கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.
குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்!
விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் - 1925, 1938, 1946, 1975, 1988, 1991 மற்றும் 1999 என்று பல முறை தோல்வியை நாங்கள் தழுவியிருக்கிறோம். ஆனால் விடுதலைப்புலிகள் தத்தம் உயிரையே தியாகம் செய்து அழியாப்புகழ் எய்திய இத்தகைய வீரம் செறிந்த போரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. உள்ளபடியே மிகப்பெரும் சக்திகள் எதிரணியில் இருந்த இந்தப்போர் உங்கள் தலைவர்களின் உயிர்த்தியாகத்தில் சென்று முடிந்தாலும் அந்தப் போராட்ட நினைவுகளும் உங்கள் தமிழ்மொழியின் பாடல்களிலும் கதைகளிலும் என்றென்றும் நீடித்திருக்கும்.
விடுதலைப்புலிகள், தம்மை விட படைப்பலம் மிகுந்த ராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலின் இறுதிநாள் வரை - ஏன் இறுதிச்சமர் வரை - தங்கள் தலைவரின் உயிரையும் மூத்த பொறுப்பாளர்களின் உயிர்களையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. இது ஒன்றே விடுதலைப்புலிகளின் அறிவுத்திறன், வலிமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த சான்றாகும். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் பிற போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களையச்செய்து, தாம் மட்டும் மூன்றாவதான ஒரு நாட்டுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம். ஆனால் தலைமையும் சரி, அவர்தம் குடும்பத்தாரும் சரி, போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்லவில்லை, தமக்கு முன்பு வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளைப் போலவே தாமும் சரணடையாமல் இறுதிவ்ரை போர்புரிந்து வீரச்சாவை எய்தியிருக்கிறார்கள்.
இந்தத்தியாகம், உலகெங்கும் தாம் வரித்துக்கொண்ட ஒரு லட்சியத்துக்காக பிறரை உயிர்த்தியாகம் செய்யச்சொல்லும் தலைவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். என்னைப் பொறுத்தவரை, கிளர்ச்சியில் ஈடுபட விரும்பும் குர்து தலைவர்கள் உள்ளிட்ட பிற தலைவர்கள் இத்தகைய உயிர்த்தியாகத்தைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.
ஆயுதம் தாங்கிப் போராடும் குர்து அமைப்புகளுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கென பலங்களும் பலவீனங்களும் உண்டு. பலங்கள் எண்ணில் அடங்காதவை. பலவீனங்களும் தவறுகளும் சில என்றாலும் அவை நீண்டகால நோக்கில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக அமைந்துவிட்டன என்றே கருதுகிறேன். என் பார்வையில், விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாக இரு பொதுவான பலவீனங்களைக் கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட சில தவறுகளையும் செய்தார்கள்.
முதல் பலவீனம் - விடுதலைப்புலிகளின் அரசியல்-எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்பேன். தங்கள் தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்ப்ந்தத்தை ஏற்பதே எதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும்பட்சத்தில் இந்தப்போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக்கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி-அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் போல 'பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரையுடன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.
தமிழீழத் தாயகம் என்ற லட்சியத்திலிருந்து தாம் விலகும் பட்சத்தில் விடுதலைப்புலிகளில் தம்முடைய பாதுகாவலர்களே தம்மைச் சுட்டுக்கொல்லலாம் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார் என்பதும் விடுதலைப்புலிகள் எத்தனை இறுக்கமாக அமைப்பாக இயங்கினர் என்பதைக் காட்டுகிறது.
