ஒருகாலம் போரை நேசித்த
என் ஏக்கமிகு ஆன்மா
நீ.
உன்னில்
அழல் ஏற்றிய
நம்பிக்கை ஒளி
உன்னில்
ஏறவில்லை இனியும்.
அடி யாவும் இடறும்
பழம்பரி
நீ.
வெட்கமின்றிப் படு.
என் இதயமே,
விலகிச்செல்.
கொடூரமாய் உறங்கு.
தோற்றுத் தவறிய என் ஆன்மா
நீ.
பழம் மரகதமெனும்
உனக்கோ
போரினும் சுவையில்லை
காதலினி.
செம்பு ட்ரம்பெட்டின், குழலின்
பாடல்களே,
எனக்கு விடை தாரும்.
சுகமே,
இருள் உருகும் இதயத்தினும்
என்னைச் சஞ்சலப்படுத்தாதே.
இசைபடும் வசந்தம்
இழக்கும் தன் மணமும்.
பெரும்பனியில் விறைக்கும்
பிணமென
துளித்துளியாய்
நேரமென்னைச் சூழும்.
புவிமீதமர்ந்து
யாவும் கண்ட யான்
பின் ஆங்கோர் குடிலில்
தஞ்சம் தேடேனினி.
வரும் பனிப்புயலே,
என்னையும்
நீ வீழ
எடுத்துச்செல்லாயோ?
Morne esprit, autrefois amoureux de la lutte,
L'Espoir, dont l'éperon attisait ton ardeur,
Ne veut plus t'enfourcher! Couche-toi sans pudeur,
Vieux cheval dont le pied à chaque obstacle butte.
Résigne-toi, mon coeur; dors ton sommeil de brute.
Esprit vaincu, fourbu! Pour toi, vieux maraudeur,
L'amour n'a plus de goût, non plus que la dispute;
Adieu donc, chants du cuivre et soupirs de la flûte!
Plaisirs, ne tentez plus un coeur sombre et boudeur!
Le Printemps adorable a perdu son odeur!
Et le Temps m'engloutit minute par minute,
Comme la neige immense un corps pris de roideur;
— Je contemple d'en haut le globe en sa rondeur
Et je n'y cherche plus l'abri d'une cahute.
Avalanche, veux-tu m'emporter dans ta chute?
-- Charles Baudelaire, Le Goût du néant, Fleurs du Mal, 1868.
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
27.4.09
இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(246)
-
►
10
(21)
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 4 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 3 - மரிலின் க்ரிஸ்ல்
- மட்டக்களப்பில் கொங்கைத்தீ - 2 - மரிலின் க்ரிஸ்ல்
- எட்டுத்திக்கும் என்ற வலைத்தளத்தில் நான்
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 2 - ழார் பத்தாய்
- முடிக்க வேண்டிய தொடர்கள்
- பதிவுகளும் நானும் - 8
- எழுத்தை வெட்டும் கல் - 20 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 19 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 18 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 17 - சிவத்தம்பி
- லண்டன் ராணிமேரிப் பல்கலைக்கழகத்தில் என் உரை
- எழுத்தை வெட்டும் கல் - 16 - சி்வத்தம்பி
- நாகார்ஜுனரின் நடுவழிக்காரிகை - 1
- காளான் பல - ஸில்வியா ப்ளாத்
- எழுத்தை வெட்டும் கல் - 15 - சிவத்தம்பி
- மனித உரிமை ஆர்வலர் கே. பாலகோபால் மறைவு
- எழுத்தை வெட்டும் கல் - 14 - சிவத்தம்பி
