பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

1.5.08

நாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 1

உலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.

அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.

திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய எதிர்மறை-அதிகாரம். மிளிர்ந்தது கற்பனை.

அதன் கதையைப் பேசும் சக்தி படைப்புக்களமாய், எதிர்க்கலாச்சாரமாய் விளங்கிய அன்றைய சுவரொட்டிகளுக்கே உரித்தானது.

அவற்றில் சிலதை இங்கே காணலாம்.

முகமூடி ஊர்வலம்!


ஜெனரல் மோட்டாருக்கு
இரங்கற்பா

அதிகாரம்
கற்பனைக்கே!








ஆயிரத்தோரு இரவுகள்,
தெருவில் பதிக்க!



எதுவும்
நடக்கும்
தெருவில்!


கற்பனையை
நொறுக்காதே!

















வேண்டாம் நுகர்-கலாச்சாரம்!

0 கருத்துகள்:

பதிந்தவை