விடுதலைப்புலிகளின் இரண்டாவது பலவீனம் - பழிதீர்த்தல், திரும்பத்தாக்குதல் ஆகியவற்றுக்கு தேவையே இன்றி முக்கியத்துவம் வழங்கியதாகும். இங்கே "அரசியல் என்பதன் வேறுவித நீட்சிதான் போர்" என்று க்ளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் கூறியிருக்கும் பெயர்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலிலும் சரி, போரிலும் சரி, பழிவாங்குதலும் திரும்பத்தாக்குதலும் அடிப்படை லட்சியத்துக்குக் கீழடங்கியவையே. ஆக, எந்த ஒரு செயலையும் அதன் விளைவை வைத்தே மதிப்பிட வேண்டும் - அது அடிப்படை லட்சியத்தை அடையும் வழியில் நாம் முன்னேற வழிவகுக்குமா, இல்லையா என்று ஆராய வேண்டுமே ஒழிய, முன்பு எப்போதோ நடந்த ஏதோ ஓர் அநீதிக்காகப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இனக்குழுவினர் பாணியில் செயல்படுவதில் பொருளில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் சிங்களத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இத்தகைய பழிவாங்கும் செயல்களே. மாறாக, இந்தத்தலைவர்களில் சிலர் ஒருகட்டத்தில் தமிழ்மக்களின் போராட்டத்துக்குப் பயன்பட்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன்.
விடுதலைப்புலிகளின் தவறுகளைப் பொறுத்தவரை - 1999-2000-ஆம் ஆண்டுகளில் ஆனையிறவுப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு எப்படியாவது யாழ்நகரையும் கைப்பற்றி விடுவித்திருக்க வேண்டும். வேறு பகுதிகளைக் கைவிட நேர்ந்தாலும் பரவாயில்லை என இதைச் சாதித்திருக்க வேண்டும். அந்தக்கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள், எனவே பாரிய உயிர்த்தியாகத்துக்குப் பிறகே இது சாத்தியமாகியிருக்கும். என்றாலும் அப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவ சக்திகள் நிலைகுலைந்து போயிருந்தனர் என்பது முக்கியம். அந்த வாய்ப்பு நழுவிப்போன பிறகு இறுதியில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் சமரிட வேண்டி வந்தது எனபதையும் கவனிக்க வேண்டும்.
2001 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதற்கொப்ப 2002-ஆம் ஆண்டில் அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளை, 2004-ஆம் ஆண்டின் இறுதியில் இந்துமாக்கடலில் நிகழ்ந்த சுனாமித்தாக்குதலும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அது ஏற்படுத்திய பாரிய அழிவும் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடங்கச்செய்திருக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரைகுறை சமாதானத்தை, சமரசத்தைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். சுனாமி அழிவை அடுத்து, இந்தோனேஷியாவின் அச்சே பகுதி விடுதலை அமைப்பு இத்தகைய சமரசத்துக்குச் சென்றது. ஆக, விடுதலைப்புலிகளும் சுனாமியை உட்கொண்டு தம்முடைய அரசியல் கணக்குகளைப் போ்ட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
விடுதலைப்புலிகளின் அடுத்த பாரிய தவறு, 2005-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல்களைப் புறக்கணித்ததாகும். இந்தத் தேர்தலில் சிங்களக் கடும்போக்குவாதிகள் வெற்றி கண்டனர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களைக் கேட்கக்கூடாது என்பதை எப்போதும் ஒரு பொதுவிதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் வழி நம் அதிருப்தியை வெளிக்காட்டலாம், நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சாதாரண விடயங்களே. இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு என்பது நம் எதிரிகளில் மிக மோசமான பகுதியினரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் நிஜ அபாயத்தில், நீண்ட கால அபாயத்தில் போய் முடியலாம். இவையெல்லாம் மீள முடியாத சிக்கலில் நம்மை ஆழ்த்தலாம்.
விடுதலைப்புலிகளின் அடுத்த தவறு - கருணா செய்த கிளர்ச்சியைக் கையாண்ட விதம். இதை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக, நேர்மையாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளாக நடந்த வன்முறை, என்னைப்போல தூரத்திலிருந்து அவதானிக்கும் ஒருவருக்கே மிகுந்த வருத்தத்தை அளித்தது எனும்போது அதைக்கண்ட, அனுபவித்த தமிழ்மக்கள் அனைவரும் எவ்வாறு வருத்தப்பட்டு உற்சாகமிழந்து போயிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. குர்து இனத்தவன் என்ற முறையில் நானும் எங்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நடந்த வன்முறையை அறிந்தவன்தான். ஆனால, குர்து இனத்தவரின் எந்த ஒரு ராணுவ அமைப்பும் தன் மீதே துப்பாக்கியைத் திருப்பியதில்லை.
