும் ஸ்விட்சர்லாந்தும் வேறுபார்வையை மனித அவலத்தின் அடிப்படையில் உருவாக்குகிறார்களெனில் இந்தியாவுக்கு அது ஏன் முடியவில்லை?
பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவேளை தமிழர்கள் சார்பான வெளிவிவகாரக் கொள்கை வரலாம் அல்லது வடநாட்டுப் பார்வை தொடர்ந்தால் ஒருவேளை வராமல் போகலாம். காங்கிரஸும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்தியாவை ஒரு தொழில்-நுட்பம், அதிகார வர்க்கம் என்ற ‘அ-கலாச்சார’ முறையில் கற்பனை செய்கின்றன. பாரதீய ஜனதாவின் பண்பற்ற, பிராந்தியம் சார்ந்த கலாச்சாரங்களின் கட்டமைப்பாய் இந்தியாவைக் கற்பனை செய்வதுதான் மாநில அரசுகளுக்கு நல்லது. மொழிவாரி மாநிலம் தோன்றியதன் தர்க்கம் இது. மொழிவாரி மாநிலத்தை எதிர்த்த ராஜாஜியின் அரசியல் பார்வைவழி சோனியாவின் இந்தியப்பார்வை அமைகிறது.
இந்த மாதிரி யோசிக்க வேண்டிய வேர்க்கூறுகளைக் கொண்டிருக்கிறது முத்துக்குமார் என்ற இளைஞனின் கடிதம். அறிவுசார் இயல்புணர்வு இந்த இளைஞனிடம் உள்ளது. இப்படிப்பட்டவர்களின் இழப்புத்தான் தமிழகத்தின் இழப்பு.
முத்துக்குமாரின் கடிதத்தில் ஒரு திருக்குறள் வருகிறது - அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. கருணாநிதியின் திருக்குறள் மேற்கோளுக்கு எதிர்ச்செயலாக முத்துக்குமார் இக்காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட கால நிகழ்வுகளுடன் திருக்குறளை இணைப்பது என்ற செயலில் முத்துக்குமாரும் கருணாநிதியும் ஒரே தளத்தில் செயல்படுகிறார்கள் என்று கருதுகிறேன். ஒருவகையில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவர் முத்துக்குமார், உருவகரீதியில் தந்தையை எதிர்க்கும் மகன் எனலாம். புலிகளின் மறம் அவர்களின் அறம் சார்ந்த செயலின் தர்க்க நீட்சியே என்கிறார் முத்துக்குமார். இது தமிழர்களின் பார்வைதான். அறமும் மறமும் பின்னிப் பிணைந்த மரபு.
முத்துக்குமாரின் கடிதமும் மரணமும் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கின்றன.
படங்கள் - முத்துக்குமாரின் கடிதத்தில் குறள், லஸந்தாவுக்கு மனைவி சோனாலி அஞ்சலி
நன்றி - உயிரோசை
உயிரினத்தின் தோற்றத்துக்கு வயது இருநூறு! - 1
இயற்கை-வரலாற்று ஆராய்ச்சிக்காக ஹெச். எம். எஸ். பீகில் கப்பலில் நான் பயணித்துக்கொண்டிருந்தபோது, தென்னமெரிக்காவின் உயிரினங்கள் செறிவாகப் பரந்திருப்பது பற்றிய சில உண்மைகள் என்னைப் பெரிதும் தாக்கின. அந்தக் கண்டத்தின் தற்போதைய உயிரினங்கள் மற்றும் க்டந்தகால உயிரினங்கள் இடையிலான புவியியல்-உறவுகள் என்னைப் பெரிதும் தாக்கின. இந்த உண்மைகள், உயிரினங்களின் தோற்றம் என்ற மர்மம் குறித்து சற்றே ஒளிபாய்ச்சுவதாக எனக்குத் தோன்றியது. உயிரினங்களின் தோற்றம்தான் மர்மங்களிலேயே அதிமர்மம் என நம்முடைய மாபெரும் தத்துவ அறிஞர் ஒருவர் கூறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது!
1837-ஆம் ஆண்டு நாடு திரும்பியவுடன் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இந்த விஷயத்துக்குத் தொடர்புள்ள பலவித உண்மைகளையெல்லாம் பொறுமையாகத் தொகுத்து அவை பற்றிச் சிந்தித்தால் இந்தக் கேள்வி பற்றி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். ஐந்தாண்டுப்பணிக்குப் பிறகு, இந்த விஷயம் குறித்த யூகத்தைச் செய்ய என்னை அனுமதித்துக்கொண்டு, சில குறிப்புகளை வரைந்தேன். 1844-ஆம் ஆண்டில் இவற்றை இன்னும் விரித்து, முடிவுகளாக வரைந்துகொண்டேன். இந்த முடிவுகள் சாத்தியம் என அப்போது எனக்குத் தோன்றியது. அந்தக் காலகட்டம் தொடங்கி இன்றுவரை இதே விஷயம் குறித்து சீராக ஆராய்ந்துவருகிறேன். இந்தத் தனிப்பட்ட விபரங்களில் நுழைவதற்கு என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்த ஒரு முடிவுக்கும் அவசரமாக நான் வந்துவிடவில்லை என்பதைக் காட்டத்தான் இவற்றை இங்கே தருகிறேன்.
என் ஆய்வு ஏறத்தாழ முடிந்துவிட்டது, ஆனால் அதை முறையாக முடித்துவைக்க இன்னும் இரண்டுமூன்று ஆண்டுகள் எனக்குத் தேவைப்படும். என் உடல்நலம் அத்தனை நன்றாக இல்லை என்பதால் இந்தச் சுருக்கத்தை வெளியிடுங்கள் என்று என்னைக் கோருகிறார்கள். குறிப்பாக, இதைச் செய்யுமாறு வாலஸ் (1) என்னைத் தூண்டிவருகிறார். மலாயா தீவுக்கூட்டத்தின் இயற்கை-வரலாற்றை ஆராய்ந்துவருபவர் இவர். உயிரினங்களின் தோற்றம் குறித்து நான் வந்தடைந்த பொதுவான இதே முடிவுகளை ஏறத்தாழ இவரும் கண்டடைந்திருக்கிறார். கடந்த ஆண்டு இதுகுறித்த ஒரு குறிப்பை எனக்கு அனுப்பியிருந்தார். இதை, ஸர் சார்ல்ஸ் லயலுக்கு (1) அனுப்புமாறு என்னை வேண்டியிருந்தார். ஸர் சார்ல்ஸ் லயல் இந்தக்குறிப்பை லின்னேயன் சங்கத்துக்கு (Linnean Society) அனுப்பியிருந்தார். இந்தச் சங்கத்தின் சஞ்சிகையின் மூன்றாம் தொகுதியில் அது வெளியாகியிருக்கிறது.
