பதிவில் உள்ளனவற்றைச் சிற்றிதழ்-பேரிதழ்களில் வெளியிட விரும்புவோர் - நெடுநாள் நண்பர் எனினும் - முன்-அனுமதி பெற்றாக வேண்டும்.

நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்

21.4.08

இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 2

இணையத்தில் உலக இலக்கிய, அறிவியல் நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோருக்கு சுவாரசியமான தளங்கள் பல உண்டு. எனக்குப் பயன்தரும் சிலதைத் தருகிறேன்.

Athena - ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில நூல்கள். தலைப்பு, ஆசிரியர், மொழி எதைவைத்தும் தேடலாம்.

Bartleby - செவ்வியல் ஆங்கில இலக்கியம், தத்துவம் மற்றும், அறிவியல் பிற நூல்கள் தேடி வாசிக்கலாம். சீன, ஜப்பானிய நூல்களும் உண்டு.

EServer - வாஷிங்கடன் பல்கலைக்கழகம் சார்பான இணையதளம். கலை இலக்கியம், தத்துவம் தொடர்பான சிற்றிதழ்கள், சஞ்சிகைக்ள் நிறைய.

Internet Public Library - சுமார் 15,000 புத்தகங்கள், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியப் புத்தகங்கள்.

WESSWEB - ஆங்கிலம் தவிர பிற ஐரோப்பிய மொழிகளில் புத்தகங்கள்.

Bibliomania - உலகின் செவ்வியல் இலக்கிய நூல்கள், பெரும்பாலும் ஆங்கில மொழியாக்கத்தில் தேடி அடையலாம்.

Philosophy Alex Catalogue - தத்துவ நூல்களின் வரிசை.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்! ஆக, நிறைய வாசிக்கலாம். நிறைவாக் எழுதலாம்.

இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 1

1 கருத்துகள்:

முருகேஷ் said...

நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் பயனுள்ளவை. நன்றி.
நான் அவ்வப்போது படிக்கும் தளங்கள் சிலவற்றையும் கீழே கொடுத்துள்ளேன்.

http://aldaily.com
http://ted.com
http://dli.iiit.ac.in/
http://www.edge.org/
http://www.chomsky.info/

அன்புடன்
முருகேஷ்

பதிந்தவை