ஒருவேளை பிரபாகரனின் இறுக்கமும் சுனாமிப்பேரழிவும் கருணா மீதும் தாக்கம் செலுத்தியிருக்கலாம். அதே வேளை வடக்கை முன்வைக்கும் குறுந்தேசியவாதத்தைக் கைக்கொண்ட தவறைப் பிரபாகரன் செய்தார் என்று வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்னையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்த கருணா இதை இன்னமும் குழப்பிவிட்டார் என்றே கூற முடியும் - இத்தகைய குறுந்தேசியவாதம் மேலோங்குவதைக் குர்து அமைப்புகள் பெரும் தவறாகக் கணிக்கின்றன என்பதை மனத்தில் இருத்தி இதைச் சொல்கிறேன். ஆக, கிழக்குவாழ் தமிழ்மக்களின் தலைவர் என்ற அங்கீகாரம் கருணாவின் தலைக்கேறிவிட்டது என்று நினைக்க இடமுண்டு. பிரபாகரனைவிட தாமே பெரும் தலைவர் என்று கருணா கருதியிருக்கவும் இடமுண்டு. எது எப்படியிருந்தபோதும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு துரோகம் செய்து அமைப்பின் தலைவருக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பிய கருணாவை வரலாறு மன்னிக்காது என்றே கூறுவேன். என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, அவற்றைத் தனிப்பட்ட முறையில் முன்வைத்துவிட்டு அவர் அமைப்பிலிருந்து விலகியிருக்கலாம், அப்படி விலகியதற்காகச் சாவையும் எதிர்கொண்டிருக்கலாம். இவ்விரண்டையும் செய்யாமல் துரோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன்வழி தமிழ்மக்கள், சிங்களப்பகுதியினர் இருதரப்பும் நம்பாத, மரியாதை செலுத்தாத, நேசிக்காத தலைவராக மாறியிருக்கிறார். இந்தவழியில் அவருக்கு மோசமான முடிவே காத்திருக்கிறது, அப்படியொரு முடிவு ஏற்படும்பட்சத்தில் அந்த முடிவுக்கு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வார்கள், ஆனால் அதற்காக வருந்த மாட்டார்கள்.
அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
27.5.09
ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
8 கருத்துகள்:
மொழிபெயர்ப்பினை பிரசுரித்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
முன்னரொருபோது டுட்சி இனத்தவரின் கடிதம் என்று ஒன்று வந்தது. பின்னர் அது அவ்வாறு சொல்லி வேறு ஆட்களால் எழுதி வெளியிடப்பட்டதென்றார்கள்.
இந்தக்கடிதத்தின் மூலத்துக்கான தொடுப்பினைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எவர் எழுதியதாயிருந்தாலும் கடிதம் சொல்லும் செய்திகள் முக்கியமானவை.
இந்த கடிதமும், உங்கள் மொழியாக்கமும் இந்த சூழ்நிலையில் முக்கியமாக இருப்பதால்,உங்கள் பதிவை நான் http://www.vinavu.com/2009/05/26/indian-media-eelam-genocide/#comment-5499 என்ற தளத்தில் பரிந்துரைக்கிறேன்.
1. ஆங்கில மூலத்துக்கான பதிவைச் சேர்த்தாயிற்று.
2. லண்டன் வந்த பிறகு குர்து இனத்தவர்-விடுதலைப்போராட்டம் பற்றி நேரடியாகப் பலரிடம் - துருக்கி நாட்டவர், ஈராக் நாட்டவர் உள்ளிட்ட பலரிடம் பேசித் தெரிந்துகொண்டு வியப்படைந்தேன். பத்தாண்டுகளாக துருக்கியத் தீவுச் சிறையிலிருக்கும் குர்து தலைவர் அப்துல்லா ஓச்சலன் குறித்த சர்ச்சைகளும் நீடிக்கின்றன.
3. விடுதலைப்புலிகள் குறித்து எனக்கு வியப்பும் வருத்தமும் விமர்சனமும் ஒருசேர உண்டு. அதுபற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.