ஸர் சார்ல்ஸ் லயல் மற்றும் டாக்டர் (ஜோஸஃப் டால்டன்) ஹூக்கர் (2) இருவரும் என் ஆராய்ச்சி பற்றி அறிந்தவர்கள். குறிப்பாக டாக்டர் ஹூக்கர், 1844-ஆம் ஆண்டு நான் எழுதிய வரைவை வாசித்திருக்கிறார்; ஆக, என் கையெழுத்துப்படிகளின் தேர்ந்தெடுத்த சுருக்கமான பகுதிகளை, வாலஸ் எழுதிய மேற்கண்ட குறிப்புடன் சேர்த்து வெளியிடலாம் என்று ஆலோசனை கூறிருப்பது என்னைக் கௌரவிப்பதாகும்.
நான் தற்போது வெளியிடும் இந்தச் சுருக்கம், நிச்சயம் முழுமையற்றதான ஒன்று. அப்படித்தான் இருக்க முடியும். இங்கே என் கூற்றுகள் பலதுக்கு அடிப்படைச் சான்றுகள், மேற்கோள்கள் தர என்னால் முடியவில்லை. என் ஆராய்ச்சியின் கறார்த்தனம், துல்லியம் குறித்து வாசகர்கள் சற்றே நம்பிக்கை கொள்வார்கள் என்று நான் நிச்சயம் கருதுகிறேன். இங்கே தவறுகள் சில இங்கே நேர்ந்துவிடலாம் - எனினும் கறாரான சான்றுகளை மாத்திரம் ஏற்பது என எச்சரிக்கையுடன் செயல்பட்டிருப்பதாக நம்புகிறேன்.
நான் வந்தடைந்திருக்கும் பொதுவான முடிவுகளையும் இவற்றை விளக்க சில உண்மைகளையும் மாத்திரம் இங்கே தந்திருக்கிறேன். பெரும்பாலான இடங்களில் இவை போதும் என்று நம்புகிறேன். என் இந்த முடிவுகளுக்கு ஆதாரமான உண்மைகள் யாவற்றையும் சான்றுகளுடன் விபரமாக இனி வெளியிடவேண்டிய தேவையை, அதன் பொருளை, என்னைவிட யாரும் அதிகமாக உணர முடியாது! வருங்காலத்தின் இந்தப்பணியைச் செய்வேன் எனக் கருதுகிறேன். இதிலிருக்கும் உண்மைகள், சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை. அப்படியல்லாத விஷயம் ஒன்றுகூட இதில் இல்லை. எனவே நான் அடைந்த முடிவுகளுக்கு நேரெதிர் முடிவுகளை நோக்கிச் செல்லும் சாத்தியம் எனக்கில்லை. சொல்லப்போனால், இங்குள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கான இருதரப்பு பதில்களின் உண்மைகள் மற்றும் சான்றுகளை முன்வைத்துச் சமநிலையில் ஆராய்ந்தால் மாத்திரமே நியாயமான முடிவை எட்ட முடியும். அதை இங்கே செய்யச் சாத்தியமில்லை.
இயற்கையியல் அறிஞர்கள் மிகப்பலர் - குறிப்பாக என்னை நேரடியாக அறிந்திராத அறிஞர்கள் சிலர் - எனக்கு வாரி வழங்கிய உதவியை முற்றும் அங்கீகரித்து எழுத வேண்டும்; ஆனால் அதற்கு இங்கே இடமில்லாததால் அதைச் செய்யமுடியாமல் போய்விட்டது என்பதற்குப் பெரிதும் வருந்துகிறேன். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டாக, தம் நுண்மாண் நுழைபுலம் மூலமாக, சாத்தியமாகும் வழிகள் யாவிலும் எனக்கு உதவிவரும் டாக்டர் ஹூக்கர் அவர்களுக்கு என் ஆழ்ந்த கடப்பாட்டைத் தெரிவிக்க எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடப் போவதில்லை!
உயிரினங்களின் தோற்றத்தை ஆராயும் இயற்கை-வரலாற்று அறிஞர் என்பவர் எப்படிச் செயல்படுகிறார்? உயிரினங்களின் பரஸ்பரப் பிணைப்புகள் மற்றும் இவற்றின் கருவியல் உறவுகள், புவிப்பரப்பில் செறிவாகவும் குறைவாகவும் பரந்திருப்பது, புவியியல்ரீதியான மரபுத்தொடர்ச்சி மற்றும் பிற உண்மைகளை இவர் ஆராய்கிறார். இப்படி ஆராய்ந்து வருவோர் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனித்துத் தோற்றுவிக்கப்படவில்லை, மாறாக, பல வகைகளாக, மற்ற உயிரினங்களிலிருந்து உருவானவை, என்ற முடிவுக்கு வருவதைப் புரிந்துகொள்ள முடியும். எனினும், இத்தகைய முடிவுக்குச் சான்றுகள் இருந்தாலும் இது திருப்தியளிப்பதாக இல்லை. உலகிலுள்ள எண்ணற்ற உயிரினக்கள் யாவும் இப்படி மற்ற உயிரினங்களிலிருந்து உருவாகி, மாறி வந்தவை, இப்படித்தான் இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும் பரஸ்பரத் தகவமைப்பிலும் நாம் பாராட்டும் இந்த முழுமையைத் தம் வசமாக்கியிருக்க முடியும் என்று காட்டும் வரை இதில் திருப்தி ஏற்பட முடியாது. 
உயிரினங்களின் தோற்றம் குறித்து ஆராயும் இயற்கை-வரலாற்று அறிஞர்கள் பலர் தொடர்ந்து புறச்சூழல் பற்றியே பேசி வருகின்றனர். இவற்றில் பருவநிலை, உணவு உள்ளிட்ட விஷயங்களை உயிரின-மாற்றத்துக்கான புறக்காரணம் என்கின்றனர். இது உண்மையாக இருக்கலாம் - ஆனால் குறிப்பிட்ட ஒரு பொருளில் மாத்திரமே. மாறாக, மரங்கொத்திப் பறவையை எடுத்துக்கொள்வோம்: அதன் கால்கள், வால், அலகு, நாக்கு ஆகியவற்றின் அமைப்பென்பது, மரப்பட்டைகளுக்கு அடியில் மறையும் பூச்சிகளை லபக்கென்று கவ்விப்பிடிக்க ஏதுவாக அமைந்தது. இதற்கு புறச்சூழல் மாத்திரமே காரணம் என்ற விளக்கதை அளிப்பது, அறிவுக்கும் இயல்புக்கும் புறம்பானதாகும்.
இதேபோல புல்லுருவிச்செடியை எடுத்துக்கொள்வோம்: இது சில மரங்களிலிருந்து தன் சத்தைப் பெறுகிறது. இதன் விதைகளைச் சில பறவையினங்கள் தூக்கிச்சென்று பரப்புகின்றன. இதன் பூக்களுக்குத் தனித்தனி பால்-அமைப்பு உண்டு. பூக்களிடையே மகரந்தத்தை எடுத்துச்செல்ல சில பூச்சிகளின் உதவி தேவை. ஆக, இந்த ஒட்டுண்ணிச்செடி பல்வேறு உயிரினங்களுடன் உறவுபூண்டிருக்கிறது. இந்த் நிலையில் புறச்சூழல், இந்தச்செடியின் உள்ளார்ந்த வழக்கம் அல்லது விழைவு ஆகியவற்றை மாத்திரம் வைத்து இந்த ஒட்டுண்ணிச்செடியின் அமைப்பை விளக்கிவிடலாம் என்று எண்ணுவது, அறிவுக்கும் இயல்புக்கும் புறம்பானதாகும்.
