பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோர் இணையத்தில் மதுரைத்திட்டம் தளத்தில் சென்று வாசிக்கலாம் என்பது தெரிந்த செய்தி.
அதேபோல நூலகம் தளம், பல்வேறு ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து வருகிறது. படித்தால் ஒரு யுகம் கழிந்தது போன்ற உணர்வு மிகுகிறது!
இவ்வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் இணையத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலக தளத்திலும் நல்ல புத்தகங்களை வாசிக்க முடிகிறது. ஆனால் அதிகம் முயன்று, பதிவுசெய்து, தேட வேண்டும்.
இந்த விதத்தில் முன்னோடியாக இருக்கும் சில தளங்கள் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இந்தப் பட்டியல்.
ப்ராஜெக்ட் குட்டன்பர்க் (Project Gutenberg) - ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் இருபதாயிரம் புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கி வாசிக்கலாம். ஃப்ரெஞ்சு மொழி படிக்கும்போது நிறைய புத்தகங்களை வாசிக்க உதவியாக இருந்த தளம் இது. இன்னொரு விஷயம் - இங்கே உள்ள புத்தகங்களில் தெற்காசிய மொழிப் புத்தகங்கள் காணப்படவில்லை. வடமொழியில் ஆங்கிலத்தில் எழுதிய விஷ்ணு சஹஸ்ரநாமம் தவிர வேறேதும் இல்லை, தமிழ் உள்ளிட்ட வேறு தெற்காசிய மொழிகள் இல்லை.
இன்னொரு முக்கிய தளம் - ஐ-பிப்லியோ. புத்தகங்களையும் புத்தகங்கள் தவிர ஏகப்பட்ட விஷயங்களையும் கண்டறியலாம்.
அதே போல இன்னொரு தளம் மெமோவேர். இங்கும் இலக்கியமும் இலக்கியம் தவிர்த்த பலதுறைப் புத்தகங்களை எளிதாகத் தேடலாம்.