பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

15.4.08

Zero State-ஐ எய்துகிற நேபாள வரலாறு...

நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு.

இப்படி ஒரு செய்தி வரும் என்று பத்தாண்டுகள் முன்பு யாராவது கூறியிருந்தால் கேட்பவர்கள் சிரித்திருப்பார்கள். அத்தகைய வீச்சுடன் மாவோயிஸ கெரில்லாப் போர் நடந்த காலம் அது. இன்று வந்திருப்பது வேறுவிதச் செய்தி. நம் காலகட்ட வரலாறு இத்தகைய கிறுகிறுப்பு மிக்க ஒன்று.

மலைநாடான நேபாளத்தில் நடந்த தேர்தலில் முடிவு தெரிந்த இடங்களில் பாதியில் மாவோயிஸ்ட்கள் வெற்றி. மீதி, இதுவரை ஆண்டு அனுபவித்த நேபாளக் காங்கிரஸ், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி, பிறகு மாதேசி என்ற தெராய் பகுதி மக்களின் கட்சி, சில சிறிய கட்சிகள் ஆகியனவற்றுக்கு.

புதிய அரசியல் சட்டம் செயலில் வர உள்ள இந்த நேரத்தில் மன்னர்-ஆதரவு பெற்ற வலதுசாரி அரசியல்சக்திகள் சுத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. அரசியல்-சட்டத்தில் கழித்துக்கட்டப்பெற்ற முடியாட்சிக்கு அரசியல்ரீதியாகவும் முடிவு ஏற்பட்டிருக்கிறது. மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைகிற சூழல்.

நேபாள அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அண்டை-அயல் சக்திகள் - இந்திய அரசு, சீன அரசு, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் அரசுகள். இவர்களில் யாரும் மாவோயிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் அளவு இத்தனை கணிசமான வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தோன்றுகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் வழக்கம் போல நேபாளக் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மறைமுகமான ஆதரவு, மாதேசிக் கட்சிக்கும் அத்தகைய ஆதரவு என்ற நிலைப்பாடே இருந்தது.

நேபாளத் தேர்தல் முடிவு, தெற்காசியாவில் பல தரப்புக்கும் புதிய சமிக்ஞைகளைத் தரவல்லது என்றே நினைக்கிறேன் - ஒருபுறம் இந்திய அரசு, பாரதீய ஜனதா முதல் இடதுசாரிக் கட்சிகள், மாவோயிஸ்ட் சக்திகள் ஆகியோர், மறுபுறம் கஷ்மீர், இலங்கை, இந்தியப்பரப்பின் வடகிழக்கு மாநிலங்கள் என ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகிற சக்திகள், அங்குள்ள அரசு-அமைப்புகள் என எல்லோரும் இந்தப் புதிய சமிக்ஞைகளைக் காணப் பழகியாக வேண்டும். அதற்கு நாள் பிடிக்கலாம்.

வரலாற்றின் இத்தகைய நிலையைத் திருப்புமுனை, புதிய சகாப்தம் என்றெல்லாம் வர்ணிப்பது உண்டு. என்னைப் பொறுத்தவரை இவை clichés! தவிர, அரசியல்-நிகழ்வுகளை விஞ்ஞானத்தின் மொழியைக் கொண்டும் விஞ்ஞான-உலகைக் கலை-இலக்கியப் பிரச்னைப்பாடுகளைக் கொண்டு அணுகவும் விரும்புபவன் நான்.

இதை வைத்துப் பார்த்தால், நேபாளச்சூழலை Zero-State நிலை எனலாம். அதாவது, எல்லாமே மீண்டும் தொடங்கும் நிலை. இனியான வரலாறு வேறு, இதுவரையான வரலாறும் வேறு.

பகுப்பு - சிந்தனை, வரலாறு

3 கருத்துகள்:

கானகம் said...

It is an unfortunate situation for the country which suffered a lot by Monarch. Now they will suffer under Communists. Already the sufferings have been started in Nepal. All the ex cadres are behaving like a small govt in rural areas and collecting money from Non resident Nepalis families. Two of our company labors have been forced to sell the land and to migrate to kathmandu area, because the maoists are coming again for collection when they exhausted the money. Nepalis will pay the Price for their foolish decision. Now they have slipped from frying pan to fire.

நாகார்ஜுனன் said...

கானகம்

இது முதல்முறை என்பதால் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியது வெளியாகிறது. இனி தமிழில் இல்லை என்றால் வெளியாகாது. நடுவில் ஆங்கில வார்த்தைகள் வருவதில் பிரச்னையில்லை.

நாகார்ஜுனன்

கானகம் said...

தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி அய்யா. இனிமேல் கவனமாய் இருப்பேன்.

அன்புடன், ஜெயக்குமார்

பதிந்தவை