- On the Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life, by Charles Darwin, M.A. Fellow of the Royal, Geological, Linnean etc., Societies, Author of 'Journal of Researches during H.M.S. Beagle's Voyage around the World', London, John Murray, Albemarle Street, 1859. (உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முன்னுரை).
அடிக்குறிப்புகள்
1. ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913): பிரிட்டிஷ் இயற்கை-வரலாற்று அறிஞர். உயிரினங்களின் தோற்றம் நடப்பது இயற்கைத் தேர்வால் என இவர் தம்மளவில் ஆராய்ந்து கோட்பாடாக முன்வைத்ததை அடுத்து டார்வின் தம் கோட்பாட்டை வெளியிட்டார்.
2. ஸர் சார்ல்ஸ் லயல் (1797-1875): பெயர்பெற்ற புவியியல் அறிஞர், வழக்கறிஞர், ஸ்காட்லாந்தைச் சார்ந்தவர்.
3. ஜோஸஃப் ஹூக்கர் (1817–1911): பெயர்பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் அறிஞர், இமயமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாவரங்கள் சேகரித்தவர்.
(இன்னும் வரும்)
இன்று சார்ல்ஸ் டார்வின் இருநூற்றாண்டு நாள்.
படங்கள் - இங்கே லண்டன் அருகே டௌன் பகுதியில் டார்வின் இல்லம். தற்போது ம்யூஸியமாக இயங்குகிறது. இளம் டார்வின்.
டார்வினின் ஆக்கங்கள் - இணையத்தில்
டார்வின் எழுதிய கடிதங்கள் சில
லண்டன் - இயற்கை-வரலாறு ம்யூஸியத்தில் டார்வின் இருநூற்றாண்டுக் கண்காட்சி
டார்வினின் டௌன் இல்லம்
Science இதழில் டார்வின் வலைப்பக்கம்
டார்வின் பற்றி ஃப்ரெஞ்சு அறிஞர் ப்ரூனோ லத்தூர்
11.2.09
விளிம்பு - ஸில்வியா ப்ளாத்
முழுமைகொள்கிறாள் பெண்ணிவள் பூத
வுடல் அணியும்
சாதனைப்புன்முறுவல்.
கிரேக்கத் தேவையொன்றின் மாயை
இவள் அங்கியெனும்
எழுதுசுருளில் பாயும். வெறுங்
கால், 'இத்தனை தூரம் வந்தோம், முடிந்தது'
எனக் கூறத் தோன்றும்.
சாக்குழவி ஒவ்வொன்றும் சுருண்ட வெண்நாகம்
ஒவ்வொன்றும் சற்றே தன்
பால்குடம் பருகத் தீ்ர, இதோ
தன்னுடலுள்
மடக்கினாள், மூடும்
ரோஜா இதழ் பலதாய்
ஆங்கே தோட்டமும் இறுகும்,
இனிய ஆழ்தொண்டை பலதின்
வாசமும் குருதியாய்க் கசியும்.
துயருற ஏதுமில்லை, எலும்பில் தன்படமெடுத்து
வெறிக்கும் நிலாப்பெண்ணுக்கும்.
இவளுக்குப் பழக்கமே.
கறகறக்கும், இழுக்கும் இவளின் பல கறுப்பும்.
--- Sylvia Plath, Edge, 1963.
ஸில்வியா ப்ளாத் இறுதியாக எழுதிய இருகவிதைகளில் ஒன்று. இன்று அவர் நினைவுநாள்.
படம் - இங்கே மத்திய லண்டன் ஃபிட்ஸ்ராய் சதுக்கத்தின் அருகே ப்ளாத் குடியிருந்த வீடு.
ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ் முன்பு வசித்த வீடு. இன்று காலை அங்கு சென்றேன்.
10.2.09
பிச்சிப்பெண்ணின் காதற்பாடல் - ஸில்வியா ப்ளாத்
நான் விழிமூட
மரித்து வீழும் உலகும்
இமைதிறப்ப
மீள்பிறக்கும் யாவும் -
புனைந்ததும் உன்னை
எந்தன் தலையிலோ!
நீலச்சிகப்பில் சுழல்நடமாடிச் செல்லும்
விண்மீன் பல.
எதேச்சையாக உட்பாயும்
கருமை.
நான் விழிமூட
மரித்து வீழும் உலகும்.
கனாக்கண்டேன்,
மயக்கியென்னைக் கிடத்தி
நிலாப்பாடி
நான் பேதலிக்கப்
பித்தமிக முத்தமிட்டாய் நீயென.
நான் விழிமூட
மரித்து வீழும் உலகும்.
குப்புற வீழ்வார் கடவுள்.
மங்கும் நரகத்தீயும்.
நீங்குவர் ஸெரஃபிம், சாத்தான் படையினர்.
நான் விழிமூட
மரித்து வீழும் உலகும்.
பகர்ந்தாற்போல் திரும்புவாய் நீ!
என விழைந்தேன்
ஆயின்
முதிர்ந்தே உன் பெயர்மறந்தேன் -
புனைந்ததும் உன்னை
எந்தன் தலையிலோ!
உன்னிலும் காதலித்திருக்கலாம்
விண்ணேறும் பறவையை -
இடியாகவெனும்
இளவேனிலில் மீண்டும்
முழங்கிவரும் -
புனைந்ததும் உன்னை
எந்தன் தலையிலோ!
--- Sylvia Plath, Mad girl's love song, 1945.
மூலம் - நிதானமாக நிறுத்தி வாசிக்கவும்!
"I shut my eyes and all the world drops dead;
I lift my lids and all is born again.
(I think I made you up inside my head.)
The stars go waltzing out in blue and red,
And arbitrary blackness gallops in:
I shut my eyes and all the world drops dead.
I dreamed that you bewitched me into bed
And sung me moon-struck, kissed me quite insane.
(I think I made you up inside my head.)
God topples from the sky, hell's fires fade:
Exit seraphim and Satan's men:
I shut my eyes and all the world drops dead.
I fancied you'd return the way you said,
But I grow old and I forget your name.
(I think I made you up inside my head.)
I should have loved a thunderbird instead;
At least when spring comes they roar back again.
I shut my eyes and all the world drops dead.
(I think I made you up inside my head.)"
