அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1
ஒரு வழியாக, அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில், தென்னாட்டு இசைக்கான கச்சேரி என்ற வடிவத்தை, அதன் இசைப்பதும் ரசிப்பதுமான வழிமுறைகளை நேரடியாக அறிந்துகொண்டேன். ரசிகர்கள் காலைநீட்டிக்கொண்டு கேட்கலாம். ஓரு மணி நேரம் கழிந்தால், கூர்ந்து கவனிப்பதால் தங்களுக்கு ஏற்படும் அயர்ச்சியைக் கொஞ்ச்ம் தணித்துக்கொள்வதற்காக 'தம்' அடிக்க வெளியில் போய்வரலாம்.
சென்னையில் வெயில் அதிகம். மாலை கடற்கரைக்காற்று வீசும். பகற்பொழுதில் அலைந்துதிரிந்துவரும் ரசிகர்களுக்கு எளிதாகக் கிடைப்பது இந்த இசை, தவிர நண்பர்களையும் சந்திக்கலாம். இசைவாணர்கள் இந்த வாய்ப்பை விடாமல், பாடும்போது ரசிகர்களுடன் ஏற்படும் நேரடித்தொடர்பைக் கச்சேரி நெடுகிலும் கொண்டுசெல்கிறார்கள்... கச்சேரிக்கு இடையில் சில வேளை, முக்கிய அமைச்சர், அதிகாரி, வர்த்தகர், தொழிலதிபர் என்று ஒருவரை மேடையேறிப் பேசவும் செய்கிறார்கள். இவரும் இசையைப் புகழ்ந்து பேசுகிறார். இசைவாணர்கள் இதைப் பொறுத்துக்கொள்கிறார்கள், தவிர்க்க முடியாது என்று நினைத்துக்கொள்கிறார்கள். சிலவேளை பேச்சாளர் நிறுத்துவதில்லை... அப்போது எல்லோரும் கொஞ்சம் கைதட்டி இவரைக் கீழே இறக்குவதும் நடக்கிறது. உடன் நிகழ்ச்சி தொடங்கிவிடுகிறது. சில இசைவாணர்கள் அப்போது கிடைக்கும் நொடிகளில் மூக்குப்பொடி போடுகிறார்கள். மூக்கை உறிஞ்சுகிறார்கள்...
ரசிகர்களுக்கோ இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தாளம் போடத் தொடங்கிவிட்டால், உலகமே மறந்துவிடும் நிலை. தொடையில் ஓங்கிப் போடுகிறார்கள். சப்தம் ஒரு பொருட்டே அல்ல. சில வேளை அடுத்தவர் தொடையை அறைவதும் உண்டு. பெரும்பாலான ரசிகர்கள், வானொலியில் இந்தத் தென்னாட்டு இசையைக் கேட்பவர்கள்தாம். அதிலும் அடிக்கடி பாடப்பெறும் இருபது முப்பது ராகங்கள், அனைவரும் அறிந்தவை. பலர் சிறுபிராயத்தில் இந்த இசையைக் கொஞ்சம் பயின்றவர்கள்கூட. எனவே ரசிகர்கள் தலையாட்டி ரசிப்பதை நிறுத்துவதேயில்லை. இசைவாணர்கள் கற்பனை மிகுந்து சஞ்சரிக்கும்போது ரசிகர்களின் தலையாட்டல் இன்னமும் பலமாவதைப் பார்க்கலாம். பலர் குறிப்பிட்ட பாடகர்களின் விசுவாசமிக்க ரசிகர்கள். தங்கள் ஆதர்சப்பாடகர்கள் பாடுமிடமெல்லாம் நிச்சயம் ஆஜராகிவிடுவார்கள். இதில் விசுவாசம் என்பது ஆழமிக்கது. பழைய பாடகர்கள் பலர் தனித்துவம் கொண்டோர், விசேட பாணியைக் கைக்கொள்வோர், எனவே சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களை ஒத்த வசீகரமும் கொண்டோர் எனலாம்.
அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் எனக்கிருந்த ஆசிரியரைக் கேட்டு, சென்னையில் எனக்கான ஆசிரியரை சிரமமின்றிக் கண்டறிந்தேன். அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் டி. விஸ்வநாதன், பெயர்பெற்ற புல்லாங்குழல் கலைஞர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்றார். எனக்கு வாய்ப்பாட்டு கற்பிக்க ஒப்புக்கொண்டார். எம். நாகேஸ்வர ராவ் அவர்களிடம் வீணை பயில்வதாகவும் ஏற்பாடு. மிக அருமையான இரண்டு ஆசிரியர்களைக் கண்டறிந்ததில் எனக்கு மிகக மகிழ்ச்சி. இவர்கள் என் ஆசிரியர்களாக அமைந்தது என் அதிர்ஷ்டம். சென்னையில் இசைபயில வந்திருந்த மேற்குலக இளைஞர்கள் பிறரைப் பிறகு சந்தித்தபோது, அவர்கள் அவசரமாகச் சிலரை ஆசிரியர்களாகத் தேர்வுசெய்ததையும் அதனால் திருப்தியற்றுப் போனதையும் அறிந்தேன். இன்னொரு ஆசிரியரைத் தேடுவது அவர்களுக்குச் சிரமமாகிவிட்டது.
தென்னாட்டு இசையில் வாய்ப்பாட்டு பயிலும் ஒருவர் குருவிடம் மிக்க மரியாதையுடன் நடக்க வேண்டும். அந்த விசுவாசம், மரியாதை, பயபக்தி பிரத்தியேகமானது. இந்த இசையின் சாரம், விரிவான ஆலாபனை செய்வதில், ஸ்வர வரிசைகளைக் கற்பனைசெய்து பாடுவதில் இருக்கிறது. எனவே பாடுபவர் தம்மளவில் பாட்டைப் பொருள்கொள்ள வேண்டும், மேலும் செழுமைப்படுத்த வேண்டும். இது எதற்கும் முழுமையான ஸ்வர-வரிசைகளை யாரும் எழுதப்போவதில்லை. எனவே இவை அனைத்தையும் குருவிடமிருந்து பிடித்துக்கொண்டால்தான் உண்டு. குருவின் பாணியை அப்படியே ஏற்று பத்துப்பதினைந்து ஆண்டுகள் பாடி, திறன்மிக்க பாடகராக உருவாக வேண்டும், தனிக்கச்சேரி செய்ய வேண்டும். 
என்னைப்பொறுத்தவரை, முதல் ஆறுமாதத்தில் என் சக்தியெல்லாம், கவனமெல்லாம் சிதறிவிட்டன. அடிக்கடி காய்ச்சல், வயிற்றுவலி வேறு. இப்படியே போன மாதங்களில் ஒருவழியாக வீணைப்பயிற்சியைக் கைவிட்டேன். அதில் எனக்கு வருத்தமும் நிறைய.
தென்னாட்டு இசையோ பரந்து விரிந்த ஒன்று. ஏராளமான பாடல்கள், பல மொழிகளில். இவற்றை அநேகமாக அனைத்து இசைவாணர்களும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு ராகத்தின் பன்முக வீச்சை ஒளிரச்செய்வது போன்ற பாடல்கள் இவை. சிலவேளை பல ராகங்களைக் கோர்த்து அமையும் ராகமாலிகை அமைப்பில் பாடல்களும் உண்டு.
தென்னாட்டு இசையைப் பாடவருகிற, வாசிக்கவருகிற ஒருவர், தேர்ந்த கலைஞராவது எப்படி? அதற்கென, மூன்று இணையான பாதைகளில் அவர் பயணிக்க வேண்டும்: முதலில் தன் இசைத்திறனை வளர்த்து நிறையப் பாடல்களைப் பயில வேண்டும்; அடுத்து ராகங்கள் குறித்த தன் அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்; மூன்றாவதாக, இவற்றை ஒருங்கிணைத்து, சிக்கலான தாளச்சொல்கட்டுக்களைத் தன்வயப்படுத்தி அவற்றை அரங்கில் முன்வைத்துப் பாடுகிற, வாசிக்கிற பயிற்சியைப் பெற்றாக வேண்டும்.
இதெல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்றா?
(இன்னும் வரும்)
படங்கள் -
இந்தக்கட்டுரையை எழுதிய மறைந்த ஜான் ஹிக்கின்ஸ்
அவருடைய குரு, மறைந்த டி. விஸ்வநாதன்
பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.
நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
19.11.08
அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவை
-
▼
2009
(159)
-
▼
07
(11)
- இசையும் தொன்மமும் - 1 - க்ளோத் லெவி-ஸ்ட்ராஸ்
- லால்கர் - இடதுசாரிகளின் பதில் என்ன? - தலையங்கம்
- மறைந்த வ.அய்.சுப்பிரமணியன் பற்றி தமிழவன்
- இரவு முகம் மேலே - 4 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 3 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 2 - ஹூலியோ கொர்த்தஸர்
- இரவு முகம் மேலே - 1 - ஹூலியோ கொர்த்தஸர்
- கதையாடல்களின் சுழற்சியும் நிறங்களின் புதிர்மையும் ...
- புலிகளின் பொன் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- பதிவுகளும் நானும் ட்விட்டரும்
- பிறிதான புலி - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
-
►
06
(16)
- மீண்டும் சாரு நிவேதிதாவுக்குக் கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 2
- கனாப்புலிகள் - ஜோர்ஜ் லூயி போர்ஹெ
- இலங்கை அரசை ஆதரிக்கும் க்யூபா, பொலிவியாவுக்குக் கண...
- தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் - கடிதம்
- நெஞ்சத்து அவலம் இலர் - 1
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 2
- நிலவின் உருமாற்றம் - ஸில்வியா ப்ளாத்
- சாவாளும் புலம் அறுக - டிலன் தோமஸ்
- பூத சதுக்கம் புக்கனர் மயங்கி - 1
- எங்கு? - பௌல் ஸெலான்
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு...
- நிலப்பரப்பு - பௌல் ஸெலான்
- குற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்
- கறுப்பாய் - பௌல் ஸெலான்
-
►
05
(17)
- மூடநெய் பெய்து முழங்கை வழிவார - மாதவிக்குட்டிக்கு ...
- இலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போ...
- இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்ட...
- ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்
- மருத்துவர் பினாயக் ஸென் பிணையில் விடுதலை
- சரண்-பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகள் என்னிடம் கோ...
- இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்.....
- உரப்பும் முகடுகள் - ஸில்வியா ப்ளாத்
- கருங்கரட்டுப் பாறைபல - ஸில்வியா ப்ளாத்
- குவலயமயமாதலும் ஈழ இலக்கியமும் - தமிழவன்
- ஒப்பாரி - ஃபெடரிக்கோ கார்ஸியா-லோர்க்கா
- எதிர்-கனவாம் துயர் சூழும் இந்நேரம்
- இன்றைய கொடூரத்திலிருந்து உருவாகும் தமிழ்-உண்மை - த...
- அந்தோனியோ மச்சாதுவின் இறுதிக்கவிதை
- முகாம் என்பது யாது? - 2 - அகம்பென்
- பேரழிவு நாள் - ஸில்வியா ப்ளாத்
- தூதுவர் - ஸில்வியா ப்ளாத்
-
▼
07
(11)
பகுப்பு
- ஃபூக்கோ (17)
- ஃப்ரெஞ்சு (141)
- அகம்பென் (4)
- அஞ்சலி (20)
- அணுசக்தி (9)
- அறிவியல் (39)
- ஆக்கம் (5)
- ஆங்கிலத்தில் (2)
- இசை (13)
- இணையம் (10)
- ஈக்கோ (2)
- ஈழம் (45)
- உரைமொழி (4)
- ஊடகம் (43)
- ஓவியம் (2)
- கடிதம் (25)
- கண்டனம் (1)
- கவிதை (165)
- குறியியல் (2)
- சாம்ஸ்கி (4)
- சிந்தனை (106)
- சிற்பம் (2)
- சீனம் (3)
- சூழலியல் (20)
- செயல் (82)
- ஜெர்மன் (9)
- திரை (20)
- தீராநதியில் (15)
- தெர்ரிதா (1)
- தொன்மம் (5)
- நடனம் (2)
- நட்பு (14)
- நேர்காணல் (9)
- பயணம் (11)
- போதலேர் (39)
- போத்ரியார் (5)
- போர்ஹெ (3)
- மரண தண்டனை (5)
- மலையாளம் (7)
- மொழி (7)
- மோஸ்தர் (2)
- ரைம்போ (51)
- லண்டன் (10)
- லத்தூர் (8)
- லெவி-ஸ்ட்ராஸ் (4)
- வரலாறு (136)
- வரைமொழி (91)
- வானொலி (3)
- விழியின் கதை (6)
- ஸில்வியா (36)
- ஸெர் (9)
- ஸெலான் (9)
- ஸெஸார் (2)
- ஸ்பானிஷ் (15)
0 கருத்துகள்:
Post a Comment