- நளிர் விமர்சனக்கூட்டம் பற்றி அழகியசிங்கர்
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 2 - வாசு
- நாகார்ஜுனனின் மூன்றாம் உரையாடல் - 1 - வாசு
-
►
08
(35)
- 108 - 14: லா. ச. ராமாமிருதம்
- எழுத்தை வெட்டும் கல் - 13 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 12 - சிவத்தம்பி
- 108: 13 - வசனகவிதை
- தீய்மை தீண்டாத இலக்கியம் இல்லை - 1 - ழார் பத்தாய்
- எழுத்தை வெட்டும் கல் - 11 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 10 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 9 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 8 - சிவத்தம்பி
- ஒளிப்பதிவும் காலமும் - 3 - மணி கௌல்
- விழியின் கதை - 3
- விழியின் கதை - திரை
- ஒளிப்பதிவும் காலமும் - 2 - மணி கௌல்
- வன்னி முகாம்களைத் திறக்க வேண்டிப் பிரச்சாரம்
- ஒளிப்பதிவும் காலமும் - 1 - மணி கௌல்
- எழுத்தை வெட்டும் கல் - 7 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 6 - சிவத்தம்பி
- எழுத்தை வெட்டும் கல் - 5 - சிவத்தம்பி
- காணாக்காட்சி அல்ல என் சினிமா - கோதார்
- 108: 12 - ஹைக்கூ
- 108: 11 - பிற்போக்கு
- 108: 10 - தர்க்க அலசல்
-
▼
04
(34)
- தொன்மம் இயற்றலின் மரணம் - ஸில்வியா ப்ளாத்
- எற்றையும் நிலவும் திங்கள் - ஸில்வியா ப்ளாத்
- பின்னிரவின் தனிமொழி - ஸில்வியா ப்ளாத்
- இன்மையின் சுவை - ஷார்ல் போதலேர்
- அழிவு - ஷார்ல் போதலேர்
- மாயத்தாள் என்னை எரித்தல் - ஸில்வியா ப்ளாத்
- இறந்தோர் - ஸில்வியா ப்ளாத்
- இறுதிச்சொற்கள் - ஸில்வியா ப்ளாத்
- பேரழிவு இலக்கியத்தின் களம் - ஜே. ஜி. பல்லார்ட் மறை...
- மாறுபடும் சாவியுடன் - பௌல் ஸெலான்
- அழுங்கல் - பௌல் ஸெலான்
- காதல் பிசாசின் கண்ணும் நோக்க - ஸில்வியா ப்ளாத்
- 18 ஏப்ரல் - ஸில்வியா ப்ளாத்
- துயருறுதலும் திரிதலும் - ஷார்ல் போதலேர்
- தயை - ஸில்வியா ப்ளாத்
- நீரைக் கடத்தல் - ஸில்வியா ப்ளாத்
- தமிழ்நாட்டில் இலக்கியம் பரவுவது கஷ்டம் - தமிழவன்
- இருந்ததும் இவருள் மண் - பௌல் ஸெலான்
- ஆடி - ஸில்வியா ப்ளாத்
- படியிறங்கும் ஈவாவுக்கு - ஸில்வியா ப்ளாத்
- உருவகங்கள் - ஸில்வியா ப்ளாத்
- புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்
- நீர்யாமம் - ஸில்வியா ப்ளாத்
- குழவியற்ற பெண்டிர் - ஸில்வியா ப்ளாத்
- நீயாய் - ஸில்வியா ப்ளாத்
- நச்சினார்க்கினியர், அண்ணாதுரை, ஷெல்டன் - தமிழவன்
- பர்தா - ஸில்வியா ப்ளாத்
- நரகம் வரும் போகும் - சி. மணிக்கு அஞ்சலி
- தென்புல எழுஞாயிறு - ஸில்வியா ப்ளாத்
- விசாரணை - ஸில்வியா ப்ளாத்
- தூக்குமரத்தார் - ஸில்வியா ப்ளாத்
- தூரத்தில் வெகுதூரத்தில் - ஷார்ல் போதலேர்
- துயரின் ரசவாதம் - ஷார்ல் போதலேர்
- ஊமைக்காயம் - ஸில்வியா ப்ளாத்
-
►
10
(21)
பகுப்பு
- 108 (16)
- ஃபூக்கோ (23)
- ஃப்ரெஞ்சு (175)