சங்கக்கவிதையில், ஐங்குறுநூறு சிறுவெண் காக்கைப்பத்து என்ற, இதையொத்த இரங்கலுக்கான நெய்தல்திணை சார்ந்த, பாடல்களை இங்கே தருகிறேன். 'பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை' என்பது ஒரு refrain. இன்னொரு ஏகாரம் refrain ஸில்வியாவில் ஓகாரமாகிவிட்டது! இப்படி ஒற்றுமை, மாறுபாடுகள் ஆராயத்தக்கன:
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்ஃதே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே.
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி அகமனை ஈனும்
தண்ணந் தூறைவன் நல்கி
ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.
ஈழ மக்களுக்காக டில்லியில் போராட்டம்
இலங்கைத்தீவில் அரச படையினர்-விடுதலைப்புலிகள் இடையிலான போரில் தமிழ்மக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து டில்லியில் நடக்கும் போராட்டம் குறித்த அறிக்கை இதோ.
நாள் - 12 பிப்ரவரி, வியாழன்
காலை பத்து மணி - டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி நாடாளுமன்றம் வரை
காலை பதினோரு மணி - டில்லி நாடாளுமன்றம் முன்பாக முற்றுகைப்போராட்டம்
உச்சிவேளை பன்னிரண்டு மணி முதல் - டில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டம்
ஈழ மண்ணில் இன அழிப்புப் போர் உக்கிரமடைந்து வருகிறது. இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் மக்கள் முல்லைத்தீவு பகுதியின் குறுகிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர். காடுகளில், வயல்வெளிகளில் நெருக்கடிமிக்க ஆபத்தான வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றனர். சிங்கள ராணுவம் பன்னாட்டுப் போர்விதிகளை மீறி மருத்துவ மனைகள். பள்ளிகள். வழிபாட்டுத்தலங்கள், அகதிமுகாம்கள் மீது குண்டுவீசி வருகிறது. போரில் பயன்படுத்த சர்வதேச சமுதாயம் தடைசெய்திருக்கும் க்ளஸ்டர் குண்டுகள், ரசாயன குண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி க்ளிண்டன், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிரிவு இயக்குநர் ப்ராட் ஆடம்ஸ், ஐக்கிய நாடுகள் மன்ற செய்தித்தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் எனப் பலரும் இலங்கையில் நிகழும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்தும் கூட, இனவெறி ராஜபட்க்ஷே அரசின் பயங்கரவாதச் செயல்பாடுகள் நின்றபாடில்லை...
இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். பல்வேறு துறைகளில் இதன் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைத்துவருபவர்கள் தமிழர்கள். இத்தமிழர்களுடன் மொழி, இன, பண்பாட்டு உறவுகள் கொண்டவர்கள்தாம் ஈழத்தமிழர்கள். சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு தமிழகத்து மக்கள் இன்று சொல்லொணாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் விளைவுகள், இன்று தமிழக வீதிகளிலெல்லாம் நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள். அவர்களுடைய நியாயமான கோபங்களைத் தலைநகர் டில்லியில் பிரதிபலிக்கும் முயற்சிதான், தமிழக மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த ஈழத்தமிழர் தோழ்மைக்குர.
இந்திய அறிவுஜீவிகளே, இந்திய ஒன்றியத்தின் அனைத்து இனங்களைச் சார்ந்த மாணவர்களே, விடுதலைப்போராட்ட ஆதரவாளர்களே, பத்திரிகைத்துறைத் தோழர்களே..
ஈழத்தமிழர் அனுபவிக்கும் அரச பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவு அளியுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசிடம் மேலதிக வலிமையான குரலில் மீண்டும் கேட்போம்.
இந்திய அரசே!
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைப்போரை உடனே தடுத்துநிறுத்து!
தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை, இந்தியாவில் வாழும் அகதிகளின் மாண்புரிமையை, உறுதிசெய்!
கொல்லப்பட்ட தமிழ்மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது உடனடி நடவடிக்கை எடு!
ஈழத்தமிழர் தோழமைக்குரல்
தமிழ்நாடு, புதுச்சேரி, டில்லி
போராட்டத்தில் பங்கேற்போர் - லீனா மணிமேகலை, சுகிர்தராணி, செல்மா பிரியதர்சன், கரிகாலன், அஜயன் பாலா, யாழன் ஆதி, யவனிகா ஸ்ரீராம், கோணங்கி, இன்பா சுப்பிரமணியன், லிவிங் ஸ்மைல் வித்யா, அசதா, காலபைரவன் (தமிழ்க்கவிஞர்கள் இயக்கம்), மாலதி மைத்ரி (அணங்கு), சந்திரன் (மக்கள் சிவில் உரிமைக்கழகம்), கலையரசன் (டில்லி தமிழ் மாணவர் கூட்டமைப்பு), தமிழ்நாடு சமக்கல்வி வாழ்வுரிமை இயக்கம், தேசிய சமக்கல்வி வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, பிரேமா ரேவதி (பெண்கள் சந்திப்பு), கே.டி. காந்திராஜன், நடராஜன் (ஓவியர்கள் இயக்கம்), பாரதி (தென்னிந்திய மீனவர் நலச்சங்கம்), விமலா பெரியாண்டி (புதுச்சேரி மீனவப் பெண்கள் கூட்டமைப்பு), புத்தக்ர் கலைக்குழு - விழுப்புரம்.
9.2.09
ஈழத்தமிழர் தோழமைக்குரல் டில்லியில் போராட்ட அழைப்பு
சென்னையிலிருந்து வந்திருக்கும் செய்தி
ஈழத்தமிழர் தோழமைக்குரல் நடத்தும்
இந்திய நாடாளுமன்றம் முன் மறியல், பேரணி மற்றும் உண்ணாநிலைப் போராட்டம்
வணக்கம்.
ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராகத் தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர்-கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள்-அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் என இணைந்து ஈழத்த்மிழர் தோழமைக்குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
பிப்ரவரி முதல் தேதி நடந்த இந்த அமைப்பின் முதல் கூட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் இந்தக்கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் - அதாவது பிப்ரவரி 12 வியாழனன்று - நாடாளுமன்றம் முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்,
இந்திய அரசிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது:
1. ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடத்திவரும் இனப்படுகொலைப்போருக்கு துணைபோகாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துத்து அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
4. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின்மீது நடவடிக்கை எடு!
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணி அளவில் எழும்பூர் தொடர்வண்டிச் சந்திப்பில் வண்டி எண் 2651 சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அன்பிற்கினிய பத்திரிகையாள நண்பர்களே,
இத்தொடக்க நிகழ்வில் பங்கேற்று எங்கள் பயணத்துக்கு தார்மீக ஆதரவு அளிக்கும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
லீனா மணிமேகலை, கு. வெங்கடாசலம்
அமைப்பாளர்கள், ஈழத்தமிழர் தோழமைக்குரல்
9 பிப்ரவரி திங்கட்கிழமை, சென்னை.
கூற்றுவர் மாறுநடம் - பௌல் ஸெலான்
கருக்கின் கரும்பால் மாலையில் குடித்து
உச்சியில்
உம்மைக் காலையில்
உம்மை இரவில்
உம்மைக் குடித்துக் குடிப்போம்.
