இழை ஒவ்வொன்றும் வெடித்து
சீற்றம் தலையெடுத்து
மஞ்சம், விரிப்பு, தரை,
படநாகப் பஞ்சாங்கமென
குருதி விரியத் தோய்த்து,
இங்கிருந்து
கோடிப் பைம்புலம் தாண்டி
நீ!
என உறுதியிடுவதே
சுணைக்கும் விண்மீன்கீழ்
மூகாத்து அமர்ந்து
விடைத்து
நேரம் கருக்கும் சாபத்தில்
வெறித்து
விடைபகர்ந்து
ரயில்பல போக விடும்
எனதொரு ராச்சியத்தினின்றும்
திருகியெறிந்த
உதாரப் பிச்சி
நான்!
என்பதிலும் சரி.
-- Sylvia Plath, Monologue at 3 AM, 1956.
இந்தக்கவிதையின் தமிழாக்கம், நேற்றிரவின் தனிமையில் நிறைவேறியது. நாளை வர இருப்பதுடன் சேர்த்து இதுவரை தமிழாக்கிய ப்ளாத்தின் கவிதைகள் முப்பது - இந்த மாதம் மட்டும் இருபதுக்கும் மேல் இங்கே வந்திருக்கின்றன. இவற்றுக்கான மறுமொழிகள் இரண்டு. இதேபோல ஷார்ல் போதலேர் கவிதைகள் ஐந்தும் பௌல் ஸெலான் கவிதைகள் மூன்றும் வந்திருக்கின்றன. இவற்றுக்கான மறுமொழிகள் மூன்று. அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த வலைப்பக்கத்தில் நடந்த நீண்ட உரையாடல்களை ஒருகணம் நினைத்துக்கொண்டால் தெளிவாகும் விஷயம் இதோ - நிஜ இலக்கியம் தனிமைவாசத்தில் சாத்தியம். - நாகார்ஜுனன்.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
28.4.09
பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
04
(34)
- தொன்மம் இயற்றலின் மரணம் - ஸில்வியா ப்ளாத்
- எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்
- பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
- இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
- அழிவு - ஷார்ல் போதலேர்
- மாயத்தாள் என்னை எரித்தல் - ஸில்வியா ப்ளாத்
- இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்
- இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்
- பேரழிவு இலக்கியத்தின் களம் - ஜே. ஜி. பல்லார்ட் மறை...
- மாறுபடும் சாவியுடன் - பௌல் ஸெலான்
- அழுங்கல் - பௌல் ஸெலான்
- காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
- 18 ஏப்ரல் - ஸில்வியா ப்ளாத்
- துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
- தயை - ஸில்வியா ப்ளாத்
- நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்
- தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்
- இருந்ததும் இவருள் மண் - பௌல் ஸெலான்
- ஆடி - ஸில்வியா ப்ளாத்
- படியிறங்கும் ஈவாவுக்கு - ஸில்வியா ப்ளாத்
- உருவகங்கள் - ஸில்வியா ப்ளாத்
- புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்
- நீர்யாமம் - ஸில்வியா ப்ளாத்
- குழவியற்ற பெண்டிர் - ஸில்வியா ப்ளாத்
- நீயாய் - ஸில்வியா ப்ளாத்
- நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன்
- பர்தா - ஸில்வியா ப்ளாத்
- நரகம் வரும் போகும் - சி. மணிக்கு அஞ்சலி
- தென்புல எழுஞாயிறு - ஸில்வியா ப்ளாத்
- விசாரணை - ஸில்வியா ப்ளாத்
- தூக்குமரத்தார் - ஸில்வியா ப்ளாத்
- தூரத்தில் வெகுதூரத்தில் - ஷார்ல் போதலேர்
- துயரின் ரசவாதம் - ஷார்ல் போதலேர்
- ஊமைக்காயம் - ஸில்வியா ப்ளாத்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
5 கருத்துகள்:
//சுணைக்கும் விண்மீன்கீழ்
மூகாத்து அமர்ந்து
than to sit mute, twitching so
under prickling stars,
என்பது மொழிவிளையாட்டின் உச்சம்!