குர்திஸ்தான் நண்பர்கள் சிலர் எனக்கு உண்டு, முன் எம் பிரச்னைகள் பற்றியெல்லாம் நாம் கலந்துரையாடுவது உண்டு. ஒரு நண்பரின் சகோதரர் குர்திஷ PKK இயக்கத்தில் இருந்து 90-களில் ஜேர்மனி வந்திருந்தார், அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தமக்கும் பிரபாகரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொன்னார், பிரபாகரனுக்குத் தேவையென்றால் தம் படைகளை அனுப்பவும் தயாராக உள்ளோம் என்றார், எம் எல்லாப் பிரச்னைகளும் அவருக்குத் தெரிந்திருந்தது. எனக்கு அப்போது ஆச்சரியம்தான். இந்தக்கடிதம் பார்த்ததும் அவருடைய நினைவு. இப்போது உயிருடன் இருக்கிறாரோ தெரியவில்லை.... குர்திஷ் மக்களுக்கு எம் போராட்டத்தில் மிகுந்த நம்பிக்கை இருந்தது... Shexmux Amet-இன் கடிதமும் அதைத்தான் சொல்வதாகத் தெரிகிறது. நன்றி..
தமிழர் இல்லாத ஒருவர் பார்வையில் இருந்து கருத்துக்கள் வெளி ஆகும் போது எந்த விதமான உணர்ச்சிகளுக்கோ,தய்க்கத்திற்கோ இடமில்லாமல் மிகவும் நேர்மையாகவும்,நன்றாகவும் எழுதி இருக்கும் ஒரு ஆக்கம்.இந்தக் கட்டுரையில் சொன்னது போல் சிறுது "டிப்லோமசி" இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நம்பத் தோன்றுகிறது.சரி.நடந்ததைப் பற்றி பேசி என்ன பயன்?துன்பப்படும் அந்த மக்களுக்கு இனிமேலாவது நியாயம் கிடைக்க வேண்டும்.அதற்குத் தேவை மனிதாபிமானம் ஒன்று தான்.அதற்கே இன்று உலகத்தில் பஞ்சமாகி விட்டது வருந்தத் தக்க விஷயம்.
PKK தலைவர் அப்துல்லா ஓச்சலன் 1999ல் கென்யாவில் CIA உதவியுடன் க்ரீஸ் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். இன்று வரையில் இவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. துருக்கி எழுத்தாளர் "பாமுக்" குர்து மக்களுக்காகவும், அப்துல்லா வை விடுதலை செய்யவும் பல அறிக்கைகளை வெளியிட்டு, துருக்கி அரசால் பல கண்டனங்களுக்கும், மிரட்டலுக்கும் ஆட்பட்டார்.( கூடியவிரைவில், இவருக்கும் FATWA வந்தாலும் ஆச்சிரியமில்லை.)
விடுதலைப்புலிகள் குறித்து உங்களிடம் நேரிடையாக விவாத்திருக்கிறேன் மற்றும் உங்கள் ஆக்கங்களை அவ்வபோது படித்துக்கொண்டிருக்கிறேன். உங்களைப்போல் எனக்கும் வியப்பும் வருத்தமும் விமர்சனமும் உண்டு.
இவ்விடயத்தில், குர்து இனத்தவரான ஷெக்ஸ்முஸ் ஆமெடின் கூரிய பார்வை எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. PKK போல், பெருவின் மாவோயிஸ்ட் கட்சி SHINING PATH தலைவர் குஸ்மான் 1992 கைதுசெய்யப்பட்டு, இன்று வரையில் இவர் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை. ஏன் இதை சொல்கிறேன் என்றால், எங்கோ இருக்கும் குர்து இனத்தவை இவ்வளவு கூர்மையாக விமர்சிக்கபோது, தமிழில் PKK/SHINING PATH மற்றும் போராடும் பல குழுக்களைப்பற்றி போதிய அறிதல் இல்லை. இவைகளைப்பற்றி யாரவது தமிழில் கட்டுரைகள் எழுதினார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஈராக்/துருக்கி மக்களோடு பழிகியிருக்கும் நீங்கள் எழுதலாம்.
fyi,
Letter from Sikh to Mr. Charles Antony.
http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm
இனிய நாகார்ஜுனன்,
குர்து இனத் தலைவரின் கடித மொழியாக்கம் காலம் கருதி செய்த பணி. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. நலம்தானே?
தோழமையுடன்,
பாமரன்.
Post a Comment