முற்றும் நீர் முடங்காது கிடக்க
காற்றில் கல்லறை வெட்டுவோம்.
வீட்டில் வசிப்பவர் ஒருவர்
தம் விரியன் பலதுடன் விளையாடி
ஜெர்மனி இருள்வ எழுதி
மார்கரித்,
உன் பொன்முடி எழுதுவார்.
வீட்டினின்றும் சென்று
வான்மீன் ஒளிர
விஸிலடித்துக் காட்டுநாய் பல
நெருங்கக் கூவி
தம் யூதர் பலரை
வரிசையில் நிறுத்தி
நிலத்தில் கல்லறை வெட்ட
விஸில் அடித்துக் கூவி
மேலே வானைச் சுட்டி
ஆணையும் இடுவார்:
’ஆடுவீர் நடம்’.
கருக்கின் கரும்பால் மாலையில் குடித்து
உச்சியில்
காலையில்
குடித்து இரவில்
குடித்துக் குடிப்போம்
வீட்டில் வசிப்பவர்
விரியன் பலதுடன் விளையாடி
ஜெர்மனி இருள்வ எழுதுவார்.
மார்கரித், உன் பொன்முடி
எழுதுவார்.
ஷுலமித், உன் சாம்பல்முடி
எழுதுவார்.
முற்றும் நீர் முடங்காது கிடக்க
காற்றில் கல்லறை வெட்டுவோம்.
’இங்கே அதிகம் மண்வெட்டுவீர்’
என்றவர் கூவ
நீவிர் மற்றவர் பாடியாடுவீர்.
தம் கச்சைத்தடி கைப்பற்றி
வீசுமவர் விழியோ நீலம்,
’இன்னும் ஆழமாக வெட்டுவீர்’
என்றவர் கூவ
நீவிர் மற்றவர்
ஆடுவீர் நடம்.
கருக்கின் கரும்பால் மாலையில் குடித்து
உச்சியில்
காலையில்
குடித்து
இரவில்
குடித்துக் குடிப்போம்.
வீட்டில் வசிப்பவர்
விரியன் பலதுடன் விளையாடி எழுதி
ஜெர்மனி இருள்வ எழுதுவார்,
மார்கரித்! உன் பொன்முடி,
ஷூலமித்! உன் சாம்பல்முடி,
விரியன் பலதுடன் விளையாடி
உம்மிடம் கூறுவார்:
’ஜெர்மனியினின்று
ஆள வந்த
இனிய கூற்றுவர் இவருடன்
ஆடுவீர் நடம்.
உம் கயிற்றை இருள்வச் சுரண்டுவீர்.
ஆங்கே புகையாய் வானில் எழுவீர்.
முகிலில் கல்லறை காண்பீர்.
முற்றாய் நீர் முடங்காது கிடக்க.’
கருக்கின் கரும்பால் மாலையில் குடித்து
உச்சியில் காலையில்
குடித்து
இரவில் குடித்துக் குடிப்போம்.
ஜெர்மனியினின்று ஆள வந்த
இனிய கூற்றுவர் இவர்
ஈயக்குண்டால்
உம்மைச் சமமாய் நிஜமாய்ச் சுடுவார்.
வீட்டில் வசிப்பார் ஒருவர்
தம் காட்டுநாய் பலதை
நம்மீது ஏவுவார்.
தம் விரியன் பலதுடன் விளையாடி
பகற்கனாக் காணுவார்.
ஜெர்மனியினின்று
ஆள வந்த
கூற்றுவர் இவர்.
மார்கரித், உன் பொன்முடி,
ஷுலமித், உன் சாம்பல்முடி.
- Paul Celan, Todesfugue, 1948.
ஜெர்மன் மொழியிலிருந்து நேரடித் தமிழாக்கம்.
Schwarze Milch der Frühe wir trinken sie abends
wir trinken sie mittags und morgens wir trinken sie nachts
wir trinken und trinken
wir schaufeln ein Grab in den Lüften da liegt man nicht eng
Ein Mann wohnt im Haus der spielt mit den Schlangen der schreibt
der schreibt wenn es dunkelt nach Deutschland dein goldenes Haar Margarete
er schreibt es und tritt vor das Haus und es blitzen die Sterne er pfeift seine Rüden herbei
er pfeift seine Juden hervor läßt schaufeln ein Grab in der Erde
er befiehlt uns spielt auf nun zum Tanz
Schwarze Milch der Frühe wir trinken dich nachts
wir trinken dich morgens und mittags wir trinken dich abends
wir trinken und trinken
Ein Mann wohnt im Haus der spielt mit den Schlangen der schreibt
der schreibt wenn es dunkelt nach Deutschland dein goldenes Haar Margarete
Dein aschenes Haar Sulamith wir schaufeln ein Grab in den Lüften da liegt man nicht eng
Er ruft stecht tiefer ins Erdreich ihr einen ihr andern singet und spielt
er greift nach dem Eisen im Gurt er schwingts seine Augen sind blau
stecht tiefer die Spaten ihr einen ihr andern spielt weiter zum Tanz auf
Schwarze Milch der Frühe wir trinken dich nachts
wir trinken dich mittags und morgens wir trinken dich abends
wir trinken und trinken
ein Mann wohnt im Haus dein goldenes Haar Margarete
dein aschenes Haar Sulamith er spielt mit den Schlangen
Er ruft spielt süßer den Tod der Tod ist ein Meister aus Deutschland
er ruft streicht dunkler die Geigen dann steigt ihr als Rauch in die Luft
dann habt ihr ein Grab in den Wolken da liegt man nicht eng
Schwarze Milch der Frühe wir trinken dich nachts
wir trinken dich mittags der Tod ist ein Meister aus Deutschland
wir trinken dich abends und morgens wir trinken und trinken
der Tod ist ein Meister aus Deutschland sein Auge ist blau
er trifft dich mit bleierner Kugel er trifft dich genau
ein Mann wohnt im Haus dein goldenes Haar Margarete
er hetzt seine Rüden auf uns er schenkt uns ein Grab in der Luft
er spielt mit den Schlangen und träumet der Tod ist ein Meister aus Deutschland
dein goldenes Haar Margarete
dein aschenes Haar Sulamith
குறிப்பு: இந்தக்கவிதை நான் வாசித்து சுமார் இருபத்தாண்டு இருக்கும். சென்னையில் எனக்கு ஜெர்மன் மொழி பயிற்றுவித்த, மக்காச்சி என்று மாணவரால் அழைக்கப்பெற்ற, ம்றைந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வகுப்பில் வாசித்த கவிதை. இதே காலகட்டத்தில் என் நண்பராக இருந்த, ஈழத்தமிழரைப் பெரிதும் நேசித்த பிர்ஜிட் வுல்ஃப் (Birgit Wolf), இலங்கை சென்றவர், ஜெர்மனி ப்ரேமன் நகர் திரும்பித் தற்கொலை செய்துகொண்டார். அப்போது எனக்கு ஜெர்மன் மொழிக் கல்வி மீது மனம்செலுத்த முடியாது போய்விட்டது. இப்போது இந்தக்கவிதையை என்னால் அணுக முடிந்திருக்கிறது.