இந்தக் கவிதையை ஆங்கிலத்திலும்,பின்பு தமிழிலும் படித்து முடித்தேன்.தனியாகப் படித்தனால் ,சில்வியாவின் தனிமை எல்லாரையுமே ஆட்கொண்டுவிடும் கவர்ச்சி புரிந்துவிட்டது.
தொடந்து எழுதுங்கள்.பின்னூட்டம் இல்லாததைப் பற்றி கவலைப்படாமல்.உங்கள் கர்நாடக இசை பதிவுகளையே , என் கட்டுரை/பதிவுகளுக்கு மாதிரியாக வைத்துள்ளேன்.
இதைப்போல நான் முயற்சி செய்தது Wilfred Owen கவிதையை. என் பதிவுகளில் மட்டுமே போட முடிந்தது!
ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com
இதே கவிதையை சற்றே மாற்றிச் செய்திருக்கிறேன். என்னென்ன மாற்றம், கவனித்து வாசிக்கவும்.
The Next War
Out there, we've walked quite friendly up to Death,
Sat down and eaten with him, cool and bland,-
Pardoned his spilling mess-tins in our hand.
We've sniffed the green thick odour of his breath,-
Our eyes wept, but our courage didn't writhe.
He's spat at us with bullets and he's coughed
Sharpnel. We chorussed when he sang aloft;
We whistled while he shaved us with his scythe!
Oh! Death was never enemy of ours!
We laughed at him, we leagued with him, old chum.
No soldier's paid to kick against his powers.
We laughed, knowing that better men would come,
And greater wars; when each proud fighter brags
He wars on Death - for Life; not men - for flag.
அடுத்தும் போர்
நட்புமிக நடந்தோம்
கூற்றுவனிடம்.
அருகமர்ந்து
சுவையற்ற தண்ணுணவும்
அருந்தினோம்.
எம் கையில்
குவளை-உணவும்
அவன் சிந்த
மன்னித்தோம்.
அவன்
அடர்பசிய துர்மூச்சும்
முகர்ந்தோம்.
கண்ணெமதும் கசிந்தாலும்
உழற்றவில்லை எம் வீரம்.
உமிழ்ந்தான் தோட்டாப் பல
எம்மீது
இருமினான் ஊசிக்குண்டும் பல.
தனியே அவன் பாட
இணைந்தோம் குழுவென.
அரிவாளும் கொண்டவன்
எமை மழிக்க
அடித்தோம் சீட்டி!
ஆ! எமக்கவன் எதிரியல்லன்!
பழம் சகா அவனுடன்
பழகிச் சிரித்தோம்.
எம்மில வீரர் எவர்க்கும்
ஊதியமில்லை
அவன் சக்தியதை உதைக்க.
இன்னும் சிரித்தோம்
வீரத்தார் மேலும் வருவாரென,
பெரும்போர் மேலும்பல வரட்டுமென.
ஆங்கே
பெருமித வீரர் எவரும்
பொருதுவதோ
கூற்றுவனுடன் வாழ்வுக்காய்
பிறருடன் கொடிக்காய்.
தனிமைவாசத்திற்தான் சாத்தியமா? தனிமைவாசத்தில் சாத்தியமா?
துல்லியமாக வேறுபடுத்தல் சாத்தியமா?
நல்ல அடர்த்தியான மொழி நடை! இந்த தமிழாக்கம் இன்னும் கூர்மையாக,to the point இருக்கிறது.
நன்றி
ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com
நான் எழுதியதை இன்னொருமுறை கூர்ந்து வாசிக்கவும்... ambiguity இல்லாமல் இலக்கியம் சாத்தியமா..
Post a Comment