- ஃஸென் (3)
- அகம்பென் (4)
- அஞ்சலி (24)
- அணுசக்தி (10)
- அறிவியல் (41)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (17)
- இணையம் (20)
- ஈக்கோ (2)
- ஈழம் (53)
- உரைமொழி (4)
- ஊடகம் (46)
- ஓவியம் (2)
- கடிதம் (26)
- கண்டனம் (1)
- கவிதை (168)
- குறியியல் (7)
- சாம்ஸ்கி (5)
- சிந்தனை (174)
- சிற்பம் (2)
- சீனம் (8)
- சூழலியல் (20)
- செயல் (84)
- ஜெர்மன் (9)
- திரை (25)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (10)
- நடனம் (2)
- நட்பு (17)
- நிகழ்வு (6)
- நேர்காணல் (14)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (7)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (31)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (52)
- லண்டன் (11)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (9)
- வரலாறு (166)
- வரைமொழி (120)
- வானொலி (3)
- விழியின் கதை (9)
- ஸில்வியா (37)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸெர் (2)
- ஸ்பானிஷ் (23)
2 கருத்துகள்:
அன்புள்ள நாகார்ஜுனன்
தமிழ்க்கவிதைகளை, தமிழாக்கத்தில் கவிதைகளை வாசிப்பது எனக்குப் பிடிக்கும். ஆனாலா ரைம்போ, போதலேர் கவிதைகளை நீங்கள் தமிழாக்கியிருப்பதை வாசித்துப் பெரும் அதிருப்தி அடைந்தேன். ஏழாம் நூற்றாண்டு வாசகர்களுக்கல்ல உங்கள் தமிழாக்கம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவில்லை. உங்கள் தமிழாக்கங்களை கோணங்கியின் எழுத்தைப்போலவோ நரிவெரூஉத்தலையார் எழுதிய புறநானூறுப்பாடல் போலவோ உள்ளன. நீங்கள் தமிழாக்கம் செய்யும்போது இன்னும் பொறுப்புடன், கவனத்துடன் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
பழம்பரி, நித்திய தீயவா, ஒருக்கில் வேடமிட்டு, தரித்திரச் சிறுகுரம்பை போன்ற சொற்றொடர்களின் அர்த்தத்தை அறிய விரும்புகிறேன். சங்க இலக்கியத்தை ஃப்ரெஞ்சு மொழியில் ஆக்கினால் அதற்கு ஏழாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சு மொழியையா தேர்வு செய்வீர்கள்.. உங்கள் தமிழாக்கங்களைவிட ரைம்போ, போதலேர் கவிதைகளை எனக்குப் பரிச்சயமற்ற ஃப்ரெஞ்சு மொழியிலேயே வாசித்துவிடலாம் எனத்தோன்றுகிறது..
1. மறுமொழி ஆங்கிலத்தில் எழுதினால் நான் வெளியிடுவதில்லை. நீங்கள் முதல்முறை மறுமொழி எழுதியிருப்பதால் தமிழாக்கி வெளியிட்டிருக்கிறேன். இனி தமிழில் மறுமொழி எழுதினால்தான் வெளியாகும். இடையில் ஆங்கிலச்சொற்கள் வருவது பிரச்னையில்லை.
2. கவிதைகளை நான் தமிழாக்கம் செய்யும் முறை பற்றி நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பலர் ஏற்கனவே கேட்டு அது குறித்து நீண்ட உரையாடல் நடந்திருக்கிறது.. அவற்றுக்கான என் பதிலையும் பின்வரும் பதிவுகளில் வாசிக்கலாம்.
பிச்சிப்பெண்ணின் காதற்பாடல் செங்குத்தாய் யான் உயிரும் எழுத்தும் - ஆர்தர் ரைம்போ நூலின் முன்னுரை
Post a Comment