மலர் - பௌல் ஸெலான் கவிதை
8.2.09
கூற்றுவர் குழுமம் - ஸில்வியா ப்ளாத்

இரண்டு, நிச்சயம் இரண்டே உண்டு.
இப்போது இயல்பாய்த் தோன்றும்.
முதலது மேலே காணாது
விழியும் இமை தைத்துப் பந்தாகும்
தன்னை வெளிக்காட்டும்
(வில்லியம்) ப்ளேக் போல.
மச்சம் பல இவர்தம் முத்திரை.
கொதிநீர் சுட்ட புண்.
அம்மணக்களிம்பும் கொண்ட
பெருங்கழுகார் இவர்க்கு
செவ்விறைச்சி நான்.
இவரலகும்
தட்டும் பக்கவாட்டில்.
இன்னுமென்னைத் தூக்கார்
இவர்.
’நீ் எடுக்கும்
புகைப்படமும் மோசம்,
கண்ட
ஆஸ்பத்திரிக் குழவியர்தாம்
என்ன சுவை!’
என்கிறார் என்னிடம்.
ஐஸ்பெட்டி, கழுத்தில்
சிறுமடிப்பு
யவனர்தம் மரண-அங்கியும்
படபடக்க
அந்த இருசிறுகால்...
சிரிப்பதோ புகைப்பதோ
இல்லையிவர்
அதைச் செய்வது மற்றவர்
நீண்ட அவர் புகழ்முடி
வேசை மகனவர்
ஒளிராய்க் கையடித்து
நேசம் விழைவார்.
அசையேன்.
உறைபனி மலராக்க
பனிநீர் வான்மீனாக்க
செத்த மணி
செத்த மணி.
முடிந்தவர் எவரோ.
- Sylvia Plath, Death & Co, 1963.
ஃபிப்ரவரி 11, 1963 தற்கொலைக்குச் சிலவாரம் எழுதியது.
செங்குத்தாய் யான்... - ஸில்வியா ப்ளாத்
லாஸரஸ் மாது - ஸில்வியா ப்ளாத்
7.2.09
லாஸரஸ் மாது - ஸில்வியா ப்ளாத்
மீண்டும்
செய்தேன் அதை.
செய்தும் விடுகிறேன்
பத்தாண்டு ஒருமுறை.
நடக்கும் வகையோர் அதிசயம்,
என் தோல்
நாஃஸி விளக்கின் உறையாய்
ஒளிர,
என் வலதுகால்
ஒரு தாளிறுத்தி.
என் முகம்
உருவமற்ற
யூதப் பட்டுச்சணல்
இழை.
குறுந்துணியை உரி,
என் எதிரியே!
பயப்படுத்துகிறேனோ
உம்மை?
மூக்கும் கண்குழியும் பற்கூட்டும்
துர்மண மூச்சும்
ஒருநாள் மறையும்.
விரைவில், மிக விரைவில்
கல்லறைக்குகை உண்ட சதையும்
இயல்பாகும் என்னிடம்.
ஆங்கே
சிரிக்கும் பெண்ணாய்
முப்பதே வயதாய்
பூனைபோல்
நவமுறை மரணிக்க,
இது முறை மூன்று.
பத்தாண்டு தோறாய்
அழித்தொழிக்மும்
மோசமு்மாய்!
ஓ!
கோடிகோடிக் கம்பியிழை
திமுதிமுத்துக் காணும்
கடலைகொறிக்கும் கூட்டத்தார்
என் கைகால்வரை கழற்றி
ஆடை நின்றவிழ்த்தார்.
ஆடவர், பெண்டிரே!
என் கைகள் இவை
முழந்தாள் இவை.
எலும்பும் தோலுமாய்
இருக்கலாம் எனினும்
இவள் அதேயதே பெண்தான்.
வயது பத்தில்
முதல்முறை நடந்ததோ
விபத்து.
அடுத்து நடக்க,
தீராமல் தொடரும்
வாராது மீண்டுமென
இருந்து
ஆடி என்னை மூடினேன்
சிப்பியாய்.
கூவிக்கூவி அழைத்தும்
புழுவேறிய முத்தாகப் பிரித்தும்
எடுக்கிறார் என்னைத்தான்.
சாதலும்
பிறிதுபோல் கலையே.
செய்கிறேன் நனிசிறக்க.
செயச்செய்ய நரகம்.
செயச்செய்ய நிஜம்.
எனக்கான ஓரழைப்போ
எனக் கூறலாம் நீர்!
அறையில் அடைபட்டும்
அசையாமல் கிடந்தும்
செய்தல் எளிதே.
நாடகீயமானது
பகல்பரக்கத் திரும்பும்
அதே இடம், முகம்
மிருகமெனக் கூவும்
வேடிக்கையாய்:
'விநோதம்!'
என்னை அது வீழ்த்தும்.
மின்னேற்றி,
தழும்பெனதும் பலதை
விழியாக்க,
இதயமெனதும் கேட்க
மின்னேற்றிச் செல்லும்.
மிகப்பெரும் மின்னேற்றம் -
சொல்லுக்கோ தீண்டலுக்கோ
ஏன் குருதிக்கோ
என் கூந்தலிழைக்கோ
ஆடைக்கோ..
மருத்துவரென்ற
என் எதிரியே!
உம் பெரும்படைப்பும் இதோ!
நீர் மதிக்கும்
தூய பொற்குழவி் இதோ
அலறலாய் உருகும்.
புரண்டு எரிகிறேன்.
கவலை உமதை
குறைத்து நினைப்பதாய்
எண்ணாதீர்!
சாம்பல், சாம்பல்
குத்திக் கிளறுகிறீர்!
சதையும் எலும்பும்
ஆங்கில்லை ஏதும்.
சோப்புத்துண்டு.
மணஆழி.
தங்கப்பல் தவிர.
கடவுளே, சாத்தானே!
ஜாக்கிரதை
ஜாக்கிரதை.
சாம்பலினின்றும்
செம்கூந்தலுடன் எழுகிறேன்
காற்றெனப் புசிக்கிறேன்
ஆடவரை.
Sylvia Plath, Lady Lazarus, 1962.
ஸில்வியா ப்ளாத் தற்கொலை செய்த நாள் பிப்ரவரி பதினொன்று, 1963.
6.2.09
செங்குத்தாய் யான்... - ஸில்வியா ப்ளாத்
ஆயின்
கிடைநிலைக் கிடக்கவே
விழையும்
யான்.
வேருற்று மண்ணின்
கனிமம் தாயன்பும் உறிஞ்சி
இளவேனில்தோறும்
இலையொளிரும்
மரம் அல்லள்
யான்,
இதழ் விரைந்தொழியும்
என அறியாது.
கண்கவர் வண்ணம் பூசி
ஆ, காண்போரை
என் பங்கிற் கவரும்
தோட்டப்பாத்தியின்
அழகும் இலள்
யான்.
என்னிலும் அமரராய் மரம்
மற்றாங்கே
உயரமில்லை
பூமுகம்
ஆயின்
திடுக்கிட வைக்கும்.
முதலதன் பெருவாழ்வும்
மற்றதன் துணிவும்
விழைபவள்
யான்.
இன்றிரவும்
வான்மீன் பலதின்
கழிநுண் ஒளியில்
மரம் மலர் பலவும்
தூவும் தம் தண்வாசம்
ஊடே
இவை யாவும் காணாது
கடக்கும்
யான்.
உறங்கும்போதில்
ஒத்திருப்பேன்
இவற்றை முழுதாய்
என ஒருக்கில்
எண்ணும்
யான்.
மங்கும் எண்ணம் பலவும்.
தாழக்கிடப்பதே என்னியல்பாய்
யானும் வானும்
திறந்தே உரையாட
ஆங்கே
இறுதியில் கிடந்தே
பயனுறுவேன்
யான்.
ஆங்கே
ஒருமுறையேனும்
மரம்பல
தொடட்டும்
சற்றே
மலர்பல
காணட்டுமென
யான்.
- Sylvia Plath, I am vertical, 1962.
படங்கள்
காஸ் அடுப்பில்
தலைவைத்துத் தற்கொன்ற
ஸில்வியா ப்ளாத்.
இங்கே பிரிட்டனில் ஹெப்டன்ஸ்டால்
என்ற இடத்திலுள்ள ப்ளாத்தின் கல்லறை.
5.2.09
ராமனின் கற்பனையான தற்கொலைப்பாலம் 2 - கோணங்கி
மன்னார்குடாப் பகுதியில் குதிரைலாடமாய் வளையும் கரைமணலை அகற்றி இருபாறைப்படிவங்களை வெட்டிக்கொண்டு போர்க்கப்பல்களில் கும்பினிக்கொடி நீரில்பட்டு அசைந்தது. இடைப்பட்ட வெளியில் பலவகைப்பாறைகளில் கடல் உடலிகளில் அசைவு. கீழே கப்பலும் மேலே ரயிலும் போக தீவுகளை இணைக்கும் ரயில்பாதை கடலை ஊடுருவிச்செல்லும். தூக்குப்பாலத்துடன் கூடிய பாம்பன் வாராவதியில் ரயில் செல்லும்போது இரும்புக்கால அதிர்ச்சிகளில் கடல்நீர் ஏறிய உச்சரிப்புகள். வாராவதி நடுவில் இரு கதவுகளைத் திறந்தால் கீழே சுழலும் பெண்கடல்.
இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்துசேர்ந்த பொறியாளர்கூட்டம் பாம்பனில் பாளையம் இறக்கினார்கள். வடதிசையின் நுழைவாயிலில் வெள்ளையன் கல்வெட்டு பாம்பன் கடல்மட்டம் பெருகிப் பாலத்தை மோதும் ஆரவாரம். ஒரு திமிங்கிலத்தைக் கட்டினார்கள் வானரங்களைக் கொண்டு. சுக்ரீவன் போட்ட கல் மிதந்தது. குரங்குகளின் முதுகெலும்பில் சங்கிலித்தொடராகக் கால்வைத்துச் சென்றான், லங்காபுரிக்கு. வானரர்களின் எலும்பில் கால்பட்டும் கால் தூணாகும் அவலம். எல்லாத்தூண்களாகவும் கருத்திருப்பவை, வால்மீகி விட்டுச்சென்ற வானரக்கூலியடிமைகளின் கால்கள். எழுந்த அடி வழுக்கி, அடிமுடி கண்டது. அசைய முடியவில்லை. வானரக்கூலிகளின் எல்லாக்கால்களாலும் பாம்பன் வாராவதிப்பாலம் பயணமாகிறது.
மண்டபம் கேம்ப்பில் கொழும்பு அதிகாரிகள் சீல்வைத்த கடவுச்சீட்டும் மருத்துவப்பரிசோதனைக்காக வரிசையில் நிற்கும் பஞ்சத்தில் வெளியேறும் ஜனங்களும்.
கிங் லிவர் கதவுகளைத் தூக்கும் கரகரப்பு ஓசையில் ஒடியும் கருமசகிடப்பட்ட அச்சில் நெம்புகோல் தத்துவம். மின்சாரப்பூட்டு துளைகளிப்படாதது. ஸ்கெர்ஜர் சுழல்தூக்குப்பாலம் இருபக்கமாய்த் திறக்கவும் கடல்மீது பெரும்பறவையின் இருசிறகுகளின் நிழல் அசையும். ஊடுருவும் பயணக்கப்பலில் வெள்ளை நாரைகளோடு வெளியேறும் வாலியின் கூட்டம் இன்றும் அடிமைக்கூலிகள். மாலுமிகளின் பாடலை நிறுத்தும் இங்கிலாந்துப் பூட்டு.
இலங்கையையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் ஆதாம் பாலம் இருப்பதை படகில் போய் சந்தித்தான், தொல்லியலாளன் ப்ரூஸ் புட்டெ (Bruce Foote). கடல்கோள் ஏற்பட்டு இருதனிநிலமானதை யாரும் அறியவில்லை. இயற்கைச்சீற்றத்தில் ஏற்பட்ட பாம்பன் கால்வாயில், கப்பல் நிழல் படபடத்த அலையில் நகரும். நாகப்பட்டினத்தின் கிளைத்துறைமுகமாக இருந்த தனுஷ்கோடியிலிருந்து என்.எஸ்.எஸ். இர்வின் லாஞ்சு தலைமன்னார் ஏகியது. அதில் செட்டி வணிகர்களும் அமராவதிப்பட்டினத்துப் பிரஜைகளும் சேதுசீமைப் பஞ்சத்தாரும் நிலத்தைக் கைகளில் ஏந்திப்போகும் தீவாந்திரத்தீட்சை.
பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது தொப்பியணிந்த வெள்ளையர் திரும்பிப்பார்த்தார்கள். அவர்களோடு வடபுல யாத்ரீகர்கள் பிதிர்களுக்கான ஒருபிடிச்சாம்பலுடன் இருக்கைகளில் எதிரெதிரே அமர்ந்து பாஷைகள் பல அதிரும் உரையாடல். பாலத்தைக் கடக்கும்போது அமைதியாகிறார்கள். ராமன் அங்கே தற்கொலை செய்துகொண்டான் எனவே.
கப்பல் பாலத்தைக் கடந்ததும் தூரத்தில் தயங்கிக்கொண்டிருக்கும் புகைவண்டியின் வெண்புகை நீண்டுவளைந்துசெல்லும் நிலக்கரி வாசனை. பாலத்தின் கதவுகள் படுக்கைநிலைக்குக் கொண்டுவர, மெல்ல மெல்ல கதை தன் முதலைவாயை மூடுவதாகப் படும். மூக்குமுனையிலிருந்தும் பாம்பன் கதவுகளில் காலனீயப்பூட்டு திருவரங்கக் குதிரைகளைப் போல் குதிகாலில் தூக்கிப் பின் கீழே இறங்கும் குளம்படிகள்.
- பிதிரா நாவலிலிருந்து. ஜூலை 2004.
வரலாற்றின் முன் தற்கொலையும் செயலும்: ஸிமோன் வே - 3
வரலாற்றின் முன் தற்கொலையும் செயலும்: ஸிமோன் வே - 1
வரலாற்றின் முன் தற்கொலையும் செயலும்: ஸிமோன் வே - 2
நம் காலத்தில் துயரென்பது வெளிப்படுவது எவ்வாறு? ஒன்றில் போர், அன்றில் ஒடுக்குமுறை வழியாக என்கிறார் ஸிமோன் வே. இதனாலேயே இரண்டையும் நேரடியாக அனுபவிக்க முற்பட்டார். நாஸிப்படைகளை எதிர்த்த ஃப்ரெஞ்சு விடுதலைப்படையுடன் இணைந்து இயங்கினார், அதற்குமுன் கார் தொழிற்சாலையில் பணியாளராகச் செயல்பட்டார். தொழிற்சங்கங்களுக்காக நிறைய எழுதினார். இதே நேரத்தில் பண்டைய கிரேக்க இலக்கியம், குறிப்பாக பெருங்கவி ஹோமரின் படைப்பு இலியத் குறித்த கட்டுரையையும் எழுதுகிறார்.
துயர் என்பது தேவை கருதி ஏற்படுவது, அதே வேளை எதேச்சையாக யாரையும் தாக்கவல்லது. இங்கே தேவை என்பது, இருத்தலுக்கான தேவையாக - அதாவது போரின்போது தாக்குதல்களுக்குத் தப்பிப்பிழைப்பதாக, அல்லது ஒடுக்குமுறை-வாழ்க்கையை அனுபவிப்பதாக அமைகிறது. போரில் தப்பிப்பிழைக்க முடியாமல் போகலாம், மாறாக வாழ்க்கையை அனுபவிப்பதிலும் சிக்கல் வரலாம். ஆக, இந்தத்தேவை என்பதிலிருந்து மனித ஜீவி தப்புவதில்லை. முதலீட்டிய வர்க்கம் என்ன செய்கிறது? தனக்கான இந்தத்தேவையை நிறைவேற்றும் பணியை மற்ற வர்க்கங்களின் தோளில் சுமத்திவிடுகிறது. ஒருபுறம் தேவைக்காகப் போராடும் மனிதர், இன்னொருபுறம் எதேச்சையாகத் தாக்குறும் மனிதர். இதுதான் இருத்தலின் அநீதி, பிழை என்கிறார் ஸிமோன். அதாவது துயர் என்பது முற்பிறவி, இப்பிறவி பாவ-புண்ணியங்களிலிருந்து வரும் வழக்கம் கொண்டதல்ல. இங்குதான் மரபான இறையியல் தவறுகிறது. விளக்க முடியாததற்கு பாவம், கர்மம், முன்னூழ் என்றெல்லாம் விளக்கம் தருகின்றன, மரபுகளும் மதங்களும். இங்கே எதேச்சை என்பது இத்தகு தர்க்கங்களுக்கு அப்பால் இயங்குவது என்கிறார் ஸிமோன்.
இந்த எதேச்சைத்தன்மை எப்போதும் தாக்கலாம் என்ற நிலையில், சாவு என்பது நம் முதுகுப்புறம் குடியிருக்கும் ஒன்று. எப்போதும் எதேச்சையாகத் தாக்கவல்லது. இந்த நிலையில் மனித ஜீவிக்கு உரிமை என்பதற்குப் பொருள் எப்போது வரும்? கடப்பாடுகள் முழுமையாகும்போதுதான் வரும். யாருக்கான கடப்பாடுகள்? தமக்கு, தம்மை அண்டியிருப்போர்க்கு, சமுதாயத்துக்கு, இயற்கைக்கு என விரிந்துசெல்கிற கடப்பாடுகள். இவை இல்லையென்றால் உரிமைகளைக் கோருவதற்குப் பொருளில்லாமல் போகும். தவிர, கடப்பாடுகள் வருவது, தினசரி அரசியல் மற்றும் அதிகார உலகிலிருந்தல்ல. மாறாக, போரை, ஒடுக்குமுறையைக் கடந்த ஓர் உலகிலிருந்தே இந்தக்கடப்பாடுகளுக்கான விழைவு வரமுடியும். எதைச் செய்வது, செய்யக்கூடாது என்பதை உணர்த்திவிடும் விநோத உலகிலிருந்தே இந்த விழைவு வரமுடியும். குறிப்பாக, தானற்ற மற்றவருடன், மற்றதுடன், மெய்யால் உணர்ந்து வாயால் அழைத்து கண்ணோட்டத்துடன் கண்டு செவிமடுத்துக் கேட்டு உள்ளார்ந்து பழகும் விழைவே தலையாய கடப்பாடு. இந்த விழைவு வரும் விநோத உலகு இல்லையென்றால், உலகில் அரசுகளும் அதிகாரங்களும் வன்முறையும் போட்டியும் போரும்தான் எஞ்சும். அப்படித்தான் இன்று பெரிதும் நடக்கின்றன. இந்த அதிகார விழைவை, அதிகாரத்துக்கான இன்னொரு விழைவால் வெல்ல முடியாது - லட்சிய நோக்குள்ள மார்க்ஸியர்கள் தவறும் இடமும் இதுதான். மாறாக, இந்த அதிகார விழைவை, விநோத உலகிலிருந்து வரும் கடப்பாட்டு விழைவால் மாத்திரமே எதிர்கொண்டு வெல்ல முடியும்.
அதிகாரத்தை ஆன்மீகம் என்ற நிறுவனத்தால் அடக்குவது என்பதல்ல விஷயம். மாறாக, மனிதர் உடலால், அகத்தால், ஆன்மீகத்தைப் பயின்றுவரவரத்தான் இந்த அதிகார விழைவு நமக்குள் ஓயும். இதைத்தான் அஸ்ஸிஸ்ஸியின் புனிதர் ஃப்ரான்ஸிஸும் குருசேறிய அருளப்பரும் செய்தனர், உலகின் பல்வேறு ஞானிகளும் பயின்றுவந்தனர். சொல்லப்போனால் உரிமைகள் வரும், பெருகும், போகும்; ஆனால் கடப்பாடுகளே நிலைப்பன, நிரந்தரமாக இருப்பன என்கிறார் ஸிமோன்.
ஸிமோனின் முக்கிய சிந்தனை, புலப்பெயர்வு குறித்ததே. புலப்பெயர்வை வரலாற்றின் நீண்ட பின்னணியில் வைத்து ஆராய்கிறார்; புலம் என்பதை புலத&